தாய்க்கு உடல்நலக்குறைவிருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா ?
20 Mar,2014
தாய்ப்பால்
தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்
தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு உன்னதமான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.
•குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்புத் தன்மையை பெருக்கும்.
•தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும்.
•பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதவீதம் பாதுகாப்பானது.
•தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
•தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கேன்சர் ,சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதத் தடுக்கிறது.
•தாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும்.
•தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
•தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தைபிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல்எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேறுக்குப்பின் ஏற்படும் இரத்தப்போக்கையும் குறைக்க உதவுகிறது.
•குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது.
•தாய்ப்பால் எல்லாவற்றிலும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்சேய் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்பட உதவிசெய்கிறது. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும், தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.
எப்பொழுது தாய்ப்பால் கொடுக்க துவங்க வேண்டும்?
குழந்தை பிறந்ததும் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க துவங்கிவிட வேண்டும். நன்கு ஈரத்துணியால் துடைத்து எடுக்கப்பட்ட குழந்தையை தாய் தன் மார்போடு அணைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் தாயின் மார்பிலிருந்து பால்சுரப்பதை தூண்டுவேதாடு தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பை ஏற்படுத்தும்.
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பத்ற்கான காரண்ங்கள்
இதற்கு நான்கு முதன்மைக் காரணங்களுண்டு.
1.குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுறுசுறுப்பாக இருக்கும்.
2.இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.
3.சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு. இதில் முழுக்க குழந்தைக்குத் தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன. இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சீம்பால் கிட்டத்தட்ட ஒரு நோய்தடுப்பு மருந்து போன்றது.
4.தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் கண்டு, ஏற்படும் வலியைத் தடுக்கிறது. அதே போல் குழந்தை பேறுக்குப்பின் எற்படும் உதிரப்போக்கை குறைக்கிறது.
சிசேரியன் எனப்படும், அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயும், தாய்ப்பால் கொடுக்கலாம்.
இவ்வகை அறுவைசிகிச்சை தாய்பால் கொடுக்கும் தன்மையை பாதிப்பதில்லை.
•இப்படிப்பட்டவர் குழந்தைப் பிறந்த (அறுவை சிகிச்சைக்குப்பின்) 4 மணி நேரம் கழித்து தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்கமருந்தின் விளைவுகளிலிருந்து சாதாரண நிலைக்கு திரும்பியவுடன் பால் கொடுக்கலாம்.
•படுத்தவண்ணமாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது உட்கார்ந்த வண்ணமாக குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுக்களாம்.
எவ்வளவு காலம் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்?
பிரத்தியேகமாக முதல் ஆறுமாதங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.
தாய்ப்பால் கொடுத்தபின் மார்பிலிருந்து தாய்ப்பால் கசிந்தால் என்ன செய்யவேண்டும் ?
இது பொதுவாக அனைத்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனை.
பால்கசிவு ஏற்படின் தாயானவள் தன் முழங்கை முட்டியினால் மார்பகங்களின் பக்கவாட்டில் அழுத்தம் செலுத்த வேண்டும். இப்படிச் செய்வதனால் பால் கசிவு ஏற்படுவதைக் தடுக்கலாம்.
தாய்க்கு உடல்நலக்குறைவிருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா ?
ஆம் கொடுக்கலாம், பெரும்பாலான நோய்கள் குழந்தையை பாதிப்பதில்லை. சொல்லப்போனால் டைபாய்டு, மலேரியா காய்ச்சல், எலும்புறுக்கிநோய், மஞ்சள்காமாலை அல்லது தொழுநோய் போன்ற நோய்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் தாய்ப்பால் தருவதை நிறுத்த தேவையில்லை.
தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)
http://www.youtube.com/watch?v=fDQhGgY_NCY