இளைய தலைமுறையை மிரட்டும் ஞாபக மறதி
23 Nov,2013
இளைய தலைமுறையை மிரட்டும் ஞாபக மறதி
பொதுவாக வயது ஆக ஆகத்தான் ஒருவருக்கு முளையின் செயல்பாடு குறையத் தொடங்கும். ஆனால், இன்றைய தலைமுறையினர் இளம் வயதிலேயே, அதாவது 25-30 வயதிலேயே இந்த பிரச்சினையில் சிக்கிக்கொள்வது அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வும் அமெரிக்காவில்தான் நடத்தப்பட்டது. 18 முதல் 60 வயது வரை உள்ள உடல் ஆரோக்கியம் கொண்ட சுமார் 20 ஆயிரம்பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களது நினைவாற்றல், முளையின் செயல்பாட்டு திறன், சரியான முறையில் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 7 ஆண்டுகள் வரை இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும், புதிர்களை கண்டறிதல், கதைகளில் வரும் நிகழ்வுகளை நினைவு கூர்தல் ஆகிய திறன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவில், 20 முதல் 30 வயதுள்ள இளைய தலைமுறையினர் சில திறன்களை இழந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ஆய்வாளர்கள்.
இந்த கவலையை தெரிவித்த ஆய்வாளர்களுக்கு இன்னொரு ஆறுதலான செய்தியும் ஆய்வின்போது கிடைத்தது. மொழி தொடர்பான வார்த்தைகள் மற்றும் பொது அறிவானது வயது அதிகரிக்கும்போது, கூடவே அதிகரிக்கிறது என்பதுதான் அந்த செய்தி.