கருவில் இதயம் எப்படி உருவாகிறது?
தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருஉறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது.
தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக்குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது. இந்நிலையில் இதயத்தின்முன்னோடியான முதிரா அமைப்பானது ஒரு தீக்குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந்நிறமருந்தின் அளவில் இருக்கும்.
இதயமாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக இரண்டு மெல்லிய குழல்களாகத் தோன்றுகின்றன. பிறகு, இந்தஇரண்டு மெல்லிய குழல்களும் இணைந்து ஒரே குழலாக உருமாற்றம் பெறுகின்றன. அதன்பிறகு இந்தக் குழலானது நன்கு வளர்ச்சி பெறத்தொடங்குகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பிறகு இந்தக் குழல் போன்ற அமைப்பானது (S) என்ற ஆங்கில எழுத்து வடிவில் உருமாற்றம் அடைகிறது.
கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயம் இந்த நிலையை அடையும். இந்நிலையில் முதிராத குழல் பகுதியின் உடல் பகுதியானது (Truncus)
நன்கு வளரத் தொடங்குகிறது. இதயக் குழலின் உடல் பகுதியானது, முழுமையாக வளர்வதற்கு முன்னரே இதயத்தின் உள் அறைகளைப்பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் (Septal) உருவாகத் தொடங்குகின்றன. முதிர்ச்சி அடையாத இதயக் குழலின் உடல் பகுதியானது நன்கு வளர்ந்து மகா தமனியாகவும் (Aorta) நுரையீரல் தமனியாகவும் தனித்தனியாகப் பிரிக்கின்றன. இதயம் இயங்குவதற்குப் பக்கபலமாக ஓர் மின் அமைப்பும் அதனுள் செயல்படுகிறது. கருவுற்ற ஆறாவது வாரத்தில் இதயத்தின் மின்அமைப்புகள் (Electrical apparatus) உருவாக ஆரம்பிக்கின்றன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்ன தெரியுமா? இதயத்தின் மின் அமைப்புகள் உருவாதற்கு முன்னரே இதயமாவது துடிக்க தொடங்கிவிடுகிறது. கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயத்தின் தடுப்புசுவர்களும் நான்கு வெளிப்புற சுவர்களும் முழுமையாக உருவாகின்றன. இதயம் மற்றும் அதற்குள் இருக்கும் ரத்தக் குழாய்களின் வளர்ச்சி கருவுற்ற மூன்றாவது வாரம் தொடங்கி ஆறாவது வாரம் வரை நடைபெறுகிறது.
இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் பலவகையான வால்வுகள் அனைத்தும் இதயத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் குழல் தோன்றுதல், குழல்கள் இணைதல், இதயக்குழல் சுழலுதல், தடுப்புச்சுவர்கள் உருவாதல், ரத்தக்குழாய்கள் தோன்றுதல், ரத்தக் குழாய்கள் சுருங்குதல் போன்றவை மிகவும் முக்கியமான கட்டங்களாகக் கருதப்படுகின்றன.
இதயத்தின் அமைப்பும் அமைவிடமும்
கருவில் இருந்து இதயம் முழுமையாக உருப்பெற்றுவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதன் அளவு என்னவாக இருக்கும் என்று
நினைக்கிறீர்கள்? உங்களது கையை மூடிக் கொள்ளுங்கள். இந்நிலையில் கையின் அளவு என்னவோ அவ்வளவுதான் இதயத்தின் அளவும். சரியாகச் சொல்வதானால், நீளவாக்கில் 15 சென்டிமீட்டரும், குறுக்குவாக்கில் 10 சென்டிமீட்டரும் கொண்டது இதயம். மனித உடலில் மிகவும் வலிமையான தசைகளைக் கொண்டு இதயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 300 கிராமும், பெண்ணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 250 கிராமும் இருக்கும்.
ஒரு நாட்டின் நிர்வாகத்தைப் பொருத்தவரையில் பிரதமர், முதல்வர் போன்றோர் மிக முக்கியமானவர்கள். அதனால்தான் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக உள்ளன. அதேபோன்று உடலின் இயக்கத்துக்குத் தேவையான இன்றியமையாத பணியைச் செய்யும்
இதயத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளன. இதயத்துக்கு எவ்வகையான பாதிப்பும் ஏற்படாதவாறு மார்பகக்கூடு என்ற அமைப்பு பாதுகாக்கிறது. முன்பக்கம் நெஞ்சு எலும்பு, பின்பக்கம் முதுகு எலும்பு, பக்கவாட்டில் விலா எலும்புகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு இதயத்தைக் காக்கின்றன.
இதயத்தின் அடிப்பகுதியானது (BASE) மேல்புறமாகவும், கூர்மையான பகுதி கீழ்நோக்கியும் அமைந்து பார்ப்பதற்கு தலைகீழாகத் தொங்குவதுபோல் இதயம் காட்சி தருகிறது.
இதயத்தின் உள்ளே உள்ள அமைப்பை இன்னும் உன்னிப்பாகப் பார்க்கலாமா?
