தூக்கமின்மையால் அவதியா, ஒரு நல்ல இரவு தூக்கம் வேண்டுமா? இந்த வீடியோ பாருங்கள்
07 May,2015
விஷுவல் கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பார்ப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதுடன் சுகமான இரவு தூக்கத்தையும் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இதுவரை 60 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளார்கள்.
அயர்லாந்தை சேர்ந்த விஷுவல் கலைஞர் ஜோனி லாசன். இவர் அந்த நாட்டில் அழகிய பாலத்தின் கீழே சலசலவென லேசான சத்ததை எழுப்பிய படி ஓடும் நதியை, பசுமையான மரங்கள் இடையே மெல்லிய வண்ண கோடுகளாக ஊடுருவும் சூரிய ஒளியுடன் காட்சிப்படுத்தியுள்ளார். காமிராவை அசைக்காமல் ஒரே இடத்தில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வீடியோவை பார்க்கும் போது, அங்கு ஓடும் நதியின் குளுமையையும், தென்றலின் அரவணைப்பையும் பார்வையாளரால் உணரமுடியும் என்பதுதான் இதன் சிறப்பு.
இந்த வீடியோவை முன்வைத்து மருத்துவ துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் லண்டனை சேர்ந்த மருத்துவமனையின் உளவியல் மருத்துவர் ஒருவர் கூறும் போது, 'சிகிச்சையின் ஒரு பகுதியாக இது போன்ற வீடியோக்கள் அடங்கிய டேப்லெட்களை நோயாளிகளிடம் கொடுக்கும் போது அவர்களின் மன அழுத்தம் குறைவதுடன் சுகமான இரவு தூக்கத்தையும் கொடுப்பதாக' தெரிவித்துள்ளார்