பக்கவாதம் என்றால் என்ன?
04 Nov,2015
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அல்லது மூளைக்குள் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது கசிவு ஏற்படும் நிலை. இந்த ரத்தக் குழாய்கள் மூலம்தான் மூளைக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.
ஆண்களைப்போலவே பெண்களுக்கும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், இது பற்றிய விழிப்புஉணர்வு குறைவாக உள்ளது. ஆண்களைப்போல உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய் பாதிப்பு, பெண்களுக்கும் அதிகம் உள்ளதால், இவர்களுக்குப் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, இது பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு உலகப் பக்கவாத விழிப்புஉணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.