இரு சக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாகப் பிரித்து மெருகேற்றுவதைப்போல, மனித உடலின் எலும்புகளையும் தசைகளையும் தனித்தனியே பிரித்து விற்பனைப் பண்டமாக்கியிருக்கிறது நவீன மருத்துவ உலகம். டி.வி-யை ஒரு மணி நேரம் பார்த்தால், உயரமாக வளர்வதற்கு ஒரு பானம், ஊட்டச்சத்துக்கு ஒரு பானம், ஞாபகசக்திக்கு ஒரு பவுடர், எலும்புகளின் உறுதிக்கு இன்னொரு பவுடர் என ஆர்ப்பரிக்கின்றன விளம்பரங்கள். ஆனால், நம் அம்மா – அப்பாக்களும், அதற்கு முந்தைய தலைமுறையினரும் உடம்பின் ஒவ்வோர் உறுப்புக்கும் இப்படியா தனித்தனியாக போஷாக்கு புகட்டினார்கள்? இல்லையே! அவர்கள், அந்தந்த வட்டாரத்தில் விளைந்த சத்து மிகுந்த உணவுகளை உண்டார்கள்; இப்போதுபோல, வளர்வதற்கு 21 ஊட்டச் சத்துக்கள் அடங்கிய சத்து மாவு எதையும் தேடி ஓடவில்லை; வயதுவாரியாக உணவுகளைப் பிரிக்கவும் இல்லை.
உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாடுபவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்பவர்கள், எடை குறைக்க/அதிகரிக்க விரும்புவோர் என, சகல தரப்பினருக்கும் விதவிதமான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஷிuஜீஜீறீமீனீமீஸீt திஷீஷீபீs எனப்படும் இந்த வகையான துணை உணவுகள், விளம்பர தம்பட்டம் அடிக்கின்றன. ஆனால், உண்மை நிலவரம் என்ன?
குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்கு மேல், தாய்ப்பால் மட்டுமே போதாது; மற்ற உணவும் கொடுக்கப்பட வேண்டும். குழந்தை என்பதால், அதன் செரிமான உறுப்புகளுக்கு ஏற்ற உணவு தர வேண்டும். அப்படி எந்த உணவு தர வேண்டும் என்பது, நமது குடும்பங்களில் காலங்காலமாக பழக்கத்தில் இருந்துவருவதுதான். ஆனால் நவீன காலமானது, நம்மிடம் இருந்து நேரத்தைப் பறித்துக்கொண்டுவிட்டது. குழந்தையைக் கொஞ்சுவதற்கே நேரம் ஒதுக்கவேண்டிய சூழ்நிலையில், குழந்தைகளுக்கான உணவுத் தயாரிப்புக்கு எங்கு இருந்து நேரம் ஒதுக்க? இதனால்தான், ஒருவித குற்றவுணர்வில் இருக்கும் பெற்றோர்களின் மனம், இயல்பாகவே விளம்பரங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படும் கவர்ச்சிகர வாக்கியங்களால் ஈர்க்கப்படுகிறது. டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் துணை உணவுகளை வாங்குகிறார்கள்.
அதுபோன்ற டப்பா உணவுகளில், பெரும்பாலும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கிறது; மற்ற சத்துக்கள், மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் இந்தத் துணை உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகள் கொழுக்மொழுக் என இருப்பார்கள். ஆனால், அது புறத்தோற்றத்தில் மட்டும்தான். உடம்பின் உள்ளுறுப்புகளுக்கு அந்த உணவுகளால் எந்தப் பயனும் இல்லை.
