பக்கவாத நோயிலிருந்து பாதுகாப்பை பெற உதவும் நடைப் பயிற்சி
18 Nov,2013
நாள்தோறும் 90 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பக்கவாத நோயிலிருந்து 3 மடங்கு பாதுகாப்பு கிடைக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
American Heart Association journal Stroke அமைப்பிலுள்ள ஆய்வாளர்களினாலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக அவர்கள் 60 தொடக்கம் 80 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 3,435 பேரை பயன்படுத்தியுள்ளனர்.
இதேவேளை பிரித்தானியாவில் ஆண்டுதோறும் 152,000 வரையானவர்கள் பக்கவாத நோயினால் பீடிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.