இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப் படுகிறார்கள். இந்நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாம ல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக் குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாவது:-
மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வச திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புக ளின் செயல்பாடுகள் கூட கரு உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிறது.
இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதை நாளமில்லா சுரப்பிகள் நம் உடலில் பிட்யூட்டரி தைராய்டு, பாராதை ராய்டு, அட்ரீ னல் என பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை சுரக்கும் பொருளை இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் என்று அழைக்கிறோம். நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தைராய்டு சுரப்பியாகும்.
கருவில் குழந்தை உருவாகும்போது அதன் உணவுப் பாதையில் இருந்து கீழ் இறங்கி தொண்டைப் பகுதியில் இருக்கு ம் குரல்வளையைச் சுற்றி தைராய்டு சுரப்பி அமைந் திருக்கும். சுமார் 15 முதல் 25 கிராம் எடை யுள்ள இது வண்ணத்துப் பூச்சியின் வடிவம் கொ ண்ட து.
வண்ணத்துப் பூச்சியின் இரு இறகுகள் போன்ற வடிவுடைய பகுதிகள் நடுவில் இணைப்பு திசு வால் இணைக்கப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி குரல்வளையோடு சேர்ந்து நன்றாகப் பிணை க்கப்பட்டிருப்பதால் சிலருக்கு உணவை விழுங் கும்போது குரல் வளையோடுதை ராய்டு சுரப்பி யும் மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும்.
தைராய்டு ஒருவரின் கண்ணுக்குப் புலப்படுகி றதென்றாலே அது தன் வழக்கமான 25 கிராம் எடையைவிட மிகு தியாய் இருக்கிறது என்ப தை அறியலாம். தைராய்டு அதனுடைய சுரப்புத் தன்மையை கரு உருவா கி இரண்டு வார காலத்தில் இருந் தே துவங்கி விடுகிறது. சுரக்கும் ஹார்மோ னின் பெயர் தைராக்சி ன் தைராய்டு செல்களால் சுரக்க ப்படுகிறது.
தைராய்டு செல்களிடையே செழி ப்பான ரத்த ஓட்டம் இருக்கிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் இருந்து அயோடின் என்ற அமிலத்துடன் இணைந்து தைராக்சின் உருவாக் கப்படுகிறது. இப்படி உருவாக்க ப்பட்ட ஹார்மோன் தைரோ குளோபுலின் சேமித்து வைக்கப்படுகி றது. தேவையான பொழுது இவை ரத்தத்தில் கலக்கப்படுகிறது. இந் த தைராக்சின் உருவாகும் செல்கள் ஹார்மோன் பிட்யூட்டரியால் சுர க்கப்படுகிறது.
சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன?
சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.
1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக் கலாம். குறையுள்ள குழந்தையை பிரச விப்பதைவிட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாது காப்பு விதியாகும். குரோமோசோம்களி ல் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பல னளிக்கும்.
2. ஹார்மோன்களின் சமநிலையில் பா திப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப் பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோ னின் அளவு குறைந்துவிடுவது ஒரு கார ணம். கருவானது கருப்பையினுள் ஊன் றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டி ரான் சுரப்பு அவசியமாகும். இதை கருப்பையின் உட்சுவரை திசுப் பரி சோதனை செய்வதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
3. சில பெண்களுக்குகீழ் கண்ட நோயின் பாதிப்பினால் கருச்சிதைவு ஏற்படலாம். அவை
*- சாக்லேட் இரத்தக்கட்டிகள்
*-கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு குறை பாடு
*-கட்டுப்படுத்த முடியாத தைராய்டு சுரப்பி நோய்கள்
*-மோசமாக பாதிப்படைந்த இதயம், கல் லீரல் அல்லது சிறுநீரகங்க ள்
*-உடல் திசுக்களுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தி உருவாதல் -தொற்று நோய்கள்
4.சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவது ஒரு காரணமாகலாம். சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதால் எல் எச் ஹார்மோன் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் கருமுட்டையின் வளர்ச்சி பாதிக்கப்படு கிறது.
5.நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற் படுவதால் கருச்சிதைவு உண்டாகலாம் .
பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகள் உடலைத் தாக்கும் போது தாயின் நோய் எதிர்ப்புச் சக்தி சரிவர வேலை செய்யாவிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம்,
கருத்தரிக்கும் போது, கருவிலுள்ள தந்தையின் ஜீன்கள், தாயின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு மாறாக இருந்தாலும் கருச்சிதைவு ஏற்பட லாம்.
