சென்னையில் இவ்வளவு அமானுஷ்யம் நிறைந்த இடங்களா? இதயம் பலவீனமானவீங்க இங்க போகாதீங்க..!

28 Aug,2022
 

 
 
 தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு பல முகங்கள் உள்ளன. சென்னை என்றாலே, மெரினா, அண்ணா பல்கலைக்கழகம், ரிப்பன் பில்டிங் என அழகிய இடங்களும், அன்பான மக்களும் நிறைந்துள்ள நகரம். அற்புதமான கோயில்கள், அழகான கடற்கரைகள், மல்லிகைப்பூ, கல்லூரிகள் போன்ற வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள் 
 
அனைத்தும் சென்னையை உங்களுக்கு நிச்சயமாக நினைவுபடுத்தும். ஆனால் அதையெல்லாம் மீறி, பல்வேறு அமானுஷ்ய செயல்களுக்கு சாட்சியாக நிற்கும் நகரமாகவும் சென்னை இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? சென்னையில் பேய் பிடித்த இடங்களுக்கு பஞ்சமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தியோசாபிகல் சொசைட்டியில் உள்ள பழமையான ஆலமரம், நகரின் அதிகபட்ச தற்கொலைகள் நடந்த புளூ கிராஸ்ரோடு, மர்மங்கள் நிறைந்த டி மான்டே காலனி என சென்னையில் அப்படி என்னென்ன அமானுஷ்யங்கள் நடக்கின்றன என்பதை பற்றி இங்கே காணலாம்.
 
 மான்டி காலனி, சென்னை டி மான்டி காலனி என்பது சென்னை அபிராமபுரத்தில் செயின்ட் மேரிஸ் சாலையில் அமைத்துள்ள ஒரு பகுதியாகும். இது பேய் காலனி என்று கூறப்படுகிறது. 2015ஆம் ஆண்டு டி மான்டி காலனி என்ற திரைப்படம் வெளியானது. இந்த காலனியை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால், பெரும்பாலான மக்களுக்கு டி மான்டி காலனியை பற்றி தெரிந்திருக்கும். இந்த காலனி ஒரு போர்த்துகீசிய தொழிலதிபர் டி மான்டே என்பவரால் கட்டப்பட்டது. அந்த காலனியில் இவர் தனது மனநலம் குன்றிய மனைவி மற்றும் ஒரு மகனுடன் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். அவர் மற்றும் அவரது மகன் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. பழைய மரங்கள் மற்றும் தெருவிளக்குகளே இல்லாத இரண்டு பாதைகளில் கட்டப்பட்ட இந்தக் காலனியில் மொத்தம் ஒரே மாதிரியான பத்து வீடுகள் உள்ளன. 
 
 
 இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும்.... மர்மங்கள் எப்போதும் வெறிச்சோடியே காணப்படும் சாலைகளில், தனது ராக்கிங் நாற்காலியில் ஓய்வெடுத்து, வீட்டின் பூட்டுகளை டிமாண்டே திறப்பதாக பலர் கூறுகிறார்கள். தெரு நாய்கள் மர்மமான முறையில் காணாமல் போவதும், நடுஇரவில் ஆங்கிலேய தொழிலதிபர் போல ஆடை அணிந்து ஒருவர் சொல்வது போன்று பார்த்திருப்பதாக காலனியில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே அமானுஷ்யமாக இருந்த இந்த இடத்தில் மேலும் மேலும் பல அமானுஷ்யங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் அமானுஷ்யம் நிறைந்த இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த காலனிக்கு நீங்கள் செல்ல விரும்பினால், மனதை 
 
திடப்படுத்திக்கொண்டு செல்லுங்கள். ஆண்டின் கடைசி சனி அமாவாசையில் உருவாகும் சுப யோகத்தால் சனி பகவானின் அருளைப் பெறும் 5 ராசிக்காரர்கள்! உடைந்த பாலம் சாந்தோம் கடற்கரையில் இருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு மக்கள் எளிதில் செல்ல வசதியாக அடையாறு ஆற்றின் மீது 1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் இன்று சென்னையில் அமானுஷ்ய செயல்களின் மையமாக உள்ளது. 1977 ஆம் ஆண்டில் வலுவான அலை நீரோட்டங்கள் காரணமாக பாலம் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும், இது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு சரியான இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த இடம் பல அமானுஷ்ய உணர்வைக் கொடுப்பதாக 
 
