பாதுகாப்பான கருக்கலைப்பு முறையை எப்படி தேர்வுசெய்யலாம்!
கருக்கலைப்பு என்றாலே நம்மில் பலருக்கு அலர்ஜி. திகிலோடும் பயத்தோடும் தான் அதனை நினைத்துப் பார்ப்பார்கள். உண்மையில், சரியான முறைகளைத் தேர்ந்தெடுத்துச் செய்தால், கருக்கலைப்பு என்பது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிய செயல்முறையாகும்.
பல்வேறு காரணங்களால், பெரும்பாலான பெண்கள் பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகளைத் தேர்ந்தெடுப்பது இல்லை. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளைத் தேர்ந்தெடுப்பதால், சில சமயங்களில், அவர்கள் தமது இன்னுயிரை இழக்கும் நிலை கூட ஏற்படுகிறது.
நவீன கால மருத்துவ அறிவியல் மூலம் ஏராளமான, பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது மட்டும் தான்.
பெரும்பாலான பெண்கள் தமது கருவை மருத்துவ ரீதியாக கலைப்பதற்காக மருத்துவரிடம் செல்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். இந்த மனோபாவத்தினால் அவர்கள் பல தவறான முறைகளைப் பின்பற்றி. அம்முயற்சிகள் தோல்வியடைவதுண்டு.
ஆகவே உங்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு நடைபெற வேண்டுமென்றால், தகுதியான மருத்துவரிடம் தான் சென்றாக வேண்டும். மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்ற பின் தான், உங்களுக்கான பாதுகாப்பான கருக்கலைப்பு முறை எது என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
பாதுகாப்பான கருக்கலைப்பு முறை என்பது, உங்கள் வயிற்றில் வளரும் கருவின் வயதினைப் பொருத்தது. கருவின் வயதினை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றாற் போல பல்வேறு கருக்கலைப்பு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நான்கு மாதங்கள், அதாவது 16 வாரங்கள் வயதுள்ள கருவினை மருத்துவ முறையில் கலைப்பது தான் மிகவும் பாதுகாப்பானதாகும். நீங்கள் இயற்கையான கருக்கலைப்பினைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், கருவின் வயதானது 8 வாரங்களுக்குள் இருக்க வேண்டும்.
ஏழு வாரங்களுக்குக் குறைவான வயதுள்ள கருவினைக் கலைக்க வேண்டுமானால், கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்வது சிறந்தது. இம்முறையானது எந்த சிக்கலையும் உண்டு பண்ணாது. அதற்கு உங்களுடைய மருத்துவர் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகளை உண்டு வந்தால், இயற்கையாகவே கருச்சிதைவு ஆகிவிடும்.
ஐந்து வாரங்களுக்குக் குறைவான கர்ப்பத்தினைக் கலைப்பதற்கு குறிப்பிட்ட சில பழங்களைப் பயன்படுத்தலாம். இவற்றை உண்டால், உடனடியாக கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். பப்பாளியும், அன்னாசியும் இயற்கையான கருச்சிதைவினை ஏற்படுத்தும் பழங்களாகும். ஆனால் இப்பழங்களை உண்டு வந்தால், கருச்சிதைவு நடக்கும் என்பதற்கு 100% உத்தரவாதம் இல்லை