பைக்கில் ஆபிஸ் போறவங்களா நீங்க? முதல்ல இத படிங்கஸ
தற்போது பஸ்களில் பயணித்து ஆபிஸ் செல்வோரின் எண்ணிக்கையை விட, பைக்கில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, பலருக்கு பைக் வாங்குவது ஒரு பெரிய கனவாக இருக்கும். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான். பெண்கள் கூட அலுவலகத்திற்கு பைக்கில் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி பைக்கில் செல்பவர்கள், தவறாமல் சருமம் மற்றும் கூந்தலை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். ஏனெனில் பைக்கில் செல்பவர்கள் காற்று, சூரிய வெப்பம், மழை என்று எந்த காலநிலையிலும் ஓட்டுவதால், அவர்கள் ஒருசிலவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக பைக்கில் பயணிப்பவர்கள் முகப்பரு, பிம்பிள், பழுப்பு நிற சருமம் என்று பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுமட்டுமின்றி அவர்களது கூந்தல், மென்மையிழந்து
வறட்சியாக இருக்கும். எனவே பைக் ஓட்டுபவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் அழகான சருமத்தைப் பெறலாம். இந்த குறிப்புகள் அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையே. கிளின்சிங்கை தினமும் தவறாமல் செய்து வர வேண்டும். இதனால் அது சருமத்துளைகளைத் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கிவிடும். அதற்கு ரோஸ் வாட்டர் அல்லது பாலை, பஞ்சுருண்டையில் நனைத்து, முகம் மற்றும் கைகளை துடைக்க வேண்டும். கிளின்சிங்கை தொடர்ந்து டோனிங் செய்ய வேண்டும். இது பைக் ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான். டோனிங் செய்வதால் முகப்பரு நீங்குவதோடு, திறந்த சருமத்துளைகள் முடும். அதற்கு பழங்கள் அல்லது காய்கறிகளின் சாற்றினை, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். எவ்வளவு தான் முகம் மற்றும் கைகளுக்கு ஸ்கார்ப் போட்டுக் கொண்டாலும், சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது. குறிப்பாக கண்கள், முகம், கழுத்து, முழங்கை, காது மற்றும் பாதங்களுக்கு மறக்காமல் தடவ வேண்டும். இதனால் சூரியனின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும். பெண்கள் பைக் ஓட்டும் போது, சன் ஸ்க்ரீன் தடவிய பின்னர், ஃபௌண்டேஷனை ஒரு கோட்டிங் கொடுக்க வேண்டும். பைக் ஓட்டும் போது, காற்று மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு, கை மற்றும் முகத்திற்கு ஸ்கார்ப் கட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பைக் ஓட்டும் போது, தூசிகள் அதிகம் சருமத்தில் பட்டால், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே முகத்திற்கு துணியையும், கைகளுக்கு மறக்காமல் கிளவுஸையும் அணிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக உதடுகளுக்கு அதிகப்படியான கவனம் வேண்டும். ஏனெனில் உதடுகளில் சூரியக்கதிர்கள் அதிகம் பட்டால், உதடுகள் விரைவில் நிறத்தை இழந்துவிடும். எனவே SPF உள்ள லிப் பாம்மை, லிப்ஸ்டிக் அல்லது லிப் கிளாஸ் போடும் முன் பயன்படுத்த வேண்டும். ஆண்கள் வெறும் SPF லிப் பாம்மை மட்டும் போட்டால் போதும். பைக் ஓட்டும் போது ஹெல்மெட் போடும் முன், தலையில் துணியை கட்டிக் கொள்ள வேண்டும். பெண்கள் பைக் ஓட்டும் போது முடியை விரித்துக் கொண்டு இல்லாமல், கூந்தலை கட்டிக் கொண்டு, துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். பைக் ஓட்டியப் பின், தவறாமல் தலையை சீவ வேண்டும் மற்றும் முகத்தை 3-4 முறை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உங்க கை அட்டு கருப்பாக இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி வெள்ளையாக்குங்கஸ
உடலிலேயே கைகள் தான் அதிக அளவில் சூரியக்கதிர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றன. அப்படி அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கத்தினால், கைகளானது கருமையடைந்துவிடுகின்றன. மேலும் நம் கைகளைப் பார்த்தால், நமக்கே அடையாளம் தெரியாது. அதுமட்டுமின்றி, முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இத்தகைய கருமையைப் போக்க வேண்டுமானால், கைகளுக்கும் சரியான பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது. அதுவும் எப்படி முகத்திற்கு மாஸ்க், ஃபேஷியல், கிளின்சிங் போன்றவற்றை செய்கிறோமோ, அதேப் போன்று கைகளுக்கும் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளியே செல்லும் போது சூரியக்கதிர்கள் கைகளில் படாதவாறு கைகளுக்கு பாதுகாப்பு கவசமான சன் ஸ்க்ரீன் லோசனை அணிந்து செல்ல வேண்டும். சரி, இப்போது
கைகளில் உள்ள கருமையைப் போக்கி, நல்ல வெள்ளையான கைகளைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கீழே கொடுத்துள்ளோம். படித்து முயற்சி செய்து பாருங்கள். பப்பாளியில் கிளின்சிங் தன்மை இருப்பதால், இதன் ஒரு துண்டைக் கொண்டு தினமும் கைகளை தேய்த்து, ஊற வைத்து கழுவி வந்தால், கைகளில் உள்ள கருமையானது நீங்கிவிடும். பாலும் சருமத்தில் கருமையைப் போக்க உதவும் ஒரு சிறந்த பொருள். அதற்கு காய்ச்சாத பாலை தினமும் குளிக்கும் முன், தடவி ஊற வைத்து, நீரில் காட்டனை நனைத்து துடைத்துவிட்டு, பின் குளிக்க செல்ல வேண்டும். கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை ஜெல்லில் சிறிது வெள்ளரிக்காய் சாறு அல்லது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து, கருமையான இடங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, இந்த முறையை வெளியே செல்லும் முன்பு செய்துவிட்டு சென்றால், கைகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். எலுமிச்சை சாற்றில் ப்ளீச்சிங் தன்மை இருந்தால், அந்த எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் தவறாமல் செய்து வந்தால், கைகள் வெள்ளையாகும். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சிறிது எடுத்து, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவற்றில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கைகளில் உள்ள கருமை நிறமானது மங்கும். மேற்கூறியவற்றை தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் கைகளில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி, எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், கைகளுக்கு சன் ஸ்க்ரீன் லோசனை தவறாமல் பயன்படுத்துங்கள்.