பிணத்தை பின்தொடரும் ஆவி !

28 Nov,2021
 

 
 
 
 
    நமது இந்து சமூகத்தில் பிறப்பு துவங்கி இறப்பு வரையிலும் பலவிதமான சடங்குகள் செய்யபடுகின்றன சடங்குகளுக்கான காரணங்கள் நமக்கு தெரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் செய்தார்கள் என் குடும்பத்தில் பலகாலமாக இப்படி செய்யபடுகிறது அதைதான் நானும் செய்கிறேன் என்ற மனபோக்குடனே பல சடங்குகள் நிகழ்த்தபடுகிறது உண்மையான காரணங்களை அறிந்து யாரும் அதை செய்யவில்லை என்று சொன்னால் மிகையில்லை 
 
ஒருகாலத்தில் பெரியவர்கள் செய்ததை நாமும் செய்ய வேண்டும் என்றிருந்த மனநிலை இன்று குறைந்து கொண்டே வருகிறது இது ஏன் எதற்காக செய்ய வேண்டும் செய்யாமல் விட்டால் என்ன நடந்துவிடும் என்ற மாதிரியான கேள்விகள் கேட்க துவங்கி விட்டார்கள் இளைய தலைமுறையினர் இவர்கள் இப்படி கேட்பதனால் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது அதனால் தான் கேட்கிறார்கள் என்று யாரவது நினைத்தால் அவர்கள் நிச்சயம் அப்பாவிகள் 
 
பண்டிட் ஜவகர்லால்நேரு தமது சுய சரிதையில் தன் வீட்டில் நடக்கின்ற மதசடங்குகளை எப்போதுமே கேலியாகவும் கிண்டலாகவும் மூடத்தனமான செயல் என்ற எண்ணத்தோடும் பார்த்ததாக கூறியிருப்பார் அதன் காரணம் அவர் அந்த சடங்கின் அர்த்தத்தங்களை புரிந்துகொண்டு கூறியதாக கருத இயலாது அவருக்கு உல்லாசமாக பொழுதை போக்கும் ஐரோப்பிய கலாச்சாரம் சுலபமாகவும் சுகமாகவும் தெரிந்தது ஆனால் இந்திய பண்பாடு என்பது கட்டுபாடுகள் நிறைந்ததாக இருந்ததனால் அதன் சடங்கு முறைகள் அர்த்தமற்றது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார் அதனால் தான் அவர் அப்படி எழுதினார் 
 
ஏறக்குறைய இன்றைய தலைமுறையினரும் சடங்குகளுக்கான காரணம் கேட்பது அவைகளை பின்பற்றுவதற்கு கடினமாக இருக்கிறது கேலி கிண்டல் செய்து நையாண்டி செய்தாலாவது தங்களை விட்டுவிட மாட்டார்களா என்பதற்கே அதாவது அவர்களிடம் இருப்பது அறிவு தேடல் அல்ல சிரமபடாமல் இருக்க வேண்டும் என்ற சோம்பேறி தனமாகும் இருந்தாலும் பொத்தாம் பொதுவாக இளைஞர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துமே விதண்டாவாதாம் என்ற முடிவிற்கு வந்துவிடவும் முடியாது அவர்களிலும் ஒரு சிலர் நியாய உணர்வோடும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆத்ம சுத்திகரிப்போடும் கேள்விகள் கேட்கிறார்கள் 
 
அந்த வகையில் சமீபத்தில் என்னிடம் ஒரு இளைஞர் கேட்ட கேள்வி ஒன்று மிகவும் அபூர்வமானது பல வகையிலும் அறிவை தேடும் ஆரம்ப முயற்சி அவரிடம் இருக்கிறது என்ற தெளிவானதாகும் அவர் கேட்டார் சமீபத்தில் நான் என் நண்பன் ஒருவனின் தாத்தா இறப்பிற்கு சென்றிருந்தேன் மயானம் வரையிலும் போயிருந்தேன் பிணத்தை வீட்டிலிருந்து எடுத்து சென்றது முதல் இடுகாடு வரையிலும் பல சடங்குகள் நடந்தன அவற்றில் பல என்னவென்றே எனக்கு தெரியாது இருந்தாலும் கடேசியில் தோளில் பானையை வைத்து கொண்டு பிணத்தை மூன்றுமுறை சுற்றிவந்து ஒவ்வொரு சுற்றுக்கும் பானையில் ஒரு ஓட்டை போடுகிறார்களே அது ஏன் என்பது தான் அவரது கேள்வி 
 
இந்த காட்சியை பார்க்க மயானத்திற்கு போகவேண்டும் என்பது இல்லை திரைப்படங்களிலும் நாடகங்களிலும் இந்த காட்சிகளை பலமுறை பார்க்கலாம் அப்போதெல்லாம் இது ஏன் என்று கேட்க தோன்றாமல் இப்போது மட்டும் அந்த கேள்வி பிறந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை திரைப்படங்களில் வருகின்ற காட்சி நம்மோடு நேரடியாக சம்மந்த படாதது அதனால் அதில் அவ்வளவாக உணர்ச்சு பூர்வமாக ஈடுபாடு காட்ட முடியாது நேராக ஒரு மரண சடங்கை பார்க்கும் போது மட்டுமே அந்த கேள்வி உணர்ச்சி மயமாக தோன்றும் 
 
அந்த நேரத்தில் இந்த கேள்வி ஏன் பிறந்தது இப்படி எப்போதெல்லாம் உணர்ச்சிமயமாக கேள்விகள் கேட்க தோன்றும் என்ற ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை எதையும் அனுபவபூர்வமாக அணுகும் போது மட்டுமே நிஜமான அறிவு வாசல் திறந்து ஆக்கபூர்வமான கேள்விகள் பிறக்கும் என்பதை நாம் அறிந்துகொண்டால் போதும் இப்போது அவர் கேட்ட கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும் என்பதை ஆராய்வோம் 
 
பொதுவாக நம் சமூகத்தில் நடைபெறுகின்ற இறப்பு சடங்குகள் இறந்தவர்களை மையமாக வைத்து மட்டும் உருவானது அல்ல உயிரோடு இருப்பவர்களையும் மையமாக வைத்து உருவானதே ஆகும். ஒரு மரணம் நிகழ்கிறது என்றால் அது சம்மந்தப்பட்ட குடுமத்தினருக்கு பெரிய இழப்பு இதுவரையில் குடும்ப உயர்வுக்காக பாடுபட்ட ஒரு அங்கத்தினர் இன்று இல்லாமல் போய்விட்டார் அவர் இல்லாத இடத்தை அவ்வளவு சீக்கரம் வேறு யாரும் நிரப்பிவிட முடியாது இறந்தவர்களின் மீது குடும்பத்தினர் காட்டுகிற ஈடுபாடும் அன்பும் சடங்குகளால் உணர்த்தபடுகிறது அதே நேரம் அதில் பங்குபெறும் மற்றவர்களுக்கு அந்த சடங்கு வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து சொல்வதாகவும் இருக்கிறது 
 
மயானத்தில் உபயோக படுத்தப்படும் பானை வெறும் பானை அல்ல அது மனித உடலை குறியீடாக காட்டுகிற பானை நமது சரீரமும் ஏறக்குறைய பானை போன்றது தான் அகலமாக வாய்திறந்திருக்கும் பானையில் எப்படி காற்று நிறைந்திருக்கிறதோ அப்படியே ஒன்பது ஓட்டைகளுடைய நமது உடம்பிலும் பிராணன் என்ற காற்று நிரம்பி இருக்கிறது பானை உடைந்தவுடன் காற்று வெளியே போய்விடுகிறது உயிர் என்பதும் உடம்பு என்ற பானை உடைந்து போனவுடன் காற்றோடு காற்றாக கலந்து இன்னெதென்று தெரியாத ஒரு புதிய உலகத்தோடு கலந்துவிடுகிறது 
 
பானை உடைவது போல் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் இதில் போட்டி பொறாமை ஆணவம் ஆடம்பரம் ஆதிக்கம் அநியாயம் என்பவைகள் எதற்கு என்றோ ஒருநாள் நிச்சயம் உடைய கூடிய நிரந்தரமற்ற பானை போன்ற உடம்பை திருப்தி படுத்துவதற்கு எதற்காக ஆசை படுகிறாய் எதற்க்காக மற்றவனை கெடுத்து பிழைக்க பார்க்கிறாய் பானைக்குள் தண்ணீர் இருந்தால் அது எப்படி அமைதியாக இருக்குமோ அப்படி நீ அமைதியாக இரு தண்ணீர் நிறைந்த பானை உடைந்தாலும் மற்றவனை குளிர்விக்கும் என்பது தான் பானை உடைப்பின் தத்துவம் 
 
இது வாழ்பவனுக்கு சொன்ன தத்துவம் இந்து வாழ்பவனை மட்டும் கருத்தில் கொள்பவன் அல்ல வாழ்ந்து முடித்து மறுவுகலகம் போனவனையும் கருத்தில் கொள்பவன் எனவே அவன் செத்தவனுக்கும் தத்துவம் சொல்ல விரும்பினான் அதற்காகவே பானையை வைத்து ஒரு சடங்கை உருவாக்கினான் உடம்பை விட்டு உயிர் போனதும் எந்த ஆத்மாவும் விதி முடிந்தது இனி மண்ணுலக வாழ்வை மறந்துவிட வேண்டியது தான் என்று போய்விடுவது இல்லை தான் வாழ்ந்த உடம்பை இன்னொரு முறை பயன்படுத்தி அனுபவிக்க முடியாத சுகங்களை அனுபவிக்க மாட்டோமா என்று மயானம் வரையிலும் உடம்பை தொடர்ந்து வருமாம் 
 
அப்படி வருகின்ற ஆத்மாவை நீ உண்டதும் குடித்ததும் அவ்வளவு தான் இனி உன் உடம்பிற்கு சுகம் கொடுப்பதற்கு பூமியில் எதுவுமே இல்லை இந்த பானை உடைந்தது போல உனக்குள்ள பொருள்களும் உடைந்துவிட்டது இதை பார்த்து அமைதி அடைந்துகொள் என்று இறந்தவனுக்கு சொல்லாமல் சொல்வதே கொள்ளி பானையை உடைக்கும் சடங்கு உயிரோடு இருப்பவனுக்கு தத்துவம் புரிகிறதோ என்னவோ செத்தவனுக்கு கண்டிப்பாக புரியும் புரிந்து தான் ஆகவேண்டும் அதனால் அவன் அமைதி அடைவான் இப்படி ஒவ்வொரு சடங்கிற்கும் காரணங்கள் உண்டு Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies