இடுப்பு மூட்டு தேய்மானம் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி மனு மருத்துவ மனை யின் நிர்வாகி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச் சை நிபுணர் டாக்டர். பாரி செல்வராஜ் விள க்கமளிக்கி றார்.
வயது முதிர்ந்தாலே உடலிலுள்ள மூட்டுகள் தேய்மானமடைய ஆரம்பி த்து விடுகிறது. அவற்றுள் இடுப்பு மூட்டும் விதிவிலக்கல்ல. இடுப்பு மூட்டு தேய்மானமடைவதால் தாங் க முடியாத அளவிற்கு வலி ஏற்படு ம். நேராக நடக்க முடியாது. குனிந்து நிமிர சிரமமாகும். சில சமயங்களி ல் நிமிர்ந்து உட்காருவதற்கே
சிரமமாக இருக்கும்.
இடுப்பு மூட்டானது அசிட்டபுலம் எனப்படும் இடுப்பு மூட்டுக் குழியினுள் தொடை எலும்பினுடைய மு னைப்பகுதி யான பந்து பொருந்தியுள்ள அ மைப்பைக் கொண்டுள் ளது. இதன் உதவியுட ன்தான் காலை முன் னும் பின்னும் பக்க வாட்டிலும் நாம் அசைக்கமுடியும். இதன் அமைப்பின் கார ணமாகத்தான் நம்மா ல் நிற்கவோ, நடக்க வோ அல்லது உட்கார வோ முடிகிறது. இடுப்பு மூட்டானது சில முக் கிய காரணங் களால் பாதிக்கப்படுகிறது. அ வற்றுள் ஒன்று ஆஸ் டி யோ ஆர்த்ரை ட்டீஸ் எனப் படும் எலும்பு வ லிமை குறைதல் பிரச்சினையா கும். இந்த பிரச்சினை முதிர் வயது காரணமாக ஏற்படும்.
இந்த பிரச்சினை வருவதற்கு இடுப்பு மூட்டில் இணைந்து ள்ள தொடை எலும்பின் முனைப் பகு தியான பந்து அமைப்பு டைய எலும் பின் மேல் உள்ள குறுத்தெலும்பா னது தேய்மா னமடைந்து எலும்பா னது இடுப்புக்குழியுடன் உராய்ந்து பந்து அதிகமாக தேய்மானமடைகி றது. இதனால் அளவிற்க திகமான வலி ஏற்படுகிறது. மற்றொரு காரண ம் ரொமட்டா ய்டு ஆர்த்ரைட்டீஸ் ஆகும். இந்த பாதிப்பால் இடுப்பு மூட் டில் இரண்டு எலும்புகளுக்கு இடையி ல் உள்ள சவ்வுப்பகு தியில் கிருமித்தொற்று ஏற்பட்டு மூட் டுக் குறுத்தெலும்பு பாதிக்கப்பட்டு தேய்மானம் மற்றும் மூட் டுப் பிடித்தம் ஆகி யவை ஏற்படும். மேலும் மூட்டு எலு ம்பின் அசையும் திறன் குறைகிறது.
அடுத்தபடியான காரணம் விபத்தின்போது இடுப்பு மூட் டில் அடிபட்டதால் அல்லது எலும்பு முறிவு காரணத்தால் ஏற் படும் பாதிப்பாகும். இந்த பாதிப்பால் மூட்டு தேய்மானம் ஏற்பட்டு காலை அசைக்க முடியாத நிலை ஏற்படும். இது அனைத்து வயதினருக்கும் வரக்கூடியதாகும். இடுப்பு மூட்டு பாதிக்கப்பட்டால் உங்கள் நடையில் மாற்றம் தெ ரியும். அதாவது ஒரு பக்க மூட்டு பாதிக்கப்ப ட்டால் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்க நேரிடு ம். வலி அதிகமாகும். அதன் காரணமாக சில சமயங்களில் முதுகு வலி உண்டாகும். எனவே, தேய்மான த்தை முதலிலேயே கண்டறிந்தால் உடற்பயிற்சியின் மூல ம், வாழ்க்கைமுறை மாற்றத்தினாலும் சரி செய் யலாம்.
அதையும் மீறிய நிலையில் மருந்துகள் மற்றும் பிஸியோ தெரபி சிகிச்சையில் சரிசெய்ய லாம். அதைக் கவனியாமல் விட்டுவிட்டால் தேய்மானம் முற்றிவிடும். அவ்வாறு முற் றிய நிலையில் நம்மால் இனி எதையும் செய்யமுடியாது என்று எண்ணி கவலை வேண்டாம். தேய்மானமடைந்த மூட்டிற்குப் பதிலாக மூட் டு மாற்று அறுவை சிகிச் சை செய்து செயற்கை மூட் டு மாற்றி முன்பு போலவே நடக்கலாம். குனிந்து எழு ந்திருக்கலாம். அதிகமான தேய்மானத்தால் பாதிக்கப் பட்ட இடுப்பு மூட்டிற்குப் பதில் இடுப்பு மூட் டு மாற்று அறு வை சிகிச்கை செய்து செயற்கை மூட்டு பொரு த்தப்பட்டு முன்பு போன்று நடக்கச் செய்யலாம்.
இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது அசிட்டபுலத்துடன் இணை ந்துள்ள தேய்மானமடைந்துள்ள தொடை எலும்பின் முனைப்பகுதி யான பந்தை மாற்றி மூட்டுடன் இணைந்த லாகும். சில சமயங்க ளில் அசிட்டபுலத்திலுள்ள கிண்ண ம் மாற்றியமைக்கப்படும். இந்த செயற்கை மூட்டானது உங்களு டைய உடல் எடையைத் தாங்கு கின்ற மற்றும் எளிதில் அசைக்க க்கூடிய வகையில் வடிவமைக்க ப்பட்டதாகும். எனவே, அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்க ள் அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம்.
மனு மருத்துவமனையில் உங்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீங்கள் அடுத்து தொடரவேண்டிய உடற் பயி ற்சிகள் பயிற் றுவிக்கப்படும். அது தவிர உங்களின் தொடர் சிசிச் சைக்கு பரிந்துரைக்கப்ப ட்டு நீங்கள் எந்த தங்குத டையுமின்றி நடக்கும் வரை கண்காணிக்கப்படுவீர்கள். மனு ஆர்த்ரைட்டீஸ் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்துகொண்டு உங்கள் இடுப்பு மூட்டை திடப்படுத்திக்கொள்ளலாம்.
இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை பற்றிய சந்தேகங்களுக்கு 9944222813 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள் ளவும். மேலும் தொடர்புக்கு; மனு மருத்துவமனை, 1, பாரி நகர், சுங்கம் பைபாஸ் ரோடு, கோவை – 45. தொலைபேசி; 0422 6472227
ராஜ்