தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் 12 சிறந்த உணவுகள்!
முக்கியமாகும். குழந்தைகளுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துகளை தாய்ப்பாலின் மூலம் தான் கிடைக்கிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சி, எலும்புகளுக்கு பலம், நல்ல தசைப்பிடிப்பு போன்றவை கிடைக்க தாய்ப்பால் மிக மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது முதல் பிரசவத்திற்கு பிறகு தான் தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கிறது.
கருவுற்றிருக்கும் போதே தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு சரியாக தாய்ப்பால் சுரக்காது. இன்றைய இளம் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் தங்கள் மேனியின் அழகு சீர்கெட்டுவிடும் என எண்ணி தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர்.
இது முற்றிலும் தவறான அணுகுமுறை. குழந்தைக்கு சரியான அளவு தாய்ப்பால் கிடைக்காவிட்டால், குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க பெறாமல் போய்விடும். மற்றும் சில பெண்கள் தாய்ப்பால் சுரப்பை குறைக்க மாத்திரைகளும் எடுத்துக் கொள்கின்றனர்.
இதுப்போன்ற காரியங்கள் பிள்ளைகளின் உடல்நலத்திற்கும், வளர்ச்சிக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பதனை இளம் தாய்மார்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். தாய்ப்பால் சுரப்பதில் குறைப்பாடு என்பது ஊட்டச்சத்துகளின் குறைபாடுகளின் மூலமாக வருவது தான்.
சரியான உணவுகளை உட்கொண்டாலே இதை சரி செய்துவிடலாம். இதற்காக கவலைப்பட தேவையில்லை. நமது அன்றாட உணவுகளிலேயே இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. சரி, இனி தாய்ப்பால் அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்ஸ
வெந்தயம் வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். மற்றும் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.
பேரிச்சம் பழம் பேரீச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குழந்தையும் நன்கு வளரும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
பாகற்காய் பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
வெற்றிலை வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்
துளசி துளசி, அதிமதுரம் ஆகியவற்றை வெந்நீர் கொண்டு சந்தனம் போல் அரைத்து தாயின் மார்பகத்தில் தடவினால் குழந்தைகள் பால் அருந்தும்.
ஆலம் விதை ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் அளவு பாலில் காய்ச்சி உண்டால், தாய்பாலில்லாத பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் உற்பத்தியாகும்.
அருகம்புல் அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.
பாசிப்பயிறு பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றுப் போட்டால் பால்கட்டு குறைந்து வீக்கமும் குறையும்.
சீரகம் சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.
பூண்டு பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும்.
கீரை அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். மற்றும் முருங்கை கீரையை சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும்.
எள்ளு சிறிதளவு கேழ்வரகு மாவு, எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் பின்பு தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.