கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!!!
02 Oct,2013
HHHபெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலம் என்பது மிகவும் முக்கியமான காலமாகும். கர்ப்பிணி பெண் தன் ஆரோக்கியத்தையும், தன் சிசுவின் ஆரோக்கியத்தையும் காப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை எந்தவித குறைகளும் இன்றி, எந்தவித வளர்ச்சி குறைபாடுகளும் இன்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்கும். சரிவர உடல்நலத்தை பாதுகாக்காமல் போனால், அது சிசுவை பல வகைகளில் பாதிக்கும். சில விஷயங்கள் சிசுவை கருவில் இருக்கும் போதே பாதிக்கும். இன்னும் சில எதிர்ப்பு சக்தி வளர்ச்சியை பாதித்து, குழந்தைக்கு வாழ்க்கையின் பின்னாட்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க கர்ப்பமாக இருக்கும் போதே, ஆரோக்கியத்தை காத்திட என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுவாக பின்பற்றுவோம். ஆனால் எதை செய்யக்கூடாது என்பதை பல நேரங்களில் தெரிந்து கொள்வதில்லை. அதனால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.