கூறப்படுகிறது. அந்த இடத்தில் பல பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அன்று முதல் இரவு நேரங்களில் பெண்கள் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். வெளிச்சம் இல்லாத உடைந்த பாலத்தை சுற்றி இரவு நேரங்களில் பெண்கள் அலறுவதைப் பார்ப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் இறந்துபோன பெண்கள்தான் அழுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆதலால், இரவு நேரங்களில் இந்த பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். 
 
 
 இன்று இந்த ராசிக்காரர்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும்... பெசன்ட் அவென்யூ சாலை சென்னை பெசன்ட் அவென்யூ சாலை, இருபுறமும் பசுமையுடன் அமைதியான சாலையாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் ஒரு பள்ளிக்கூடம், விலங்குகள் தங்குமிடம் மற்றும் கோவில் உள்ளது. ஆனால், இந்த பகுதியில் தீய சக்தி உலாவுவதாக கூறப்படுகிறது. அது பகலில் கூட இந்த பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
 அவைகள் வித்தியாசமான நகைச்சுவை உணர்வு கொண்டதாக மக்கள் கூறுகிறார்கள். ஏனெனில், அடிக்கடி வழிப்போக்கர்களை அறைந்து, அவர்களின் வாகனங்களில் இருந்து மக்களை தூக்கி எறிவது, குழந்தைகளை கூட தூக்கி எறிந்துவிட்டு, பின்னர் சத்தமாக சிரிப்பதாக கூறுகிறார்கள். எஃப்2 கட்டிடம் நாம் அனைவரும் நம் வீடுகளை நேசிக்கிறோம். ஏனெனில், அது நம்மோடு ஆழமான தொடர்பைக் கொண்ட இடம். வால்மீகி நகரிலுள்ள எஃப்2 பில்டிங் பல ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. அவள் தன் வீட்டை 
 
அதிகமாக நேசித்தாள். அதனால் அவள் இறந்த பிறகும், அந்த வீட்டிலே ஆன்மாவாக அலைவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வீட்டின் கதவுகள் திறக்கப்படுவதும் மூடப்படுவதும், ஜன்னலில் இருந்து ஒரு பெண் அழும் சத்தம் கேட்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால், எல்லாவற்றையும் விட பயங்கரமான விஷயம் என்னவென்றால், ஒருவர் வீட்டைக் கடந்து செல்லும்போது மொபைல் ஃபோனில் உள்ள நெட்வொர்க் நின்றுவிடும் மற்றும் செல்போன் லைட் தானாக ஆன் ஆகும் என்றும் கூறப்பபடுகிறது. புளூ கிராஸ்ரோடு ஒவ்வொரு நகரத்திலும் தற்கொலைகள் அதிகம் நடக்கும் ஒரு
 
தற்கொலை இடம் உள்ளது. சென்னையிலும் அதுபோல ஒரு இடம் உள்ளது. புளூ கிராஸ்ரோடுதான் நகரத்தில் அதிகளவில் தற்கொலைகள் நடந்துள்ளன. இது அமானுஷ்ய நடவடிக்கைகளுக்கான மையமாகவும் கூறப்படுகிறது. சாலையின் இருபுறமும் அடர்ந்த பசுமையான நிழற்குடைகளால் சூழப்பட்ட இந்தச் சாலை, பகல் நேரத்திலும் சூரிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும். புதர்களில் இருந்து மக்கள் அலறுவது, வெள்ளைத் தோற்றத்தில் யாரோ செல்வது போன்ற
 
 தெரிவதாக அந்த பகுதிக்கு செல்லும் மக்கள் கூறுகிறார்கள். மேலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இந்த பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்கிறார்கள். கரிகாட்டுக்குப்பம், இசிஆர் கரிகாட்டுக்குப்பம் ஒரு காலத்தில் பரபரப்பான மீன்பிடி குக்கிராமமாக இருந்தது. ஆனால் 2004 இல் சுனாமி தாக்கிய பிறகு, கடலின் இந்த மகிழ்ச்சியான இடம் சேதம், பேரழிவு மற்றும் இழந்த 
 
