கண்கள்தானம் செய்த உங்கள் உறவுகள் இறந்து விட்டால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
ஒருவர் கண்கள் தானம் செய்வதன் மூலம் இருவர் கண்களை பெற முடியும். பெற்று இந்த பூவுலகின் அழகை
கண்டு ரசிக்கமுடியும். மேலும் இறந்தவர்கள், கண்கள் மூலமாக இன்னும் இந்த பூவுலகை ரசித்துக் கொண்டே இருக்க நமக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும்
1. கண்தானம் செய்தவர் இறந்துவிட்டால், உடனடியாக அவரது கண் இமைகளை மூடி விட வேண்டும்.
2. இறந்தவர் இருக்கும் அறையில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
3. இறந்தவரின் தலைக்கு கீழே ஒரு தலையணை கொடுத்து அவரது தலை சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் வேண்டும்.
4.. கண்தானம் செய்தவர் இறந்த 4 முதல்6 மணிநேரத்துக்குள் கண் தானம் செய்ய வேண்டும். ஆகவே தாமதிக்கா மல் அருகில் இருக்கும் கண்வங்கிக்கு உடனடியாக தொடர்புகொண்டு விரை வாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் விலாசம் மற்றும் வழியி னை தெரிவிக்க வேண்டும்.
5.கண்களை பெற்றுக்கொள்ளவரும் கண்வங்கியில்வரும் மருத்துவர்கள் , 30 நிமிடங்களில் அவர்களது வேலையை முடித்து சென்றுவிடுவர் ஆக வே இறுதிச்சடங்குகள் எதுவும் பாதிக்குமோ என்ற அச்சமோ தயக்கமோ தேவையில்லை.
6. கண்களை தானமாக பெற வரும் மருத்துவ ர்கள் அரசு அங்கீகாரம் பெற்றவரா என்பதை நன்கு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் மட்டுமே இறந்தவரிடம் இருந்து கண் விழிகளை எடுக்க முடியும்.
7. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத் துவ மனைக்கோ வந்து பெற்றுக் கொள்ளும்.
8. இறந்தவர் உடலில் இருந்து சிறிதளவு ரத்த மாதிரி எடுப்பார்கள் இது எதற்கு என்றால், இறந்தவர் நோய் தொற்று நோய்களால் பாதிக் கப்பட்டுள்ளாரா என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
9. இறந்தவரின் கண்களை பெற்றுக்கொள்ள மருத்துவர்கள் வரும்போது, கண்டிப்பாக இறந்தவரின் மகனோ அல்லது மகளோ அல்லது தாயோ அல் லது தந்தையோ அருகில்இருத்தல் அவசியம் . ஏனென்றால், சாட்சி கையெழுத்து போட இர த்த சம்பந்த உறவுகள் தேவை இருவர் தேவை என்ப தால்தான். இவர்கள் இருந்தால் மட்டும் கண்தானம்செய்யமுடியும். ஆகவே அந்த இரு வரை மருத்துவர்கள் வந்துபோகும்வரை வேறு எங்கும் செல்லாமல் இருத்தல் வேண் டும்