அலுவலகங்களில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்?
06 Jun,2015
பொதுவாக அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியதாகிறது. அவ்வாறு உட்காரும் போது பல விதமான உடல் பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அலுவலகங்களில் வேலை செய்யும் போது பெரும்பாலானவர்கள் முக்கால்வாசி நேரத்தை உட்கார்ந்தே கழிக்கின்றனர். அதிலும் மொத்த நேரத்தில் பாதி நேரம் தொடர்ந்து உட்கார்ந்தபடியே இருக்கின்றனர்.
தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காருவதால் இருதய நோய்கள், நீரிழிவு, மூலம் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், குறைந்தது இரண்டு மணி நேரமாவது நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ தங்களுடைய பணிகளில் ஈடுபட வேண்டும்.
அதே நேரம் தொடர்ந்து நின்று கொண்டு இருப்பதும் பிரச்சனைகளைக் கொண்டு வரும். அதிக நேரம் நிற்பதால் காலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
தொழிற்சாலை மற்றும்மருத்துவ மனைகளில் பணிபுரிபவர்கள், ஆசிரியர்கள், பணி நேரங்களில் பெரும்பாலும்நடந்து கொண்டும் நின்று கொண்டும் இருப்பதால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உடல் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.