அல்ஸிமர் எனும் ஞாபக மறதி நோய்
உலகம் தோன்றிய காலம் முதல் பலவகையான நோய்களுக்கு மனிதன் பலியாகிக் கொண்டிருக்கிறான்.அத்தகைய நோய்களில் இதுவும் ஒன்று.
* மூளையின் இயக்கத்தை பல வகையில் பாதிக்கும் இந் நோயை மூளை மழுங்கு நோய் என்றும் கொள்ளலாம்.
* ஞாபக மறதி நோய் அல்லது நினைவு திறன் இழப்பு நோய் என்றும் சொல்லலாம்.
* மூளையின் செயல்பாட்டை படிப்படியாக மழுங்கடிக்கும்.
* அல்ஸிமர் நோய் படிப்படியாக அதிகரிக்க கூடிய,அதே சமயத்தில் பழைய நிலைக்கு மீள முடியாததுமான குணத்தை உடையது.[It is a degenerative disorder].
* நோயின் பாதிப்பு அதிகரிக்கும் பொழுதுமூளையில் பல இடத்தில் உள்ள செல் சுருங்கி அழிந்துவிடும்.[destroys the brain cell].இதனால் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது.
* இந்நோய் வயோதிகத்தின் காரணமாகவும் ,மரபுரீதியாகவும்,தலையில் அடிபடுதல் போன்றவை காரணமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
* ஆண்களைவிட பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
* வாழ்க்கை முறையிலுள்ள மாற்றம் காரணமாகவும் இந் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.
* உயர் ரத்த அழுத்தம்,அதிகப்படியான கொழுப்பு சத்து,உணவு முறை உட்பட பல விஷயங்கள் இந் நோய்க்கு காரணிகளாக உள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
* இந்நோயை மருந்துகளின் மூலம் ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தலாம்.ஆனால் நிரந்திர தீர்வு கிடையாது.
ஆரோக்கியமான உணவுடன்,தொடர்ந்த உடற்பயிற்சி,யோகா,தியானம் ,புத்தகம் படித்தல்,சுடோகுபயிற்சி,வலதுகை பழக்கம் உள்ளவர்கள் இடதுகையிலும்,இடக்கை பழக்கம் உள்ளவர்கள் வலது கையிலும் செயல்களை செய்தால் மூளைக்கு பலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.