கண்ணுக்குத் தெரியாத உள்ளுறுப்புகள் உறுதியாக வளர்வதுதான் ஒரு குழந்தையின் ஆயுளுக்கு ஆரோக்கியம் சேர்க்கும். துணை உணவுகள் அதற்கு உதவுவது இல்லை என்பதுடன், எதிர்மறை விளைவையும் உண்டாக்குகின்றன. பெண் குழந்தைகளுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. இதுவே கேழ்வரகை ஊறவைத்து, முளைகட்டிய பிறகு, அரைத்து, பால் எடுத்து, நீர் சேர்த்து, காய்ச்சிக் கொடுத்துப் பாருங்கள்ஸ அது எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாமல், குழந்தையின் புற மற்றும் அக ஆரோக்கியத்தை உறுதிசெய்யும். இது சமச்சீரான உணவாக இருப்பதுடன், குழந்தைப் பருவத்தில் அவசியம் தேவைப்படும் சுண்ணாம்புச்சத்தையும் நிறைவாக அளிக்கும். அதோடு எலும்பு வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான ரத்த அணுக்கள் உற்பத்திக்கும் உதவிசெய்கிறது. மாதங்கள் செல்லச் செல்ல, நெல்லரிசிக் கஞ்சி, சாமைக் கஞ்சி, ஆவியில் வேகவைத்த வாழைப்பழம் என, குழந்தையின் வளர்ச்சியைத் தூண்டும் உணவு வகைகளைக் கொடுக்கலாம்.
கருவுற்ற தாய்க்கு வழக்கத்தைவிட அதிக ஊட்டச்சத்து தேவைப்படும். இதற்காக துணை உணவுகளை நாடாமல், இரும்புச்சத்துக்காக சிவப்பு முளைக்கீரை, சிவப்புக்கொடி பசலை, பச்சைக்கொடி பசலை, குத்துப்பசலை, பாலக்கீரை, வாரம் இருமுறை ஒரு துண்டு பழுத்த பப்பாளி, மாதுளை, சிவப்பு கொய்யா எனச் சாப்பிடலாம். இது, வயிற்றில் வளரும் குழந்தையின் ரத்த நாளங்களை வலுவாக்குகிறது. ஃபோலிக் ஆசிட் உள்ள உணவுகளான ஆரஞ்சு, முட்டை, முழு தானியங்கள், சுண்டல், நிலக்கடலை போன்றவற்றை உண்ணும்போது இந்த வகையான அமிலக் குறைபாட்டினால் வரும் ழிஜிஞி (ழிமீuக்ஷீணீறீ ஜிuதீமீ ஞிமீயீமீநீts) எனப்படும் நரம்புக் குறைபாடு, குறைப் பிரசவம், கருச்சிதைவு போன்றவை தவிர்க்கப்படும்.
குழந்தை பிறந்ததும் ‘தாய்ப்பால் அதிகமாகும்’ எனக் கொடுக்கப்படும் துணை உணவுகளிலும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. தாய்ப்பால் அதிகமாக ஊறினாலும், உடம்பில் வேறு கெட்ட விளைவுகளை அது உருவாக்கலாம். இதைத் தவிர்த்து பாலூட்டும் தாய்மார்கள் கசப்பான உணவுகளை எடுத்துக்கொண்டாலே, போதுமான பால் குழந்தைக்குக் கிடைக்கும்.
துணை உணவுகளைப் பற்றி ஏன் இவ்வளவு தீவிரமாக விவாதிக்கவேண்டியிருக்கிறது என்றால், அவை எதுவும் செடியில் இயற்கையாகப் பூத்து, காய்த்து, கனிவது அல்ல. பல்வேறு வேதிப்பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு, நிறமிகள், மணமூட்டிகள் சேர்த்து, அவை உருவாக்கப்படுகின்றன. காய்கனிகளில் இருந்து தேவையான சத்துக்கள் கிடைக்கும்போது, அதில் ‘பைட்டோ கெமிக்கல்’ எனும் கண்ணுக்குத் தெரியாத சத்தும் இருக்கிறது. அது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்து, சத்துக்களைக் கிரகிக்க உதவும். ஆனால், டப்பா உணவுகளில் பைட்டோ கெமிக்கல்கள் இல்லை. ‘போஷாக்கு’ என்ற பெயரில் அந்த டப்பா உணவுகள் வெறும் கழிவுகளாக நம் உடலைவிட்டு வெளியேறுகின்றன.
