அர்த்த மச்சேந்திர ஆசனம்
06 Oct,2015
பொருள்:
மச்சேந்திரர் என்ற மாமுனிவர், இந்த ஆசனத்தை செய்து, பலன் அடைந்ததால், அவருடைய பெயரே இவ்வாசனத்துக்கு நிலைபெற்றது.
செய்முறை:
1. இரண்டு குதிகால்களின் மேல் உட்கார வேண்டும்
2. பின், மெதுவாக வலது காலை, இடது கால் தொடைப் பகுதியை ஒட்டியவாறு வைக்க வேண்டும்
3. வலது கை, உடம்பிற்கு பின்னால், உள்ளங்கை கீழே படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்
4. அதன்பின், இடது கையை, வலது காலின் வெளிப் பக்கம் கொண்டு வந்து வலது கணுக்காலை பிடிக்க வேண்டும்
5. மெதுவாக வலது பக்கம் திரும்பி, பார்க்க வேண்டும்
6. ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வர வேண்டும். இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
பயன்கள்:
1. இடுப்பு சதை குறையும்
2. ‘ப்ராஸ்ட்ரேட்’ சுரப்பி, நன்கு வேலை செய்ய உதவும்
3. ‘இன்சுலின்’ சுரந்து,
உடம்பில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
4. வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சரியாகும்
5. சிறுநீரகம், நன்கு வேலை செய்ய உதவும்
6. முதுகு வலி குறையும்.