எப்படி பரவுகிறது எய்ட்ஸ் ?
05 Mar,2015
எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?
1. பாதுகாப்பற்ற உடலுறவில் எச்.ஐ.வி உள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.
2. பரிசோதிக்கப்படாத இரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.
3. சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் பரவலாம்.
4. எச்.ஐ.வி. உள்ள கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரவலாம்.
எப்படி தடுக்கலாம்?
1. பரிசோதிக்கப்பட்ட இரத்தத்தையே பயன்படுத்துதல்.
2. சுத்திகரிக்கப்பட்ட அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தகூடிய ஊசிகளை பயன்படுத்துதல்
3. பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுரையை பயன்படுத்துதல்.
உலகம் முழுவதும் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் நோயின் தாக்கம் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எச்.ஐ.வி. ,எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகம் இருக்கிறது இதற்கு என்ன காரணம்?
உலக சுகாதார நிறுவனம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான பல காரணங்களை கூறியுள்ளது. 1) சந்தை பொருளாதாரம், 2) கல்வியறிவின்மை, 3) ஆண், பெண் பாலின வேறுபாடு (ஆணாதிக்கம்), 4) ஊடகங்களின் தாக்கம், 5) வறுமை, 6) அடிப்படை மதவாத பிற்போக்கு தனங்கள் ஆகியவையாகும்.