இன்னொரு பக்கம், ‘மூன்றே வாரங்களில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்; கூட்டலாம்ஸ வாருங்கள்’ என, தொலைபேசியில் அழைக்கிறார்கள். 10, 20 ஆண்டுகளாக நம் வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்பட்ட உடல் பருமனை, மூன்றே வாரங்களில் குறைப்பது எப்படிச் சாத்தியம்? இப்படிப்பட்ட எடை குறைக்கும் டப்பா உணவுகளில் நார்ச்சத்து மிக அதிக அளவில் இருக்கும். அதிகமான நார்ச்சத்து, குடல் புண்ணை உருவாக்கி ரத்தக்கசிவை உண்டாக்கும். இது மலச்சிக்கல், ரத்தம் கலந்த மலம்ஸ எனப் பல பிரச்னைகளை உண்டாக்கும். இயற்கையாகவே ஈரலில் நல்ல கொழுப்பு உற்பத்தியாகும். இது ஜீரணத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் பயன்படும். துணை உணவுகள் இந்த நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்துகின்றன. பசி உணர்வை மட்டுப்படுத்தி, உணவின் மீதான ஆர்வத்தைக் குறைக்கின்றன. இதனால் இரைப்பையும் ஜீரண உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, ஈரல் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு இருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பருமனான சுமோ வீரர்கள், குட்டிக்கரணம் போடுகின்றனர். மல்லர்கள் எனும் மல்யுத்த வீரர்களும் குண்டாகத்தான் இருக்கிறார்கள். இங்கு நாம் கவனிக்கவேண்டியது ‘குண்டாக இருப்பது, தொந்தரவாக இருக்கிறதாஸ இல்லையா?’ என்பதைத்தான். பார்ப்பவர்கள் குண்டாக இருப்பதாகக் கூறுவதால் எடையைக் குறைக்க வேண்டும் என முடிவு எடுப்பது சரியல்ல. இப்படி அவசியம் இல்லாமல் எடையைக் குறைப்பது, எலும்புகளைப் பலவீனமாக்கும்.
அப்படியே வேறு காரணங்களுக்காக நீங்கள் எடையைக் குறைக்க விரும்பினாலும், அதற்குத் துணை உணவுகள் தீர்வு அல்ல. உணவுக் கட்டுபாடு மற்றும் உரிய உடற்பயிற்சிகளின் மூலம்தான் அதைச் செய்ய முடியும். நாம் உண்ணும் உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, செல்களில் படிந்துகொண்டே இருக்கும். செல்கள் பெருகும்போது கொழுப்பும் பெருகும். துணை உணவுகளைப் பயன்படுத்தும்போது, செல்களின் மீதுள்ள கொழுப்பைச் சுருங்கச்செய்கிறது. துணை உணவுகளைச் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டால், செல்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.
சிறு வயது முதல் வளர்வதற்கு, ஞாபக சக்திக்குஸ என வெவ்வேறு காரணங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் துணை உணவுகள், குழந்தைகளின் வளர்ச்சி மாற்றத்தில் கடுமையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. வழக்கத்துக்கு மாறான உடல் வளர்ச்சி, சிறு வயதிலேயே பருவமடைதல், பார்வைக் குறைபாடு, மலட்டுத்தன்மைஸ என, கணக்கில் அடங்காத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நம் வளர்ச்சிக்குத் துணை செய்யவேண்டிய துணை உணவுகள், நம் உடலுக்கு வினை வைக்கின்றன. இதைத் தவிர்க்க பெரிய சாகசம் எதுவும் செய்யவேண்டியது இல்லை. நமது முந்தைய தலைமுறையினர் என்ன செய்தார்கள் என்பதை அறிந்துகொண்டு, சமச்சீர் உணவுக்குத் திரும்பினாலே போதுமானது!