அமைதி தரும் ஆரோக்கியம்
அமைதி, மவுனம் இவை இரண்டும் உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என்று விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. சத்தம் அதுவும் 30 டெசிபலுக்கு மேல் இருந்தால்.
* ரத்த கொதிப்பு
* மன உளைச்சல்
* மன அழுத்தம்
ஆகியவை ஏற்படுகின்றது.
அமைதி தரும் நன்மைகள் :
உடல் வலி, மன வலியினை நீக்கி விடும். உயர் சக்திகளுடன் தொடர்பு கொள்ளச் செய்யும்.
நம்பிக்கை தரும். தன்னைத் தானே நம்ப வைக்கும். உங்கள் உள் குரலினை கேட்க வைக்கும். பல புதிர்களுக்கு விடை உங்கள் மவுனம் கொடுக்கும். உங்களுக்கு நீங்களே தலைவராவீர்கள்.
அமைதியும், மவுனமும் உடலுக்கு ஆழ்ந்த ஓய்வு தரும். உடலில் இருக்கும் தேவையில்லாத வேகம், படபடப்பு நீங்கும். இந்த ஓய்விற்காக ஊட்டி, சிம்லா என போகத் தேவையில்லை.
பக்குவம் கொண்டு வரும். மனம் அலைபாயாத நிலையை கொண்டு வரும்.
உங்கள் உள்ளுணர்வோடு இணைத்து உங்களை வாழ வைக்கும்.
பிற விஷயங்களை கேட்கும் ஆற்றலை அதிகரிக்கும்.
ரத்தக் கொதிப்பினை குறைக்கும். ரத்தக் கொதிப்பு இருப்பவர்களை நீங்கள் கவனித்தால் சிறிய விஷயத்தில் அதிக படபடப்பு உடையவராக இருப்பார்கள்.
வாழ்க்கையின் சவால்களை திறமையாய் சமாளிக்க வைக்கும்.
அமைதியாய் இருப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* மன மகிழ்ச்சி தரும்.
* மூளையின் செயல் திறன் கூடும்.
* கவனிக்கும் திறன் கூடும்.
* உடல் சக்தி கூடும். மனோ சக்தி கூடும்.
* தினம் 30 நிமிடம் அமைதியாய் இருப்பது ஒருவரது ஆயுளை நீட்டிக்கும்.
* ஒருவரின் மன உளைச்சலை நீக்கும்.
* ரத்த நாளங்கள் இறுகாது, அடைபடாது.
எந்த விதமான வேலை செய்பவர்களும் அதாவது தொழிலாளி முதல் முதலாளி வரை காதில் செல்போன் வைத்தபடிதான் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மவுனம், அமைதி என்பது மிக மிகத் தேவையானதாக இருக்கின்றது. இப்படி பல பிரிவுகளில் இருப்பவர்களைக் கொண்டு தினம் சிறிது நேரம் அமைதியாய் இருக்கச் செய்து அவர்களை ஆய்வு செய்த பொழுது
* விடாது தலைதெறிக்க ஓடுபவர்கள் போல் வேலை செய்த இவர்களின் உடல் நலம் தேறி இருந்தது. இவர்கள் செய்யும் வேலைகளின் பலன், லாபம் கூடி இருந்தது.
* பல விஞ்ஞானிகளின் மூளை மேலும் கூர்மையாய் இருந்தது.
* தொடர் வேலை, பேச்சு இவற்றின் காரணமாக மனச் சோர்வுடன் இவர்கள் இருந்ததால் இவர்கள் ஆற்றும் பணிகளில் பல தொந்தரவுகள் இருந்தன. இவர்களது அன்றாட 30 நிமிட அமைதி இவர்களின் மனச் சோர்வினை வெகுவாய் குறைத்திருந்தது. பிரச்சினைகள் அநேகமாய் தவிர்க்கப்பட்டு இருந்தது.
* அவர்களின் ஞாபகத் திறன் வெகுவாய் கூடியிருந்தது.
* மன உறுதி வெகுவாய் கூடி இருந்தது.
* சுய விழிப்புணர்வு அதிகமாய் இருந்தது.
* அவர்களது பிரச்சினைகளை மிக எளிதாய் அவர்களே தீர்த்துக் கொண்டனர்.
* அவர்களை அவர்களே மகிழ்ச்சியாய் வைத்துக் கொண்டனர்.
* தனிமை வலிமையானது என்று அனைவருமே கூறினர்.
* தன்னைவிட திறமை குறைந்த உதவியாளர்களை கையாளும் திறனை அறிந்திருந்தனர்.
* தேவையில்லாத ஆசைகள் குறிப்பாக மது, புகை இப்பழக்கங்கள் மிகவும் கட்டுப்பட்டதாகக் கூறினர்.
அதிகம் பேசுவதே உடலுக்குத் தீங்கு அதிலும் இந்த செல்போன் வந்த பிறகு பேச்சுக்கும், சத்தத்திற்கும் அளவே இல்லை. தேவையோ இல்லையோ ஓயாது செல்போனில் பேசுவதும், எழுதுவதும், பார்ப்பதும், படிப்பதும், விளையாடுவதும் என தன் வாழ்நாளையே செல்போனில் செலவழிக்கும் சமுதாயம் இன்று உருவாகி விட்டது. இதன் பாதிப்புகளை உணர்ந்தால் இனியாவது சமுதாயம் மாற முயலும் என்ற நம்பிக்கையில் செல்போனால் ஏற்படும் பாதிப்புகளை எழுதுகிறேன்.
* நீங்கள் செல்போன் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றீர்கள். ஆனால் செல்போன் உங்களை எளிதாய் தன் அடிமை ஆக்கி விடுகின்றது.
