சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

06 Nov,2014
 

             


இனிய இலவசம் சூரியன் உதிக்கையில் துயில் கலைந்து ஏர் கலப்பையுடன் கழனிக்கு சென்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று ஏ.சி. அறையில் அமர்ந்து பணிபுரிந்து விட்டு, இருள் கமழ்ந்த மாலையில் வீடு திரும்பும் இந்த நவீன யுகத்தில் சூரியனுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பே அற்றுப்போய் விட்டது. சூரிய ஒளி பட்டாலே கருப்பாகி விடுவோம் என்று முகத்தைப் போர்த்திக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது! மனித உடலைக்

 

கட்டமைக்கும் கம்பிகளாக விளங்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் டி அத்தியாவசியம். இந்த வைட்டமினின் 90 சதவிகித அளவு சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இதனை களைவதற்கான ஆலோசனைகளையும் பொது மருத்துவர் வினோத் பிரேம் ஆனந்திடம் கேட்டோம்.”பி, சி போன்ற வைட்டமின்கள் பற்றி அறிந்த அளவு டி வைட்டமின் குறித்து பலருக்கும் தெரியாது. வைட்டமின் டிக்கு ‘சன்ஷைன் வைட்டமின்’ என்கிற பெயரும் இருக்கிறது. ஏனெனில், சூரிய ஒளி இதற்கு மிகமிக அவசியம். மனித உடலுக்கு நாளொன்றுக்கு 400-600 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் டி தேவைப்படுகிறது. இது குறைபடும்போது எலும்பு வலுவிழந்து ஆஸ்டியோ பொரோசிஸ், ஆஸ்டியோமலாசியா ஆகிய பிரச்னைகள் ஏற்படு கின்றன. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் களுக்கு வைட்டமின் டி மிக மிக அவசியம். மற்ற வைட்டமின்களை போல வைட்டமின் டிக்கு மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. சூரிய ஒளியை உள்வாங்குதல் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். சூரிய வெளிச்சமே படாத குளிர்பிரதேச மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு பெருமளவில் இருக்கும். இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால் நம்மால் இயன்ற வரையிலும் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதற்காக உச்சி வெயிலில் நிற்கும் அவசியமெல்லாம் இல்லை. அலுவலகமோ, வீடோ – சூரிய ஒளி உட்புகும் அளவு சூழலை உருவக்கினாலே போதும். வாகனம் ஓட்டிச் செல்லும்போது கைக்கு உறையணிந்து, முகத்தையும் முழுதாக போர்த்திக் கொண்டு செல்வதால் சூரிய ஒளி கிடைப்பது தடைபடும். சில சமூகத்தினர் உடல் முழுக்க மூடும் கருப்பு உடை அணிந்து செல்வதால், தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்காமல் போகும். சூரியன் உதிக்கும் நேரத்திலோ, சூரியன் மறைவதற்கு முன்போ நடைப்பயிற்சி மேற்கொள்வது வைட்டமின் டியை பெற வசதியாக இருக்கும்” என்கிற டாக்டர், வைட்டமின் டி லேப் ரிப்போர்ட் குறித்தும் கூறுகிறார்.”உலகிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எலும்பு மிகவும் வலிமையானது. ஆனால், லேப் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவர்களில் பலருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? வைட்டமின் டி யின் ஒரு பிரிவான Free Bio Available Vitamin D தான் எலும்புக்கான வலிமையைக் கொடுக்கக் கூடியது. இதன் அளவு 0.03க்கும் குறைவாக இருந்தால்தான் வைட்டமின் டி குறைபாடு என்றாகி விடும். இத்தனை ஆண்டுகளாக உலகளவில் அனைத்து நாடுகளிலும் வைட்டமின் டி குறித்த ரத்தப் பரிசோதனையில் 85 சதவிகிதம் Attached With Vitamin D Protein, 15 சதவிகிதம் Attached With Vitamin D Albumin என்று இந்த அளவுகளுக்கு குறைவாக இருத்தலே வைட்டமின் டி குறைபாடாக கணக்கிடப்பட்டு வருகிறது. இது தவறு என்பது குறித்து உலக மருத்துவக் கருத்தரங்குகளில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதனால், லேப் ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக கணக்கிடக் கூடாது. எலும்பு வலிமையை சோதித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும்” என்கிறார். வைட்டமின் டி சத்து கிடைக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம் என உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் கேட்டோம்.”கடல் உணவுகளில் Herring, Salmon ஆகிய மீன்களை தினமும் 90 முதல் 95 கிராம் வரை சேர்த்துக் கொள்ளும்போது 400 International Unit வைட்டமின் டி கிடைக்கிறது. மற்றபடி அனைத்து வகையான மீன்களிலும் குறிப்பாக ஆழ்கடல் மீன்களில் அதிகளவில் வைட்டமின் டி கிடைக்கிறது. முட்டை, ஈரல், பன்றிக்குடல், பால் ஆகியவற்றிலிருந்தும் கிடைக்கிறது. கர்ப்பிணிகள் நாளொன்றுக்கு 800 மி.லி. பால் எடுத்துக்கொள்வது அவசியம். சைவம் உண்பவர்கள் சோயா பனீர், சோயா மில்க், காளான் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மீன் எண்ணெய் மாத்திரைகளிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேன் கலந்து குடித்து விட்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தேன் உடலிலுள்ள கொழுப்பை உருக்கி விடும். சூரிய ஒளி படும்போது அந்தக் கொழுப்பு வைட்டமின் டி ஆக உருமாறும்” என்கிறார் வினிதா.


வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!



‘எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்’  இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.

 


யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா என்கிற நம் சந்தேகங்களை, டாக்டர் சாய்கிஷோர் முன் வைத்தோம்.

"கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு வைட்டமின் களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.

ஏ, டி, கே போன்ற வைட்டமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த வைட்டமின்கள் கொழுப்பு சேகரிக்கப்படும் இடங்களில் சேகரம வாதால், இந்த வகை வைட்டமின்கள் அதிகரித் தாலும் சிக்கல்தான்" என்கிறார் சாய் கிஷோர்.

வைட்டமின் அதிகரிப்பதால்  வரும் பிரச்னைகள்

  வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ அன்றாடம் சராசரியாக 4,500 மைக்ரோ கிராம் தேவை. இதற்கும் அதிகமாக இந்த வைட்டமின் நம் உடலில் சேரும்போது ‘ஹைப்பர் வைட்டமினோசிஸ்’ என்னும் டாக்சிக் நிலை ஏற்படும். இதனால் பசியின்மை, வாந்தி, தலைவலி, முடி உதிர்தல், தூக்கமின்மை என சின்னச்சின்னப் பிரச்னைகளில் தொடங்கி அதிகப்படியான வைட்டமின்கள், உடலில் இருந்து வெளியேற்றப்பட முடியாமல் கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதிப்பது வரை சென்றுவிடும். மேலும், எலும்புகளைக் கடினமடையச் செய்து சாதாரண கை, கால் அசைவின்போதுகூட வலியை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளின் உடலுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

  வைட்டமின் டி

எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்தினை உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும்போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும். மாதவிடாய் நின்ற பெண்கள்கூட மிகவும் அவசியமெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் வாரத்துக்கு 60,000 யூனிட்ஸ் என்ற அளவில் எட்டு வாரங்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளைத்் தொடர்ந்து எடுக்கலாம். இதன் அளவு அதிகமானால், ‘ஹைப்பர் பாராதைராய்டிசம்’ என்ற ஹார்மோன் பாதிப்பு ஏற்படும் என்பது நினைவில் இருக்கட்டும்.

  வைட்டமின் இ

   இப்போது கடைகளில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் பலவற்றிலும் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்னை வந்தால் தாங்களாகவே வைட்டமின் இ மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது நல்லதல்ல. வைட்டமின் இ அளவு அதிகமாகும்போது,  ரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது. மேலும், வைட்டமின் இ மாத்திரைகள், ஆண்தன்மைக்கான இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரித்தாலும், தொடர்ச்சியாக எடுக்கும்போது, அரிதாக புராஸ்டேட் கேன்சரை உண்டாக்கிவிடலாம்.

  வைட்டமின் கே  

ரத்தம் உறைதலுக்கு இந்த வைட்டமின் ரொம்பவும் தேவை. ஆனால், இது உடலில் அதிகமாகும்போது ‘ஹைப்பர் த்ராம்போனீமியா’ என்ற பாதிப்பு ஏற்படுவதால் அளவுக்கதிகமாக ரத்தம் உறைந்து ரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும். இந்த ரத்தக் கட்டிகள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்கக்ச் செல்லும்போது மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற் படுத்திவிடும். இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம். மேலும் இதய நோய்களுக்காக ஆன்டி கோயாகுலன்ட்ஸ் (ANTI COAGULANTS) மாத்திரைகளான வார்ஃபாரின் மற்றும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரைக் கேட்காமல் வைட்டமின் கே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.


சென்னை ‘க்வா நியூட்ரிஷன்’ அமைப்பைச் சேர்ந்த உணவியல்

நிபுணர் கிருத்திகா ராஜன் தரும் வைட்டமின் டிப்ஸ்:

  வைட்டமின் ஏ குறையும்போது, பார்வை மங்குதல்,  மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேரட், பப்பாளி, மஞ்சள் நிற குடமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாட்டைத்  தவிர்க்கலாம். 

   பி வைட்டமின்களில் பலவகைகள் உள்ளன. இதில், பி12 மற்றும் பி9 (ஃபோலிக் ஆசிட்) இரண்டும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிக முக்கியமானவை. இவற்றின் குறைபாட்டினால் ரத்த சோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தடுக்க, முட்டை, இறைச்சி, சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

   சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா கதிர்களினால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் டி, எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைப்பதற்குத் தேவை. சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்காத சிறியவர்களுக்கு ரிக்கட்ஸ், வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலுடன் கலந்து வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

  நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி அவசியம். இந்தச் சத்து குறைந்தால், ஸ்கர்வி என்னும் பல் பாதிப்பு ஏற்படும். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம். வைட்டமின் சி உள்ள உணவுப் பொருள்களுடன், இரும்பு நிறைந்த பேரீச்சை, திராட்சை போன்றவற்றையும் சேர்த்து உண்ணலாம். 

   வைட்டமின் இ மிகச் சிறந்த ‘ஆன்டி ஆக்சிடன்டாக’ செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது. இது குறையும்போது வயதான தோற்றம், குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க பாதாம், முளைகட்டிய கோதுமை, பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

   உணவு செரித்தலின்போது குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் கே சத்தின் அளவு குறைந்தால், ரத்தம் உறைதல் பாதிப்புகள் ஏற்படும். கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம், இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies