அடிக்கடி அய்யோ அம்மாவா? -இடுப்பு வலி முதுகுவலி
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக் கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும். பெருமாள் கோவில்களுக்கு சென்றாலும் துளசித் தீர்த்தம் கொடுப்பார்கள்.
* தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.
முதுகுவலிக்கு சிறந்த மருந்து
முதுகு வலிக்கு சிறந்த மருந்து என்று தேடிப்போக வேண்டாம். ரொம்பவும் சுலபமாக நாமே செய்யக்கூடிய யோகாவை கற்றாலே போதும். அமெரிக்காவில், இதுபோன்ற குறைபாடுகளை தீர்க்க யோகாவை கற்போர் எண் ணிக்கை தான் அதிகரித்து வருகிறதாம்.
தரையில் குழந்தை போல காலை உள்மடக்கி உட்கார வேண்டும்; அப்படியே தலையை முன்பக்கமாக தரையில் பதிக்க வேண்டும்; இப்போது இரு கைகளையும் முன்பக்க நீட்டி பதிக்க வேண் டும். இப்படி சில சாதா யோகாவை கற்றால் போதும், எந்த வலியும் வராது. அப்புறம் எதுக்கு, “ஆஸ ஊஸ வலியா போயே போச்சு’ என்று விளம்பரம் பண்ணும் வலி நிவாரணி எல்லாம்.
75 ஆயிரம் புது கேஸ் வருது
பெண்கள், 40 வயதை தாண்டி விட்டால் சற்று உஷாராக இருப்பது நல்லது. அதிலும், மாதவிடாய் நிற்கும் போது கண்டிப்பாக உடலை பரிசோதித்துக்கொள்வது மிக முக்கியம். குறிப்பாக, மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் மமோகிராம் பரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டும். மார்பக புற்றுநோய் பாதிப்பு ஓசைப் படாமல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இப்போது ஆண்டுக்கு 75 ஆயிரம் புது நோயாளிகள் வருவதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
60 டெசிபல் தாண்டினா
சத்தமாக சினிமா பாட்டு கேட்க, இளம் வயதில் பிடிக்கும்; அதுவே, 40 வயதை தாண்டிவிட்டால், எரிச்சலாக வரும். காரணம், காதுக்கு பாதிப்பை தருவதால் தான். காதை மட்டும் பாதிப்பதில்லை, சத்தம் அதிகமானால், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளம் வயதினருக்கு ரத்த அழுத்தம் வருவதற்கு சத்தம் அதிகமான இடங்களில் இருப்பதும் ஒரு முக்கிய காரணம். அதனால், சத்தமில்லா இடங்களில் இருப்போருக்கு பி.பி., வராதாம்.
நெடிய மனிதரா, குஷி தான்
ஆரோக்கியம், கல்வி, வருமானம் , வசதி உள்ளவர்கள் பெரும்பாலோர் உயரமாக இருப்பது, சர்வதேச அளவில் எடுக் கப்பட்ட அளவை ஆய்வில் உறுதி செய் யப்பட்ட ஒன்று தான். மனித தோற்றத் துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய் வாளர்கள் சமீபத்தில் கூட கூறியுள்ளனர்.
அதிகபட்சம் ஆறடி வரை உள்ளவர்கள் நிலையை விட, ஏழடி உள்ளவர்கள் நிலை சிறப்பாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சத்துணவு இல்லாமல் பரம்பரையாக இருந்தால், அவர்கள் வாரிசுகள் குட்டையாகத்தான் இருப்பர் என்பதும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
டீன் ஏஜினரே உஷார்
கருத்தடை சாதனங்கள் ஏகப்பட் டது வந்துவிட்டதால், கருக்கலைப்பு செய்வது குறைந்து விட் டது; 197 நாடுகளில் எடுத்த கணக்கில், பத்தாண்டுக்கு முன் நாலரை கோடியாக இருந்த கருக்கலைப்பு, நான்கு கோடியாக இறங்கியுள்ளது. அதேசமயம், ஓசைப்படாமல் கருக்கலைப்பு செய்ய முயற்சிக்கும் பெண்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் இரண்டு கோடியாக உயர்ந்துள்ளது. திருமணத்துக்கு முன் உறவு, தவறான உறவு போன்றவை அதிகரிப்பதையே இது காட்டுகிறது.
ரிடையராஸ முடங்காதீங்க
நீங்க ரிடையர் ஆகப்போறீங்களா? அப்படி என்றால், வீட்டில் சும்மா இருக் காதீங்க. ஏதாவது ஒரு பகுதிநேர வேலையிலாவது சேர்ந்து விடுங்க; அப் போது தான் உடல், உள்ளத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இல்லாவிட்டால், வீட்டில் “டிவி’ பார்த்து முடங்கி விட்டால், ஆரம்பித்துவிடும் தொல்லை. அப்படியே வேலை கிடைக்காவிட்டாலும், சேவை பணியில் இறங்கி விடுங்கள். “அறுபது வயதை கடந்தவர்கள் பலருக்கும் உடல் பிரச்னை வரக்காரணம், அவர்கள் முடங்கி விடுவதால் தான். வழக்கமாக அவர்கள் செய்யும் பணிகளை செய்து கொண்டே இருந்தால், உடலில் ஆரோக்கியம் குறையாது’ என்று பிரிட்டன் ஆய்வு தெரிவிக்கிறது.
படிச்சா ஆயுள் அதிகமாம்
சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் சில லட்சம் பேரிடம் ஆன்-லைனில் எடுத்த சர்வே அடிப்படையில் வெளியிட்ட ஆய்வுத் தகவல்கள் இதோ:
கணவனுக்கு ஈடாக இல்லாவிட்டாலும், படித்த மனைவிக்கு எப்போதும் ஆயுள் அதிகமாக இருக்கும். படித்தவரை திருமணம் செய்தவரை விட, படிக்காத மனைவி ஆயுள் ஒன்றரை மடங்கு குறைவாகவே உள்ளது. அதுபோல, படிக்காத கணவனை “டும்டும்’ கட்டிய படித்த மனைவியால் குடும்பத்தில் அந்தஸ்து உயர்கிறது. சுகாதாரமும் அதிகரிக்கிறது. காரணம், படித்ததால்தான். அதனால், வேலைக்கு போகாவிட்டாலும், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று சொல்வதன் நோக்கம் இதுதான்.