* பல விஷயங்களுக்கு நாம் செல்போனையே பயன்படுத்துகின்றோம். தொடர்ந்து நம் கைகள் செல்போனை உபயோகிப்பதால் கிருமிகளின் தாக்குதல் செல்போனில் அதிகமாக இருக்கின்றது. வைரஸ், பாக்டீரியா கிருமிகள் 20 சதவீதம் & 30 சதவீதம் செல்போனின் மூலம் கைகளில் பரவுகின்றது.
* விடாது செல்போனில் படிப்பது எழுதுவது என அதன் பளீர் வெளிச்சத்தில் நம் கண்களை அதில் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். இதனால் கண் பாதிப்புகள் அதிகரிக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
* வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் என விடாது செல்போனை பயன்படுத்துவதால் மன உளைச்சல் அதிகரிக்கின்றதாம்.
* கர்ப்பிணி பெண்கள் அதிக நேரம் விடாது செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதன் விளைவுகளை நான் எழுதி அச்சுறுத்த விரும்பவில்லை. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து தினம் 2&3 மணி நேரம் போனில் பேசுவதனை தவிர்க்கவும்.
* இதிலிருந்து வரும் கதிர் வீச்சு நரம்பு மண்டலத்தினை பாதிக்கின்றது.
* இருதய துடிப்பில் மாற்றம், இருதய நோய், சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவு இவை செல்போன் கதிர் வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்.
* காது கேளாமை, புற்று நோய் இவையும் மிக அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாம் பேச்சு, டி.வி., ரேடியோ, வாகன போக்குவரத்து வாகனங்கள் இவைகளால் ஏற்படும் அதிக சத்தங்களுக்கு நாம் பழகி விட்டோம்.
* ஃபிரிஜ்ஜில் இருந்து வரும் சத்தத்தின் டெசிபல் 45
* சாதாரண பேச்சின் சத்தமே 60 டெசிபல்
* வாகன சத்தம் 85 டெசிபல்
* மோட்டார் சைக்கிள் 95 டெசிபல்
* எம்பி3 ப்ளேயர் 105 டெசிபல்
* சைரன் 120 டெசிபல்
* பட்டாசுகள் 150 டெசிமபக்கு மேல்
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸ்காரர்களே அதிக சத்தத்தின் பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வு கூறுகின்றது. இவர்களுக்கும், சத்தத்திலேயே அதிகம் இருப்பவர்களுக்கும்
மனச் சோர்வு 50 சதவீதம் ஏற்படுகின்றது.
மன உளைச்சல் 65 சதவீதம் ஏற்படுகின்றது.
எரிச்சல் 54 சதவீதம் ஏற்படுகின்றது.
மற்றவர்களோடு ஏதாவது சண்டை 71 சதவீதம் ஏற்படுகின்றது.
பொறுமையின்றி குறுக்கே பேசுவது 56 சதவீதம் ஏற்படுகின்றது.
ரத்த கொதிப்பு 87 சதவீதம் ஏற்படுகின்றது.
உடல் தசைகளின் டென்ஷன் 64 சதவீதம் ஏற்படுகின்றது.
அசதி 45 சதவீதம் ஏற்படுகின்றது.
செயல்பாட்டு குறைவு 55 சதவீதம் ஏற்படுகின்றது.
கவன மின்மை 99 சதவீதம் ஏற்படுகின்றது.
காது கேளாமை 69 சதவீதம் ஏற்படுகின்றது.
தலைவலி 74 சதவீதம் ஏற்படுகின்றது.
இருதய பாதிப்பு 71 சதவீதம் ஏற்படுகின்றது.
எனவே பேச்சு, செயல், மனம் இவற்றில் அமைதியினை கொண்டு வருவது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உடல் ஆரோக்கியம், உடல் நலம் அளிக்க வல்லது என்பதனை உணருங்கள். மவுனம், அமைதி என்பது ஒருவரின் மிகப் பெரிய பலம்.
* அமைதியாக இருக்கும் சிலரைக் கொண்டே மனநிறைவினைக் கொள்ளச் செய்யும்.
* தொண தொண என்று பேசி கேட்பவர் காதில் ரத்தம் வடியச் செய்யாது, அளவான சில வார்த்தைகள் பேசி கருத்தினை புரிய வைத்தால் திறமை அதிகரிக்கும்.
* அமைதி பிறரை மதிக்கச் செய்யும்.
* அமைதி பிறர் பேசுவதை உன்னிப்பாய் கவனிக்கச் செய்யும்.
* அமைதி இயற்கையை கவனிக்கச் செய்யும்.
* மனம் ஒரு இடம், உடல் ஒரு இடம் என்றிருப்போர் அநேகர். அமைதி அவரவர் மனம் அவரவர் உடலுள் இருக்கும் ஒழுக்கத்தினை ஏற்படுத்தும்.
* அமைதி ஒருவரின் மனித நேயத்தினைக் கூட்டும்.
* அமைதி மனிதனின் கடுமையான காலங்களை எளிதாய் கடக்கச் செய்யும்.
* அமைதி அன்பின் எளிமையினையும், வலிமையினையும் உணர்த்தும்.
* அமைதி தைரியத்தினைத் தரும். பயம் என்பதே இராது.
* அமைதி செய்யும் எதிலும் கலக்கமில்லாத முழு நம்பிக்கையினைத் தரும்.
* அமைதி ஒருவரை நேர்மையானவராக்கும்.
* அமைதி ஒருவரை உண்மையுடையவராக்கும்.
* அமைதி ஒருவரை எளிமையானவராக்கும்.
* அமைதியுடையவர் தனக்கு வாழ்வில் கிடைத்த நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறும் குணம் உடையவராக இருப்பார்.
இத்தனை பெருமைகள் பெற்ற அமைதி, உங்களுக்கு வேண்டாமா?