பச்சை பட்டாணி சூப்
03 Mar,2015
பச்சை பட்டாணி சூப்
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 கப்
பூண்டு - 2 பல்
இஞ்சி - மிகச்சிறிய துண்டு
மிளகு தூள் - ௨ டீஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
செய்முறை :
• பட்டாணி, பூண்டு, இஞ்சி மூன்றையும் 4 கப் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும்.
• இதை பழ ஜூஸ் போல் மிக்சியில் அரைத்து உப்பு, மிளகுதூள் சேர்த்து இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடாக்கி குடிக்க வேண்டும்.