முதல்கருவை கலைத்துவிட்டால் குழந்தை பிறக்காது உண்மையா?ஆபத்தானது! – மருத்துவர் எச்சரிக்கை
15 Nov,2014
முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது போவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது அடுத்த குழந்தை பிறப்பது பிறக்காது போவதும் அவரவர் உடல்நிலையைப் பொறுத்ததே! என்றாலும் கரு உண்டாவதைத் தடுக்க, மாதவிலக்கு சுழற்சியின் நடுவில் உள்ள 10நாட்கள் பாதுகாப்பானவை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் பலருக்கு மாதவிலக்கு சுழற்சி சீராக இருப்பது இல்லை. எனவே கருத்தடை சாதனங்க ளைப் பயன்படுத்துவது நல்லது.
மேலும் கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டான பிறகு அதை அழிக்க நினைக் காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார் ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக் கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளா கியும் இன்னும் குழந்தை தங்காமல் சிகிச்சையில் இருக்கிறார்.
இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானதுஎன்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதுபற்றிய விவரம் இதோ
கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங் களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது. இடை ப்பட்ட மாதங்களில் கர்ப்பப்பை க்கு அழுத்தம் தராத வகையில் மென்மையாக உறவு கொள்ளலாம். அதுவும் கூட பிரசவ மாவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என சொல்லப்பட்ட பெண்களுக்கு மட்டும்தான். மற்ற பெண்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இல்லறவாழ்வில் ஈடுபடுவதால் தொ ற்றுக் கிருமிகள் அதிகம் தாக்க வாய் ப்புகள் உண்டு. பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது இந்த நாட்களில் மிக மிக முக்கியம்.
சுகப்பிரசவத்துக்கு ஆரோக்கியமான உணவுதான் அடி ப்படை. தினம் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இரவு உணவுக்குப்பிறகு வெற்றிலை, பாக்கு போட லாம். கமலா ஆரஞ்சும், வாழைப் பழமும் தினம் சாப்பிடலா ம். முருங்கைக் கீரையும், முட்டை யும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். தினம் மூன்று வேளை பால் குடிக்க வேண்டியது மிக முக்கியம்.
குதிகால் உயரமாக வைத்த ஹைஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையை மட்டும் சரி யாகப் பின்பற்றுங்கள். மற்ற வர்கள் சொல்கிற அனுபவங் கள், கேள்விப்படுகிற விஷயங்களை எல்லாம் காதில் வாங்காமல், பயமின்றி பிரசவத்தை எதிர்நோக்குங்க ள்.