இதயத்தை நான்கு அறைகள் கொண்ட ஒரு மாடி வீட்டுக்கு ஒப்பிடலாம். இதயம் என்ற மாடி வீட்டின் மேற்பகுதியில் உள்ள இரண்டு அறைகளை மேல் அறைகள் (Aதூriclev) அல்லது கொள்கலன்கள் (Receiving Chambers) என்று அழைப்பார்கள். உடலின் பல பகுதிகளில் இருந்தும்
நுரையீரல்களில் இருந்தும் வரும் ரத்தத்தைப் பெற்று அவற்றை கீழ் அறைகளுக்கு அனுப்புவதுதான் இந்த மேல் அறைகளின் வேலை.இதயம் என்ற வீட்டின் கீழ்ப்பகுதியை நோக்கினால் இரண்டு பெரிய அறைகளைக் காணலாம். இதயத்தின் கீழப்பகுதியில் உள்ள அறைகளை கீழ்
அறைகள் (Ventricles) என்று அழைப்பார்கள். இவ்வகையான அறைகளுக்கு விசையேற்று அறைகள் (Pumping Chambers) என்ற பெயரும் உண்டு. இவற்றின் முக்கிய வேலை மிக அழுத்தத்துடன் ரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், நுரையீரலுக்கும் அனுப்புவதாகும்.
ஏற்கெனவே இதயத்தை நான்கு அறைகள் கொண்ட மாடி வீட்டுக்கு ஒப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு அறையையும், மூடித்திறக்கும் கதவுகளைத்தான் (Valvev) வால்வுகள் என்கிறோம். இவற்றை கபாடங்கள் என்றும் அழைக்கிறார்கள். இந்த வால்வுகள் எல்லாம் பட்டுத்துணி போன்ற பளபளக்கும் தன்மை கொண்ட வலிமையான நார்களால் ஆக்கப்பட்ட தசை நாண்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதயத்தில் மொத்தம் நான்கு வகையான வால்வுகள் உள்ளன. இவை தனித்தனியாக தங்கள் வேலைகளைச் செய்கின்றன.
இதயத்தில் வலது மேல் அறைக்கும், வலது கீழ் அறைக்கும் இடையே உள்ள துவாரத்தில் இருக்கும் வால்வை மூவிதழ் வால்வு (TRICUSPID VALVE) என்பார்கள்.
உடலின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்ட அசுத்த ரத்தமானது இதயத்தின் வலப்புறம் உள்ள மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த
அறையானது சுருங்கும்போது வலது புறம் உள்ள கீழ் அறைக்கு அனுப்பப்படும் ரத்தமானது மறுபடியும் வலது மேல் அறைக்குத் திரும்பி வராதவாறு இந்த வால்வு இறுக மூடித் தடுக்கிறது.வலது கீழ் அறைக்கும், நுரையீரல் தமனியானது தொடங்கும் இடத்துக்கும் இடையே நுரையீரல் தமனியை இணைக்கும் துவாரத்தில் ஒரு
வால்வு இருக்கிறது. இந்த வால்வை நுரையீரல் வால்வு (Pச்lmonary Valve) என்பார்கள்.இதயத்தின் வலது கீழ் அறையை அடைந்த அசுத்த ரத்தமானது இதயத்தின் கீழ் அறை சுருங்கும்போது நுரையீரல் தமனியின் வழியாக
நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் ரத்தமானது நுரையீரல் தமனியில் இருந்து மறுபடியும் வலது கீழ் அறைக்கு வராதவாறு நுரையீரல் தமனி வால்வு இறுக மூடிக் கொள்கிறது.
இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையில் ஒரு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தில் அமைந்துள்ள வால்வுதான்
ஈரிதழ் வால்வு (MITRAL VALVE) எனப்படுகிறது. இந்த வால்வானது கிறிஸ்தவ மத குருமார்கள் அணியும் தலைப்பாகை போன்று தோற்றம் அளிப்பதால் இந்த வால்வுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
இதயத்தின் இடப்பக்க மேல் அறையில் இருந்து கீழ் அறைக்குச் செல்லும் தூய்மையான ரத்தமானது மறுபடியும் மேல் அறைக்குச் செல்லாமல் தடுக்கிறது இந்த ஈரிதழ் வால்வு.இறுதியாகச் சொல்ல வேண்டியது, பிறை வால்வைப் (Semilunar Valve) பற்றி. இந்த வால்வானது பிறை வடிவத்தில் இருப்பதால் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த வால்வானது இடது கீழ் அறையும், மகா தமனியும் இணையும் இடத்தில் உள்ளது. இடது கீழ் அறையில் இருந்து மகா தமனிக்குச் செலுத்தப்படும் ரத்தமானது மறுபடியும் இடது கீழ் அறைக்குத் திரும்பிச் செல்லாமல் தடுக்க பிறை வால்வு உதவுகிறது.இதயத்தின் அமைப்பு பற்றியும், அதன் பகுதிகள் பற்றியும் விரிவாகப் பேசிவிட்டோம். இனி இதயம் இயங்கும் விதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.