6. தாயின் உடல் எதிர்மியங்கள் காரணமாக வும் கருச்சிதைவு ஏற்படலாம். சில பெண்களு க்கு இரத்தம் உறைவதற்குக் காரணமாக இரு க்கும் அணுக்களுக்கு எதிராக, உடல் எதிர் மியங்கள் தோன்றக் கூடும், இதன் காரணமா க தாய்க்கும் கருவிலுள்ள சிசுவிற்கும் இடை யே உள்ள இரத்த ஓட்டத்தில் இரத்த உறைவு க்கட்டிகள் உரு வாகி, சிசுவிற்கு வேண்டிய இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இதை இரத் தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலா ம்.
7.கருப்பையில் ஏற்படும் சில பிரச்சனைகள் காரணமாக கருச் சிதைவு ஏற்படும்.
*கருப்பையில் நார்த்திசுக் கட்டிகளின் காரண மாக கருச்சிதைவு ஏற் படும்.
* பிறவியிலேயே ஏற்படும் கருப்பை பிரச்சினைகள். கருப்பை பிறவி யிலேயே இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கலாம்.
*கருப்பை உட்சுவர் சதைகள் மற்று ம் கருப்பையின் உட்பாகத்தில் ஏதே னும் புண் ஏற்பட்டு அதன் சதை கெட் டியாக வளர்ந்திருந்தால், கருப்பை யில் கரு ஊன்றுவதில் சிக்கல் ஏற் படலாம். இதை உள்நோக்கிக்கருவி மூலமோ அல்லது கதிர் வீச்சுப்படம் மூலமோ கண்டு பிடுக்கலாம்.
* பலவீனமான கருப்பை வாய்; இப் பிரச்சினை உள்ள நோயாளர்களின் வாய் எப்போதும் தளர்ந்தே இரு க்கும். கருப்பையில் சிசு வளர்ந் து கருப்பை வாயினை அழுத்தும் போது பலவீனமான கருப்பையின் வாய் திறந்து கருச்சிதைவு ஏற்படு கிறது. இதை உள் நோக்கிக் கருவி அல்லது கதிரவீச்சுப் படம் அல்ல து கேளா ஒலி பரிசோதனை மூலமோ அறிந்துக் கொள்ளலா ம்.
8. சுற்றுப் புற சூழலில் உள்ள நச்சுக்களின் தாக்கம் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். பெண்க ள் தொடர்ந்து நச்சு வாய்ந்த இரசாயனங்கள் மற் றும் வாயுக்களுடன் வேலை செய்யும் பொழுது கருவுற்றால்,இந்த நச்சுத் தாக்கம் சிசுவை பாதித்து கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆண்க ளும் இம் மாதிரி சூழலில் வேலை செய்யும் பொழுது, அவர்களுடை ய விந்தணுக்கள் பாதிக்கப்படுகி றது. புகை பிடித்தல், மது அருந்துத ல், போதை மருந்துக்கு அடிமை போன்றவைகளும் இதற்கு விதிவி லக்கல்ல.
9. உணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப் புகளின் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். தாயானவள் துக் கம்,வேதனை, தனிமை, மனச் சோர்வு போன்ற பல்வேறு உணர்ச்சி களால் பாதிக்கப்படும்போது பாதிப்பின் தன்மைக்கேற்ப கருச்சிதை வு ஏற்படுகிறது.
கருச்சிதைவை தடுக்கும் சில ஹோமியோ மருந்துகள்.
அகோனைட், அபிஸ் மெல், ஆரம் மெட்., பெல்லடோனா, போரக்ஸ், பிரையோனியா, கல்கேரியா கார்ப், காந்தாரிஸ், சைக்ள மென், டிஜிடா லிஸ், டல்கமரா, யுபடோரியம் பர்ப லேட், பெர்ரம் மெட், ஜெலு சிமியம், காலோ பைலம், காஸ்டிகம், சிமிசிப் யுகா ,சாமோ மில்லா, கோனியம், ஹாமாமெலிஸ், இக்னேசியா, அயோடம், அயிரிஸ் வெர் சிகுலர், காலிகார்ப், லாச்சஸிஸ், மெர்க் சொல், நக்ஸமோ, ஒபியம், பிளாட் டினா,போடோபைலம், பல்சடில்லா, ரூட்டா, சபினா, சீகேல் கார் னோட்டம்,செபியா, சைலீஷியா, ஸ்ட்ராமோனியம், சிபிலினம், தூஜா , உஸ்டிலாகோ மற்றும் ஜிங்கம் மெட்டாலிகம்.