முதல் பிரசவத்தின் போது வெட்டப்படும் தாயின் பிறப்புறுப்பு! – ஒரு மருத்துவத் தகவல் – வீடியோ
24 Jul,2014
குழந்தை பிறக்கும்போது பிறப்பு வழி சரியாக விரிந்து கொடுக்காதபோது குழந்தை ப் பிறப்பை இலகுவாக்குவத ற்காக தாயின் பிறப்பு உறுப் பின் ஓரம் வெட்டப்படும். இது எபிசியோட்டமி (Episiotomy) எனப்படும்.
இந்த செய்முறையானது அநேகமாக
முதல் பிரசவத்தின் போது தேவைப்படும்.
உண்மையில் வெட்டப்படும் பகுதி க்கு விறைப்பு ஊசி போடப்பட்டே வெட்டப்பட வேண்டும் என்றாலு ம் எமது நாடுகளிலே எந்த வித மான ஊசிகளும் போடபபடாம லேயே வெட்டப்படுகின்றன. அவ் வாறு விறைப்பு ஊசி போடாமல் வெட்டினாலும் பிரசவ வேதனை யில் இருக்கும் அந்த தாய்க்கு வெட்டப்படும் வேதனை மிகவும் குறைவாகவே உணரப்படும். ( அதாவது வெட்டப்படும் வலியை விட பிரசவ வேதனை அதிகம் என்பதால் மூளை பிரசவ வேதனையை யே அதிகமாக உணரும்)
குழந்தையின் தலை பிறப்பு வழியினூடாக தெரியத் தொட ங்கும் போதே பிறப்புறுப்பு வெ ட்டப்படும்.( பிரசவத்தின் இறு திப் பகுதி)
குழந்தை பிறந்த பின் வெட்டிய பகுதி தைக்கப்படும்.
இதன் பின் விளைவுகளாக வெட்டிய இடத்தில் இரத்தப் போக்கு , கிருமித் தொற்று போன்றவை ஏற்படலாம் .
நேர்த்தியாக வெட்டப்பட்டு, தைக்கப்பட்ட பெண்களிலே இதனால் தழும்பு ஏற்படுவதற் கான சந்தர்ப்பம் இல்லை.
இனி இந்த வீடியோவைப் பா ருங்கள் இன்னும் கொஞ்சம் விளங்கும்ஸ
இந்த வீடியோவைப் பொது இடங்களில் பார்ப்பதைத் தவிர்க்கவும்