உயிர்களை மட்டுமே பேசுகிறது. அதனுடன் சேர்ந்து, அமானுஷ்ய நடவடிக்கைகளின் கதைகள் பல இந்த இடங்களில் உள்ளதாக கூறப்படுகிறது. சுனாமியில் இறந்த பல அப்பாவி ஆத்மாக்கள் இங்கு அலைவதாக பலர் கூறுகிறார்கள். ஆனால், சென்னையில் உள்ள பயங்கரமான பேய்கள் நடமாடும் இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. பல நேரங்களில் இரத்த துளிகள் தரையில் தெரிவதாகவும் பலர் கூறுகிறார்கள். இருவழி கிழக்கு கடற்கரை சாலை இருவழிக் கிழக்குக் கடற்கரைச் சாலை புதுச்சேரியிலிருந்து சென்னையை இணைக்கும் வழி. பகலில் இந்த சாலை ஓட்டுனருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அதன் மென்மையான சூழ்நிலையில், இரவில் அது மிகவும் 
 
 
ஆபத்தானதாக மாறும். ஏன் என கேட்கிறீர்களா? காரணம், குழந்தை, பெண், பூனை போன்ற உருவங்களில் தோன்றும் உருவத்தை பல ஓட்டுனர்கள் பார்த்திருக்கிறார்களாம். பல அனுபவங்கள் மற்றும் விபத்துக்கள் இந்த பகுதியில் நடக்கின்றன. அண்ணா மேம்பாலம் சென்னையின் பேய்கள் அதிகம் உள்ள இடங்களில் அண்ணா மேம்பாலமும் ஒன்று. பல மகிழ்ச்சியற்ற மற்றும் இழந்த ஆன்மாக்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சென்னையிலுள்ள இது மற்றொரு தற்கொலை இடமாகும். பல சம்பவங்கள் இந்த இடத்தை அமானுஷ்ய நடவடிக்கைகளின் 
 
படுக்கையாக மாற்றியுள்ளன. அந்த இடத்தை கடந்து செல்லும் மக்கள் மற்றும் பயணிகள் அடிக்கடி சிரிப்பு மற்றும் அழுகையின் விசித்திரமான எதிரொலி சத்தம் கேட்பதாக தெரிவித்துள்ளனர். இந்த இடத்தைக் கடந்து செல்லும் போது பலர் கோடைக்காலத்தில் குளிர்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள். தியோசாபிகல் சொசைட்டி 1887 இல் அடையாறில் கட்டப்பட்ட தியோசாபிகல் சொசைட்டியில் சுமார் 450 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஒரு மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. 
 
ஆனால் அதுமட்டுமின்றி, சென்னையில் பேய்கள் அதிகமுள்ள இடங்களில் ஒன்றாக இது பல பயமுறுத்தும் கதைகளின் தாயகமாக உள்ளது. இந்த மரத்தின் கிளைகளில் வெள்ளை உருவங்களில் படுத்திருப்பதாகவும், தொங்கிக்கொண்டிருப்பதாகவும், அடிக்கடி சிரிப்பதாகவும் பலர் கூறுகிறார்கள். இரவு நேரங்களில் அலறல் சத்தம் கேட்பதாகவும், உடனே பறவைகள் கத்திக்கொண்டு பறப்பது போலவும் பல மர்மங்கள் அந்த மரத்தை சுற்றி நடப்பதாகக் கூறப்படுகிறது.
 
 மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி சென்னையில் மிகவும் பேய்கள் அதிகம் உள்ள மற்றொரு இடமான மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி 1937 இல் தாம்பரத்தில் தொடங்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பு ஒரு மாணவன் ஹெர்பர்ஸ் ஹாலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பையனின் ஆன்மா இன்னும் கல்லூரியில் சுற்றித் திரிவதாகவும், தன் விருப்பப்படி குழாய்களைத் திறந்து மூடுவது, கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளின் பந்துகளை மறைப்பது, ஜன்னல்களை உடைப்பது போன்ற செய்வதாகவும் பலர் கூறுகிறார்கள்.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies