பித்த வெடிப்பை போக்கும் சிகிச்சைகள்!
பாதங்கள் பிளவு படுவதை பித்த வெடிப்பு என்று அழைப்போம். அவை தொல்லை மற்றும் வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் உங்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர். இருப்பினும் உங்கள் பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகளும் இருக்கத் தான் செய்கிறது. இதனால் உங்கள் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகளும் உண்டாகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம். உங்கள்
பாதங்களை நல்ல அக்கறையுடன் கவனித்து கொண்டு பித்த வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும். அப்படி செய்யாமல், வலி வரும் வரை காத்திருந்து அதன் பின் அதற்கு சிகிச்சை எடுக்கும் கஷ்டம் எதற்கு? ஒரு வேளை, பித்த வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் முயற்சியை நீங்கள் கடந்திருந்து ஏற்கனவே வலி உண்டாகியிருந்தால், அதற்கு பல வீட்டு சிகிச்சைகள் இருக்கிறது. அவைகளை பின்பற்றினால் உங்கள் பித்த வெடிப்புகள் குணமாகும். உங்கள் பித்த வெடிப்புகள் குணமான பிறகு, அது மீண்டும் வராமல் தடுக்க அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். உங்கள் மொத்த எடையையும் தாங்கும் விதமாக உங்கள் பாதத்தின் தோல் கடுமையானதாக இருக்கும். மெருகேற்ற உதவும் கல்/ஸ்கரப்பர் பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது நுரைக்கல்லை பயன்படுத்தி உங்கள் பாதத்தில் உள்ள செத்த அணுக்களை மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவிக் கொள்ளுங்கள். அதனை பாதங்கள் உறிஞ்சிட வேண்டும் என்பதால் ஒரு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். ஈரப்பதத்தை நீட்டிக்க செய்திட இரவு நேரங்களில், ஏன் பகல் முழுவதும் கூட பாதங்களுக்கு காலுறைகளை அணிவித்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு இதனை தினமும் ஒரு முறை செய்தால், அதனால் ஏற்பட போகும் மாற்றத்தை கண்டு வியப்பீர்கள். பாத மாஸ்க் ஒரு பெரிய வாளி ஒன்றை எடுத்து அதில் வெப்பமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் பாதங்களை அதனுள் முக்கிக் கொள்ளுங்கள். உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரின் பயன்பாடும் பின் தேவைப்படும். 15-20 நிமிடங்கள் வரை உங்கள் பாதங்கள் இந்த நீரில் ஊறட்டும். பின் உரைக்கல் அல்லது பாத ஸ்கரப்பரை கொண்டு உங்கள் பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும். 1 டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிடுங்கல். தேன் கலவை உங்கள் பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க தேன் பெரிதும் உதவி செய்யும். மேலும் தேனில் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளது. 2-3 டீஸ்பூன் அரிசியை எடுத்து, அதனுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் பித்த வெடிப்புடன் வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின் அந்த பேஸ்ட்டை வைத்து மெதுவாக பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யை கூட பாதங்களில் மெதுவாக தடவலாம். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடுங்கள். இதனை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், உங்கள் பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும். குறிப்பு மேற்கூறியவற்றை தினமும் நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால், நிச்சயம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக இருக்கும்.
பாதங்களையும் கவனிங்கஸ
நாம் முகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேயளவு, பாதங்களை பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உடல் எடை முழுவதையும் தாங்குபவை பாதங்கள். எனவே, பாதங்களின் கீழ்ப்பகுதியில், சிராய்ப்பு, வீக்கம், வெடிப்பு இருக்கிறதா என்று, அவ்வப்போது கவனிக்க வேண்டும். பாதங்களின் சரும நிறம் மாறாமல் இருக்க வேண்டும். ஏதேனும் மாறுதல் தெரிந்தாலோ, கால் விரல்களுக்கு நடுவில் அல்லது கீழே வலி, அரிப்பு அல்லது தொற்று நோய் பாதிப்பு இருந்தாலோ மருத்துவரை அணுகுங்கள். முக்கியமாக, சர்க்கரை நோயாளிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காலை, மாலை இரு வேளையும், பாதங்களை டெட்டால்
கலந்த நீரில் சுத்தம் செய்து, மாய்சரைசர் லோஷன் பூசவும். நகங்களை ஒட்ட வெட்டாமல்,நேராக வெட்டி தேய்க்க வேண்டும். இதனால், நகக் கண்களில் தொற்று ஏற்படுவதும், ஓரங்களில் உள்ள தசைகள், உட்பக்கமாக வளர்ந்து வலியை உண்டாக்குவதும் தவிர்க்கப்படும்.
