ஹோமியோபதி மருந்தின் பயன்பாடுகள்

26 Mar,2014
 

 

ஹோமியோபதி மருந்தின் பயன்பாடுகள்

 


முன்னுரை

உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவம் இன்று வளர்ந்து வருகிறது.உலகம் முழுவதும் மக்கள் ஹோமியோபதி மருத்துவத்தால் பயனடைந்து வருகின்றனர்.ஹோமியோபதி மருத்துவம் பாதுகாப்பானதாகும்,சிறந்த தன்மை,பண்புகளைக்கொண்டது. இந்திய குடும்பங்களில் “ஹோமியோபதி””நல்ல பெயர் பெற்றுள்ளது.இந்திய மக்கள் தொகையில் 10% மக்களுக்கு மேல் இம் மருத்துவத்தினை சார்ந்து பயன்படுத்துகின்றனர்.ஹோமியோபதி மருத்துவம் இந்திய மருத்துவ வழிமுறைகளில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது.

இந்த மருத்துவ முறை இந்தியாவில் சுமார் 150 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் பாரம்பரியத்துடன் ஒன்றாக கலந்து இந்திய மருத்துவமுறைகளில் ஒன்றாக கருதப்படும் அளவு வளர்ந்திருக்கிறது.

இம்மருத்துவமுறை நோயுற்றோருக்கு,மனரீதியாகவும்,சிந்தனையிலும், ஆன்மீக துறை மற்றும் உடல்நிலையில் சமநிலையினை உண்டாக்குகிறது. ஹோமியோபதி என்கின்ற வார்த்தை கிரேக்கசொல்லான “ஹோமோ” என்பது “ஒத்த மாதிரியான” மற்றும் “பேத்தோ:” என்பது “வேதனை” எனும் அர்த்தம் தரும் சொல்லிருந்து வந்தது ஆகும்.

ஹோமியோபதி என்பது குறைந்த அளவான மருந்து கொடுத்து நோய்களை குணமாக்குவது ஆகும்.இந்த சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படாது.இயற்கையின் விதியின் அடித்தளமான “விருப்பத்தை விருப்பம்மூலம் குணப்படுத்துதல்”எனும் இந்த அறிவியல் தத்துவத்தை டாக்டர்.சாமுவேல் ஹானிமேன் என்பவர் விளக்கினார்.உடல்நலம் குன்றிய மக்களுக்கு கடந்த இருநூறு ஆண்டுகளாக நோயை நீக்கி சுகத்தை அளித்துக்கொண்டு வருகிறது.

டாக்டர்.சாமுவேல் ஹானிமேன் தமது ஆராய்ச்சியில் சொன்னது போல அறிவியல் கொள்கைகள் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு செய்யும் இந்த சிகிச்சை இன்றும் வெற்றிகரமாக தனது பணியை செய்து வருகிறது.
 
 
தீர்வுகள்

நோயாளிகளுக்கு குறிப்பிட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்தானது குறிப்பிட்ட நெறிமுறைகளின் படி தயார் செய்யும் பொருள் என கூறலாம்.இதை மருந்து என்றோ,மாத்திரை என்றோ,வலிநிவாரணி என்றோ கூறமுடியாது.நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் இந்த பொருள் நோயிலிருந்து விடுபட வைக்கிறது.

ஹோமியோபதி மருத்துவர்கள் இரண்டு முறைகளில் நோயாளியின் நோயினை பகுத்து மருந்துகளை வழங்குகிறார்கள்.இதனை மெட்ரியா மெடிக்கா மற்றும் ரெப்பரியட்யோரில் என கூறுவதுண்டு.

