தூக்கம் வரலேஸன்னு புலம்பினால் போதுமா?
பணத்துக்கும் குறைவிருக்காது; சந் தோஷத்துக்கும் குறைவிருக்காது; ஆனால், ராத்திரி படுத்தால் மட்டும் தூக்கம் வராது. கடன் தொல்லையால், கிரெடிட் கார்டு பாக்கியை கட்டாததால்ஸபோன்ற காரணங்களால் தூக்கம் வராமல் தவிப்பவர் பலர் உள்ளனர்; ஆனால், எந்த காரணமும் இல்லாமல், தூக்கம் வராமல் தவிப்பவர்கள், புலம்பினால் மட்டும் போதாது.
இரவில் தூக்கம் வரலையாஸ? அப்படீன்னா, ஒரு கப் பால் சாப்பிடு; புத்தகம் படி; “டிவி’ பாருஸ இப்படி யோசனை சொல்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். நம்மில் சிலர், டாக்டரை தவிர, எல்லாரிடமும் , இன்னும் சொல்லப்போனால், பார்மசியில் வேலை செய்யும் பணியாளிடம் கூட கேட்டு மருந்து சாப்பிடுவர்.
டாக்டரிடம் போங்க: டாக்டரிடம் மட்டும் போய் கேட்க மாட்டார்கள். உண்மையை அறிந்து சரியான தீர்வு காண வேண்டுமானால், டாக்டரிடம் போய் தானே தெரிந்து கொள்ள முடியும். நாமே காரணமாக உள்ள நிலையில் தூக்கம் வராமல் தவிக்கலாம். மன அழுத்தம், கடன் தொல்லை, நண்பர்கள் பிரச்னை, ஆபீஸ் பிரச்னை என்பதெல்லாம் அந்த பிரச்னை தீர்ந்த அடுத்த நிமிடமே சூப்பர் தூக்கம் வரும்.
அதை பலர் செய்யாமல், தூக்கம் வராததற்கு போய் மருந்து சாப்பிடுவர். கண்ணை மூடினாலும் கனவில் கடன்காரர்கள் தானே வருவர். நம் உடல் நலனுக்கு வைட்டமின்கள், கனிம சத்துக்கள் தான் மிக மிக முக்கியம். உணவில் கிடைக்காத நிலையில், மருந்து , மாத்திரை மூலம் ஈடு செய்வது டாக்டர்கள் வழக்கம். சத்தான உணவில் குறைவில்லாமல் இருந்தால், உடல் நலனில் குறைவே இருக்காது என்பது தான் டாக்டர்களின் அடிப்படை கருத்து.
சத்தான உணவு: தூக்கம் சரிவர வராததற்கு இரு முக்கிய சத்துக்கள் குறைபாடு தான் காரணம். ஒன்று, கால்சியம்; இன்னொன்று மக்னீசியம். குறிப்பாக, பெண்களுக்கு தூக்கம் வராததற்கு இவற்றின் குறைபாடு தான் காரணம். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது கால்சியம் தான்.
கால்சியம், எலும்புகளின் திடத்தன் மைக்கும் மிக முக்கியமானது. மூட்டு பாதிப்பு வராமல் இருக்க பெண்கள், கால்சியம் சார்ந்த பால் மற்றும் பால் பொருட்கள் , சோயா, வெங்காயம் போன்ற காய்கறி வகைகள், பாதம் பருப்பு உட்பட சில வகை தானியங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.
இரும்பும் முக்கியம்: இதுபோலத்தான் மக்னீசியம், தூக்கத்துக்கு உற்ற நண்பன். கால்சியம், நரம்புகளை அமைதிப்படுத்துகிறது என்றால், மக்னீசியம், மூளையை அமைதிப்படுத்துகிறது. கரும்பச்சை நிறத்திலான கீரை வகைகள், காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 500 மில்லி கிராம் மக்னீசியம் சேர்த்துக்கொண்டாலே போதும். உணவில் பயன்படுத்தப்படும் சிலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பால் பொருட்களில் மக்னீசியம் உள்ளது.
இது மட்டுமின்றி, இரும்பு, செப்பு போன்ற கனிம சத்துக்களும் தூக்கத்துக்கு உதவுகின்றன. முட்டை, மீன் உணவு, சில வகை கொட்டை வகைகள் போன்றவற்றில் இந்த சத்துக்கள் உள்ளன. செம்பில், நோர்பின்பைன், இரும்பில் டோபாமைன் ஆகிய கனிம சத்துக்கள் உள்ளன. தூக்கத்துக்கு இந்த இரண்டும் தான் கைகொடுக்கின்றன. உடலில் இந்த சத்துக்கள் இல்லாததால், தூக்கம் கெடுகிறது.
வைட்டமின் பி: தூக்கம் வர வேண்டுமானால், வைட்டமின் பி சத்தும் தேவை. உடலில் ட்ரைப்டோபன் உட்பட சில வகை அமினோ ஆசிட் சத்துக்கள், தூக்கத்தை ஆழ்நிலைக்கு கொண்டு செல்கின்றன. மது, சிகரெட் பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் இந்த அமிலச்சத்துக்கள் குறைகின்றன. இதை ஈடு செய்ய, வைட்டமின் பி சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். சைவ உணவு சாப்பிடுவோருக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கு அவர்களின் சில உணவு முறைகள் தான் காரணம். இதனால் பலரும் வைட்டமின் பி மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்கின்றனர்.
இதுபோல, வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவையும் முக்கியம். நரம்பு மண்டலத்தையும், மூளையையும் சமப்படுத்தி உடல் செயல்பாடுகளை முடக்கி, தூக்கத்துக்கு வழி வகுக்கின்றன. தூக்கம் வராமல் தவிப்பதற்கு ஆசிட், மக்னீசியம் வைட்டமின், கனிம சத்துக்கள் குறைபாடு போல, சுரப்பிகளின் செயல்பாடும் முக்கியம். குறிப்பாக மேலடோனின் என்ற சுரப்பி, இரவில் அதிகம் சுரந்து தூக்கத்துக்கு அழைத்துச்செல்கிறது.
படுக்கப்போகுமுன்: அவசரம் அவசரமாக எழுவது, சாப்பிடுவது, அதே வேகத்தில் ஆபீஸ் போய் திரும்புவது, இரவில் திரும்பிய பின் சாப்பிடுவது, அதே வேகத்தில் படுப்பது என்ற பழக்கம் சரியானதல்ல. இப்படி செய்தால், நாற்பதில் வேலையை காட்டி விடும். அப்போது தான் டாக்டரிடம் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும்; சாப்பிடும் உணவு குறைந்து போய், மருந்து , மாத்திரைகளை பட்டியல் போட்டு “டிக்’ அடித்து சாப்பிட வேண்டியிருக்கும். இது தேவையா?