பெடிக்யுர்: மாதத்திற்கு ஒரு முறை, அழகு நிலையம் சென்று, பெடிக்யுர் செய்துகொள்ளுங்கள். ஆனால், பெடிக்யுரில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள் கொதி நீரில் போட்டு சுத்தம் செய்யப்பட்டதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒரே இடத்தில் நின்றபடி, இரண்டு பாதங்களையும் மாறிமாறி, எதிர் எதிர் பக்கமாக ஐந்து முறை வீதம் சுழற்றவும். மேலும், மாடி படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவதும் நல்லது. தினசரி பாதங்களை உப்பு கலந்த குளிர்ந்த நீர் மற்றும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் மூழ்கும்படி வைத்து எடுங்கள். மேற்குறிப்பிட்டவைகளை முழுமையாக கடைபிடித்து வந்தால், பாதவலி, முதுகு வலி மற்றும் மூட்டு வலி நீங்கும்.
பொருத்தமான காலனியை தேர்ந்தெடுங்கள் தட்டையான பாதம், மூட்டுவலி, குதிகால் மற்றும் இடுப்பு வலிக்கு காரண மாகிறது. இத்தகைய பாதங்களைக் கொண்டோர், செருப்பு தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருப்பது அவசியம்.
சிலரின் பாதங்கள் அதிக வளர்ச்சியடைந்து அகலமாக இருக்கும். இவர்களுக்கு மூட்டு மற்றும் தசை நார்களில் வலி உண்டாகலாம். அதனால், அவர்கள் சற்றே தட்டையான, காற்றோட் டமுள்ள காலணிகளை உபயோகிப்பது நல்லது.
கால்கள் மீது அதிக எடை அழுந்துவதால், ஆணிக்கால் நோய் ஏற்படுகிறது. இது, கால்களை தரையில் அழுந்த வைத்து நடக்க முடியாத அளவுக்கு, வேதனையை ஏற்படுத்தும்.
தோல் தடிப்பு, காய்ப்பு, நீர் கொப்புளங்கள் போன்ற வியாதிகளும் பாதங்களை சீர்குலைத்து விடும். பாத எலும்புகள் பெரியதாக வளர்ந்து விட்டாலும், பாதங்களில் வலி ஏற்பட்டு, நடப்பது கஷ்டம். கூர்மையான, மெல்லிய, உயரமுடைய செருப்புகளை அணிவதால், இப்படி ஏற்படுகிறது. பாதத்தின் தோல் தடிமனாகி விட்டாலும், பாதங்களில் வலி ஏற்படும். அதிக உடல் எடை மற்றும் தேய்ந்து போன செருப்புகளை உபயோகிப்பதால், இப்பிரச்னை ஏற்படுகிறது. பூஞ்சை, தொற்று நோய், அரிப்பு, சிறு சிறு கொப்புளங்கள் மற்றும் குதிகாலில் வெடிப்பு ஆகியவை பாதங்களில் ஏற்படும் பொதுவான பிரச்னை. இவற்றிலிருந்து விடுபட கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும். ஒரு நாளில், இரண்டு முறை பாதங்களை சுடுநீரில் கழுவி, நன்றாக துடைக்கவும். காட்டன் காலுறைகளையே உபயோகிக்க வேண்டும். அவை, எளிதில் வியர்வையை உறிஞ்சிக் கொள்ளும். நீச்சல் குளத்துக்கு அருகில், வெறும் காலுடன் நடக்காதீர். ஏனெனில், மற்றவர்கள் காலில் இருந்து நோய் தொற்ற வாய்ப்புள்ளது. நீச்சலுக்குப் பின் சுத்தமான நீரில் அவசியம் குளிக்கவும்.
நடைபயிற்சி: தினமும் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதனால், பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், பாதங்களின் ரத்த ஓட்டம் சீரடைந்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும், உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.