ஹோமியோபதி மெட்ரியா,மெடிக்கா மருத்துவ வகைபடுத்தி ஆங்கில வரிசையில் குறிப்பிட்டுள்ளனர்.இதனை நிவாரண அறிகுறி வகையால் வரிசைபடுத்தியுள்ளனர்.இதன் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹோமியோபதி பகுப்பில் நோய்களை வகைப்படுத்தியும், வரிசைப்படுத்தியும் அதற்கான அறிகுறிகளையும் சேர்த்து அதற்கான நிவாரணியையும் குறிப்பிடிருப்பர்.

ஹோமியோபதி விலங்குகள் தாவரம்,தாதுக்கள்,செயற்கையான பொருட்கள் ஆகியவற்றில் இருந்து வரும் பொருள்கள் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.சோடிய குளோரைடு,அல்லது சமையல் உப்பு அல்லது பாம்பின் விஷம் ஒபியம் மற்றும் தைரோடினம் மற்றும் ஹோமியோபதி முறையில் “நோசோட்ஸ்”முறை அதாவது நோயுற்ற பொருட்களால் ஆன மலம்,சிறுநீர்,சுவாச உறுப்புகளின் கழிவு,இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து எடுக்கப்படுகிறது.இதனை ஆரோக்கியமான விலங்குகளில் இருந்து எடுத்தால் “சாரகோட்ஸ்”என்று கூறுவர்.
 
தயாரிக்கும் முறை

ஹோமியோபதி மருந்து தயாரிக்க ஓடு,உரல் மற்றும் அம்மி பயன்படுத்தப்படுகிறது.உரலில் உலக்கை மூலம் இடித்து கடைதல், அம்மியில்,,அரைக்கும் கல்லைவைத்து அரைத்து மருந்து தயாரிக்கப்படுகிறது.

ஹோமியோபதி முறையில் மருந்து தயாரிப்பவர்கள் “டைனமைசேசன்”அல்லது “பொட்டன்சியேசன்” என்ற முறையில் ஆல்கஹால் அல்லது சுத்தமான நீரில் கலந்து நெகிழ்ச்சியான வளைந்து கொடுக்ககூடிய புட்டியில் போட்டு அதனை வேகமாக பத்துமுறை ஆட்டி அசைத்துக்குலுக்கி கொடுப்பர்.இதனை “சக்சன்”என்பர்.

டாக்டர்.சாமுவேல் ஹானிமேன் கூறும் போது நோயை குணமாக்க கொடுக்ககூடிய மருந்தானது அதன் அதிகரிக்கப்பட்ட வீரியத்தால் பக்கவிளைவுகள் உண்டாக்க நேரிடும்.இதனை தவிர்க்க வீரியத்தை குறைக்க வேண்டும்.இதற்காக ஹானிமேன் புதிய கண்டுபிடிப்பை உண்டாக்கினார் இது குதிரை இறக்கை போன்று தோலினால் செய்யப்பட்டது ஆகும்.ஒருபுறம் குதிரை முடியினால் மூடப்பட்டிருந்தது.இதனுள் குவார்ட்டிஸ்,சிற்பி ஓடு ஆகியவைகளை சர்க்கரை கலந்து அறைத்தனர்.இதனை “டிரைட்டியுசன்” என அழைத்தனர்.
 
வீரியப்படுத்தும் முறை

டாக்டர்.சாமுவேல் ஹானிமேன் ஹோமியோபதி மருத்துவத்தில் லாக்ரதமிக் தகுதி அளவுகளை பயன்படுத்தினார்.அவர் “சி” அளவுமுறையை உருவாக்கி, இதன் மூலம் அம்மருந்தினை ஒன்றுக்கு நூறு என வீரியத்தை குறைத்தார்.மற்றும் “2சி“ முறையால் மருந்தின் வீரியத்தை நூறு மடங்காக குறைத்து, அதன்பின்னர் அதனை மீண்டும் நூறுமடங்காக குறைத்து, ஆக இம்முறையில் 10,000 முறையாக அதன் வீரியத்தை குறைத்தார்.இது போன்று “6சி” என்பது ஒருமருந்தினை இம்முறையால் ஆறுமுறை அதன் அடர்த்தியை குறைப்பதாகும்.இதன் மூலமாக மூலப்பொருள் 100−6=10−12 ஓர்பகுதி ஒருடிரிலியனாக மாறுகிறது(1/1,000,000,000,000)இவ்வாறு மருந்தின் வீரியத்தை அதிகமாக குறைக்க முடியும்.ஹோமியோபதி முறையால் ஒருதிரவத்தின் அடர்த்தியை குறைக்கும் பொழுது அது வீரியமாகிறது.அதனால் அந்த மருந்துகள் சுகம் தருகிறது.இம்முறையால் அடர்த்தியில்லாத மருந்து சுத்தமான நீர்,சர்க்கரை,சாரயம் போன்று உள்ளது.

டாக்டர்.சாமுவேல் ஹானிமேன் நிறைய தேவைகளுக்கு 30சி அடர்த்தியினை பயன்படுத்தினார்கள்.மருந்துகளை எண்ணமுடியாத அளவுக்கு அடர்த்தியினை குறைத்தார்கள் இதன் மூலம் அணு அல்லது மாலிக்குள் அல்லது மிகச்சின்ன வேதியல் பொருளாக உண்டு பண்ணி பயன்படுத்தினார்கள். ”12சி”முறையில் ஒரு மாலிக்குகளில் குறைக்கும் முறை விரும்பத்தகுந்த காரணத்திற்கு வழிவகுத்தது.
 
நிரூபனம்

டாக்டர்.சாமுவேல் ஹானிமேன் ஹோமியோபதி மருந்தினை தனக்கும், பிறர்க்கும் மற்ற நோயாளிகளுக்கும் பல ஆண்டுகள் கொடுத்து பரிசோதனை செய்தார்.இவரது பரிசோதனையில் மருந்தினை நோயாளிகளுக்கு நிவாரணியாக கொடுக்கவில்லை ஏனெனில் மருந்துகள் நோய்க்கு அறிகுறிகளை உண்டாக்குகின்றன.இந்த அறிகுறிகள் நோயின் காரணமாக உண்டானதா அல்லது கொடுக்கப்பட்ட மருந்தினால் உண்டானதா என அவருக்கு தெரியவில்லை.எனவே தான் இந்த சோதனையில் நோயாளிகள் சேர்க்கப்படவில்லை.ஆகவே எந்த நோய்க்கு எந்த மருந்து என கண்டறிய வேண்டும்.இதனை ஜெர்மன் பொழியில் “புரூபங்”என அழைத்தனர்.”புரூபங்” என்றால் சோதனை என்று பொருள் ஆகும்.
 
ஆக்க கூறுகள்

ஹோமியோபதி மருந்துகளில் சேர்க்கப்படும் கூட்டு பொருள்கள் பற்றி பயனாளிகள் அறிந்துகொள்ளும போது அவர்களுக்கு அறுவெறுப்பை உண்டாக்கும்.ஹோமியோபதி முறையில் தயாரிக்கப்படும்,மருந்தில் சேர்க்கப்படும் ஆக்க கூறுகள் தயார்படுத்திய உடன் மிக குறைவான அளவு அல்லது அதன் தன்மையில் இல்லாமலும் இருக்கலாம்.
 
தொடர்பான நடைமுறைகள்

 

வழிமுறைகள்

ஜானன் ஜோசப் வில்லியம் லக்ஸ் என்பவர் ‘ஈசோபதி’ என்ற முறையினை 1830 ல் கண்டுபிடித்தார்.ஈசோபதி என்கிற முறையானது,ஓமியோபதி முறையில் வேறுபட்டது ஆகும்.நோயினை உண்டாக்கும் காரணிகளிருந்தோ,அல்லது நோயினால் ஏற்படும் விளைவுகளிருந்தோ கழிவுப்பொருட்களில் உண்டாக்கபடுகிறது.இதனை ஹோமியோபதி தடுப்பு முறை என அழைப்பர்.
 
 மலர் மருத்துவம்

ஹோமியோபதி மருத்துவர் எட்வர்டு பேக் என்பவரால் கண்டுபிடிக்கபட்டது மலர்மருத்துவம்.அதாவது பூக்களை பறித்து அதனை நீரில் இட்டு,சூரிய ஒளியில் வைப்பதாகும்.இந்த முறையில் அளிக்கப்படும் சிகிச்சை ‘முக்கியமான சக்தி’ ஹோமியோபதி மருந்து போன்று இருந்தது.ஆனால் இதன் தயாரிப்பு முறை வேறு விதமாக இருந்தது.பேக் பூக்களின் மூலம் கொடுக்கப்படும் சிகிச்சை மிகவும் மென்மையாக, நெகிழ்ச்சியாக இருந்தது.இம்முறை சிகிச்சை அதிக அளவில் பயனளிக்காமல் இருந்தது.பூக்களின் மூலம் ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாகவும்,மருத்துவ ரீதியாகவும் நிரூப்பிக்கபடவில்லை.
 
மின் ஹோமியோபதி

மின் ஹோமியோபதி,19ம் நூற்றாண்டுகளில் மின் ஆற்றலோடு சேர்த்து வைத்தியம் செய்தனர்.
 

 

 

தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனம் கொல்கத்தா

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் நாள் கொல்கத்தாவில் (NIH)தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனம் துவங்கபட்டது.

இந்த நிறுவனம் ஹோமியோபதியில் பட்ட வகுப்புகள் 1987 முதலும்,பட்ட மேற்படிப்பு வகுப்புகள் 1998-99 முதலும் நடத்தி வருகின்றது.இந்த நிறுவனம்(NIH)மேற்கு வங்க பலகலைகழகத்தில் உடல் நல அறிவியல் துறையுடன் 2004 – 2005 முதல் இணைந்து நடத்திவருகிறது.NIH ஆசிரியர்களுக்கும்,மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

BHMS படிப்பு,51/2 ஆண்டுகள் படிப்பின் காலம் ஆகும்.(இதில் 1 வருடம் கண்டிப்பாக நேரடியாக நிறுவனத்தில் படிப்பது ஆகும்) M.D(HOM) படிப்பில் ஆர்கனான்,ரெப்ரட்டரி,மற்றும் மெட்டீரியா மெடிக்கா ஆகிய இதில் ஒன்றை விருப்பபாடமாக பயில வேண்டும்.ஒவ்வொரு பாடத்திற்கும் ஆறு இடங்களே உள்ளது.
 
 
ஆயுஸ் துறையின் வெளியீடுகள்
•ஆயுஸில் நோய் வாரியான தகவல்கள்
•ஆயுஸ் பற்றிய உண்மைகள் மற்றும் தொன்மங்கள்
•ஆயிஸ்ல் வழிகாட்டி மற்றும் தகவல் கல்வி தொடர்பு சாதனங்கள் சாதனங்கள்
 
ஹோமியோபதியின் தோற்றம்


நாட்டில் பல்வேறு மருத்துவ முறைகள் கையாளப்பட்டு வருகிறது.அதில் ஒருவகை மருத்துவம்தான் ஹோமியோபதி என்பதாகும்.புகழ் வாய்ந்த ஜெர்மன் நாட்டின் மருத்துவரும் வேதியியல் நிபுணருமான டாக்டர் சாமுவேல் ஹானிமென் (1755-1843) என்பவர் தான.
 homeopathy

இம்மருத்துவத்தின் தந்தையாவார்.இவர் முதலில் மருத்துவத்தில் பட்டம் பெற்று பெருவெற்றியும் புகழும் பெற்று பல ஆண்டுகளாக மருத்துவ தொழில் செய்து வந்தார். இருப்பினும் அவர் காலத்திய மருத்துவ ஆய்வு முறையானது,மக்கள் நோயுற்றபோது அவர்களுக்கு கெட்ட இரத்தம் தான் நோய்க்கு காரணம் என்று –அந்நோயாளி மீது அட்டையை விட்டு உறிஞ்ச செய்வது,இருதயத்திற்குச் செல்லும் சிரை என்று சொல்லப்படும் இரத்தக் குழாய்களை வெட்டி விட்டு இரத்தத்தை வடியவிடுவது –என்ற கொடிய சிகிச்சையால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.அந்தக்கால வரலாற்றில் பேரறிவாளர்களான கோத்தெ,ராப்ஹேல்,பைரன் பிரபு,ஜார்ஜ் வாஹிங்டன் ஆகியவர்களும் இந்த ஆட்கொல்லி மருத்துவ முறைக்கு பலியானார்கள்.

இவற்றையெல்லாம் ஆராய்ந்தறிந்த டாக்டர் ஹானிமென்-மருத்துவ தொழில் மீது கடும் வெறுப்புற்று அதைவிட்டு விட்டார்.ஆனாலும் அவரது மனம் எண்ணம் எல்லாம் தேடலில் இறங்கியது.மருத்துவம் செய்வதில் அறிவியல் முறையாக வெளிப்படுத்துவதற்குரிய அருஞ்செயல் ஒன்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.எதையும் தொடர்ந்து நுணுக்கமாக ஆராய்ச்சி செய்வதையும்,அந்த ஆராய்ச்சியை அதை சோதனை செய்வதையும் முழுமையாக தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார்.அப்போது மருத்துவ நூல் ஒன்றை மொழி பெயர்ப்பு செய்தபோது சிங்கோணி எனும் மரப்பட்டை மிகவும் கசப்புத் தன்மை வாய்ந்தது என்றும்,அப்பட்டை மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது என்பதை அறிந்தார்.சிங்கோனா பட்டை மலேரியா காய்ச்சலை ஏன் எப்படி குணப்படுத்துகிறது என்பதை சோதனை செய்து கண்டறிய ஆர்வம் கொண்ட அவர் அதை கொஞ்சம் உள்ளுக்கு சாப்பிட்டுப் பார்த்தார்.அவர் ஆச்சரியமும் வியக்கும் அளவிற்கு படிப்படியாக அவருக்கு அதிகமான அளவில் மலேரியா காய்ச்சலுக்குரிய நிலை,குளிர்,காய்ச்சல் ஏற்பட்டதை அவர் உணர்ந்தார். அதைத் தொடர்ந்து மற்ற மருந்து சரக்குகளையும் உட்கொண்டும்,பயன்படுத்தியும் சோதனைகள் செய்யத் தொடங்கினார்.அதன் விளைவாக ஒவ்வொரு மருந்துச் சரக்கும் உண்டாக்கும் விளைவை ,அதே போன்ற அதே மருந்து சரக்கு குணப்படுத்தும் என்பன ஆய்வின் மூலம் கண்டு பிடித்தார்.இப்படியே பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து 15 ஆண்டுகளாக மேற்கொண்டார்.இறுதியில் இந்த நியதியை உறுதிபடுத்தினார்.

அதாவது ஒரு எட்டிக்காயின் விசம் அதைச்சாப்பிட்டவருக்கு கெடுதல் ஏற்படுத்துகிறது என்றால்,அதே எட்டிக்காய் விசத்தை மருந்தாக்கி அணு அளவிற்கு கொடுத்தால் எட்டிக்காயை சாப்பிட்டவரின் உடலையும்,மனதையும் குணமாக்குகிறது.

SIMILIA SIMILIBUS CURENTER, இன்னும் திருக்குறள் வடிவில் சொல்லப்போனால் “எப்பொருள் எவ்வினை செய்யுமோ அப்பொருளின் அணுவினால் அவ்வினையகற்று”-எனலாம்.அதனையொத்த நோயொன்றை விளைவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள அந்த மருந்துச் சரக்கு மூலமாக அதே நோயை குணப்படுத்தும் என்பதே இதன் பொருளாகும்.
 
ஹோமியோபதி மருத்துவ சோதனை முறை

ஹோமியோபதி மருத்துவ சோதனை முறை என்பது முதலில் மருந்தை மனிதனுக்கு கொடுத்து சோதிக்கப்படுகிறது. அச்சோதனை மெய்பித்த பின்புதான் மற்றவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.அந்த வகையில் டாக்டர் ஹானிமென் முதன் முதலில் தனக்கு தானே மருந்து சாப்பிட்டு சோதித்து உணர்ந்து கொண்டார்.அடுத்து சோதனையில் தேர்வு செய்த மருந்தை தன் குடும்பத்தாருக்கும் அதன்பின் நண்பர்களுக்கும் கொடுத்து உறுதி செய்து கொண்டார்.அதன் பின்பு தான் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தார்.இந்த சோதனை அறிவியல் முறையானதாகும்.
 
ஹோமியோபதி மருந்து கண்டறியப்பட்ட விதம்

நாம் ஏதேனும் ஒரு மருந்து அதிகமாக உட்கொண்டால் அதுவே நோயாகிவிடுகிறது என்பதையும்-அதே மருந்து சரக்கை அணுவாக்கி மிகச்சிறிய அளவில் கொடுத்தால் அந்நோய் குணமாகிறது என்பதையும் பரிசோதனைகள் மூலம் டாக்டர் ஹானிமென் கண்டறிதார்.மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதி தனிச் சிறப்பை பெற்றுள்ளது.இம்மருந்துகளால் பக்கவிளைவோ எதிர்விளைவோ ஏதும் இல்லை.மாறாக உடலில் உள்ள நோயின் விசத்தன்மையை முழுமையாக குணப்படுத்திவிடும்.
 
மருந்தை வீரியப்படுத்தல்

ஒரு திரவப்பொருளான மருது சரக்கு 99-பங்கும் மதுசாரம் 1-பங்கும் ஆக சேர்த்து 10-முறை குழுக்கினால் அது 1-வது வீரியம்.இந்த 1-வது வீரிய மருந்திலிருந்து 1-பங்கும் மதுசாரம் 99-பங்கும் சேர்த்து 10 முறை குழுக்கினால் அது 2-வது வீரியம்.இப்படியே 100,000-வது வீரியம் வரையிலும் மருந்து தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு வீரிய மூட்டப்பட்ட மருதுகள் தான் மிகுந்த ஆற்றலுடன்,அதுவும் சிறிய அணுவிலுள்ளதாக, பேராற்றல் வாய்ந்த மருந்தாக மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.

ஹோமியோபதி மருந்துகளை மாற்றியோ(அ)அதிகமாக உட்கொண்டு விட்டாலோ பின்விளைவுகள் ஏதும் இருக்காது. இம்மருத்துவ முறையில் பக்கவிளைவுகள், எதிர்விளைவுகள், விசத்தன்மை, ஒவ்வாமை போன்ற தீயக்குணங்கள் எதுவும் கிடையாது.இம்மருந்துகள் “தாய்த்திரவம்” என்றும்,” வீரியப்படுத்தப்பட்ட மருந்து “என்றும் இருவகைகளாக தயாரிக்கப்படுகிறது. இம்மருந்துகளை மருத்துவரீதியாக தயாரிக்கப்பட்ட பால் சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட கடுகளவு உருண்டைகளில் கலந்து கொடுக்கப்படுகிறது.இம்மருந்து உருண்டை மிகவும் இனிப்பு சுவையாக இருப்பதினால் பிறந்த குழந்தைக்கு கூட நாக்கின் வழியாக கொடுக்கலாம்.மேலும் ஹோமியோபதி மருந்துகளுக்கு காலாவதி என்பதும் கிடையாது.உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) –ஹோமியோ மருத்துவத்தை அங்கீகரித்துள்ளது.
 
ஹோமியோபதி மருந்தின் செயல்பாடுகள்

ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாடுகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.அதாவது ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந்த போதிலும்-இவைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து வேலைசெய்யாது.சில மருந்துகள் மற்ற மருந்துகளுடன் இணைந்து செயல்படுகிறது.சில மருந்துகள் மருந்தாகவும்,சில மருந்துகள் பகை மருந்தாகவும் செயல்படுகிறது.எனவே ஒரு மருந்தை கொடுக்கும் போது அதோடு வேறு ஒரு ஹோமியோ மருந்து இணை மருந்தாக கொடுக்க வேண்டி வந்தால் அந்த மருந்து பகை மருந்தா,நட்பு மருந்தா,அல்லது முறிவு மருந்தா என பார்த்து கொடுக்கப்படுகிறது.மருந்து செயல்பாடுகள் குறித்து ஹோமியோ மெட்டீரியா மெடிக்கா புத்தகத்தில் முழு விளக்கங்களும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
 
கடுமையான நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவம் செய்யமுடியுமா?

ஆம் முடியும். எந்த ஒரு கடுமையான நோய்கள் திடீரென்று ஏற்படினும் மனக்குறி,நோய்க்குறி அடிப்படையில் மருந்து தேர்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சையளித்து குணமாக்கப்படுகிறது.
 
ஹோமியோபதி மருந்தின் பயன்பாடுகள்

ஹோமியோபதி முறையிலான மருத்துவத்தில் மனம் சார்ந்த, உடல் சார்ந்த, உறுப்புகள் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், சின்னம்மை, காலரா, ஆஸ்த்மா, டிப்தீரியா, அமிபியா, இன்புளுன்ஷா, காக்குவான், இருமல்,மணல்வாரி, இளம்பிள்ளைவாதம்,டெட்டனஸ் ஆகிய கொடிய நோய்கள் வராமலிருக்க தடுப்பு மருந்தாகவும் ஹோமியோபதி மருந்து சிறப்பாக பயன்படுகிறது.கொடிய நோயான எய்ட்ஸ்-மற்றும் பால்வினை நோய்களுக்கும் ஹோமியோ மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால்-அனைத்து நோய்களுக்கும் அடிப்படையான காரணம் மனிதரின் மனநிலையே எனபதால், நோயாளிகளின் மனக்குறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்மருத்துவ முறைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன்-இரத்தப்பரிசோதனை –எதுவும் அவ்வளவாக தேவைப்படுவதில்லை. இம்மருத்துவம் மிகவும் எளிமையானது. நிரந்தர குணமளிக்க கூடியது.நோயின் விசத்தன்மையை முற்றிலும் நீக்கக்கூடியது.இம்மருத்துவம் மக்களுக்கான மருத்துவம் ஆகும்.
 
இந்தியாவில் ஹோமியோ

1839-ம் ஆண்டு முதற்கொண்டே ஹோமியோபதி இந்தியாவில் பரவத்தொடங்கியது.கல்கத்தா ,இந்தியாவின் ஹோமியோபதி மையமாக மாறிவிட்டது.உலகத்திலுள்ள ஹோமியோபதி மருத்துவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களை இன்றைய இந்தியா கொண்டுள்ளது.இந்தியாவில் 94-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற ஹோமியோபதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.ஹோமியோபதி மைய மன்றம் (“CENTRAL COUNCIL OF HOMOEOPATHI”) 1974-ல் அரசால் நியமனம் செய்யப்பட்டது.இந்திய மருத்துவ முறைகளின் மைய ஆராய்ச்சி மன்றம் (“CENTRAL COUNCIL OF RESEARCH IN INDIAN SYSTEM OF MEDICINE AND HOMOEOPATHI”) நவம்பர் 1969-ல் நிறுவப்பட்டது.
 

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies