அனைவர்க்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது இந்த அறிகுறி இருந்தால் உங்கள் அருகில் பேய் இருப்பது உறுதி பொதுவாகவே நம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை முழுவதுமாக நிலைகுலைய வைக்க செய்யும் ஒன்றாகும் பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும் ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அவர்களது உடல் மட்டுமே நம்மை பிரிந்திருக்கிறதே தவிர அவர்களின் ஆன்மா அல்ல.
இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் திரும்பி வருவதற்கு எது வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் திரும்பி வருவதை நீங்கள் உணர கட்டாயம் முயற்சிக்க வேண்டும் ஆன்மாக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கிறது ஆனால் அந்த ஆன்மா உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் மட்டுமே சில அறிகுறிகளை உங்களுக்கு உணர்த்துவார்கள்
இந்த பதிவில் இறந்தவர்கள் உங்களுடன் தொடர்புகொள்ள செய்யும் 10 செயல்கள் என்னென்னவென்று பார்க்கலாம்.
1.அவர்களின் வாசனை அல்லது நாற்றம் :
பொதுவாகவே ஆன்மாக்கள் அவர்களுக்கு பிடித்தமான விரும்புபவர்களுக்கு தங்களின் இருப்பை உணர்த்த பல வழிகளில் முயற்சி செய்வார்கள் அதில் ஒன்றுதான் அவர்களின் வாசனை அல்லது நாற்றம் . ஆன்மாக்களுக்கும், மனிதர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஊடகம் வாசனை அது அவர்களின் உடல் வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்கள் உபயோகிக்கும் வாசனை திரவியங்களின் வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்களின் இருப்பை நீங்கள் எளிதில் உணர உதவும் வாசனையாக இருக்கலாம் அந்த வாசனை உங்களுக்குள் வந்தவுடன் உங்களால் முகர்ந்துபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு அவர்களின் நியாபகம் வரும் .
2.உங்கள் பொருட்கள் காணாமல் போவது :
சிலசமயம் உங்களுக்கு பிடித்த சிறிய பொருட்கள் காணாமல் போகலாம், இதனை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு பிடித்த ஆன்மாக்கள் உங்களிடம் ஏதாவது சொல்ல முயற்சிப்பதன் அடையாளமாக கூட இது இருக்கலாம். இது மரண உலகில் இருந்து உங்களுக்கு அனுப்பும் செய்தியாக இருக்க வாய்ப்புள்ளது.
3.இறந்தவர் கனவில் வருவது :
பொதுவாகவே இறந்தவர்களை பற்றி கனவு காண்பது சாதாரணமான ஒன்றுதான் ஆனால் உங்களுக்கு பிடித்தவர்களே கனவில் மீண்டும் மீண்டும் வந்தால் அவர்கள் உங்களுக்கு அருகில்தான் எங்கோ இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதுபோன்ற கனவுகள் உண்மை போலவே தோன்றும். அவர்கள் உங்கள் கனவில் என்ன பேசுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனியுங்கள் ஏனெனில் அது அவர்கள் உங்களுக்கு கூறவரும் செய்தியாக இருக்கலாம்.
4.வித்தியாசமான எண்ணங்கள் ஏற்படுதல் :
பிடித்தவர்களின் மரணத்தில் இருந்து வெளியே வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்களை பற்றியே சிந்தனையே உங்களுக்கு இருந்தால் யாருடனாவது இதைப்பற்றி ஆலோசனை செய்யுங்கள். அவர்களை பற்றிய வித்தியாசமான எண்ணங்கள் உங்களுக்கு வந்தால் அவர்கள் உங்களிடம் கூறவருவது என்னவென்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
5.இசை
பொதுவாக ஆன்மாக்கள் உணர்த்தும் முக்கியமான அறிகுறியாக இசை உள்ளது. நீங்கள் இருவரும் என்ன உறவை பகிர்ந்து கொண்டீர்களோ அதனை உணர்த்தும் பாடலை அடிக்கடி கேட்க நேர்ந்தால் அவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.
6. மின்சார செயல்பாடு
மின்சாரங்கள் மூலம் பேய்கள் தொடர்பு கொள்வது படங்களில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையில் நடக்கும். டிவி அல்லது லைட், மற்ற மின்சார பொருட்கள் திடீரென செய்லபட தொடங்குவது உங்கள் வீட்டில் ஆன்மாக்கள் இருப்பதற்கான அடையாளம் ஆகும். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால் முடிந்தளவு அந்த வீட்டில் இருந்து விரைவில் வெளியேறி விடுங்கள்.
7.எண்கள்
ஆன்மாக்கள் பொதுவாக தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரு ஊடகம் எண்கள் ஆகும். அது இறந்தவர்களின் பிறந்த நாள் அல்லது அவர்களுடன் தொடர்புடைய எந்த நாளாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
8.தொடுதல்
பக்கத்தில் யாரும் இல்லாத போது யாரோ தொடுவது போன்ற உணர்வு வருவது சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் ஆன்மாக்கள் உங்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரு வலிமையான அறிகுறி இதுவாகும். இது தொடுவது போலவோ அல்லது நெற்றியில் முத்தமிடுவது போன்ற உணர்வாகவோ இருக்கலாம்.
9.விலங்குகள்
நமது கண்களுக்கு தெரியாத பல விஷயங்கள் மிருகங்களின் கண்களுக்கு தெரியும். உங்கள் வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் அவைகளின் நடவடிக்கைகளை நன்கு கவனியுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களின் ஆன்மா உங்கள் வீட்டில் இருந்தால் அவை வித்தியாசமாக நடந்து கொள்ளும்.
10.அமானுஷ்ய நிகழ்வுகள் :
பொதுவாக உங்கள் வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்தால் உங்கள் வீட்டிற்குள் பசு மாடு வராது இதிலிருந்தே உங்கள் வீட்டில் ஏதோ ஒரு தீய சக்தி இருக்கிறது என்று மேலும் அதிக துர்நாற்றங்கள் அதிக கஷ்டங்கள் ஏற்பட்டால் அந்த ஆத்மா உங்களையும் துணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி
இந்த பதிவை இறுதி வரை படித்ததற்கு நன்றி ..இந்தப்பதிவு உங்களுக்கு கண்டிப்பாக பிடித்து இருந்தால் மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடருங்கள் நன்றி .