ஆவி ஆவிகள்

16 May,2019
 

 

ஆவிகள்
         
        மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை தொடர்கிறேன். வளவளவென்று பேசாமல் இந்த கட்டுரையை தொடர உதவிய அவர்களுக்கு  ஒரு நன்றியை போட்டு கொண்டு கட்டுரைக்குள் போவோம்
   சென்ற பதிவின் இறுதியில்  கூறியதை முன்னிறுத்தி பலர் என்னிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்கள். எவ்வாறு ஒருவர் உயிருடன் இருக்கும் போது ஆன்மாவாக  அல்லது ஆவியாக காட்சி கொடுப்பது?
அதற்கு விடை கூறுவதற்கு முன்னர் அதனோடு தொடர்புடைய ஒரு உண்மையான சம்பவத்தை பார்த்து விட்டுவருவோம். என்னடா இவன் ஆஊன்னா சம்பவம் சம்பவம் னு சொல்றான் னு நீங்க எல்லாரும்  கடுப்பாவுறது தெரியுது !!! இருந்தாலும் வேற வழி இல்ல ! இது போன்ற அமானுஷ்ய விஷயங்களை பற்றி ஆராயும் போது உண்மை சம்பவங்களே உண்மைகளை எளிமையாக புரிந்துகொள்ள வழி வகுக்கும் . எனவே தான் பல உண்மை சம்பவங்களை முன்னிறுத்தி உங்களை இந்த கட்டுரையின் வழியே அமானுஷ்ய உலகிற்கு அழைத்து செல்ல முயற்சி செய்கிறேன் .சரி சம்பவத்தை பார்ப்போம் !!
   1993 los angels நகரம் . ஒரு பழைய பங்களா உள்ள இடம் . இடமும் பார்பதற்கு கைவிடப்பட்ட நிலையில் ஒதுக்குபுறமான பகுதியில்  தான் இருந்தது . அங்கே அவ்வபோது ஒரு பெண்மணியின் ஆவி உலவுவதாக தகவல் .ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த ஆவியை பார்த்ததாக கூறினார். கிட்ட தட்ட அனைவர் கூறிய அடையாளங்களும் ஒரே மாதிரியாக தான் இருந்தன . இதை அறிந்த ஆவிகளை ஆராயும் குழுவினர் அங்கே சென்று முகாமிட்டனர் .
அங்கு தான் நடந்தது அமானுஷ்யம் ! ஆம்!!! ஆராய்ச்சியாளர் குழுவிலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த ஆவியை தெள்ள தெளிவாக பார்த்தனர் . அந்த பங்களாவின் படிக்கட்டுகளில் அந்த பெண்ணின் ஆவி மிக சாதரணமாக ஏறி இறங்கி உலா வந்து கொண்டு இருந்தது. பின்பு அங்கு அருகே இருந்த ஏரியில் மிதந்து சென்று மறைந்து போனது. ஒரு நாள்! இரண்டு நாள்! அல்ல . பல நாட்கள் அந்த ஆவியை ஆராய்ச்சி குழுவினர் கண்டனர் . பின்பு அதை பற்றிய புலன் விசாரணையில் இறங்கினர் .
 
   அந்த பங்களாவின் அருகில் வசித்த பலர் அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கினார்கள். அங்கு சுற்றி இருந்த முதியவர்களிடமிருந்து ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்த பதில் வந்தது . ஆம் அங்கு வாழும் முதியவர்கள் அந்த ஆவியின் முகமானது முன்னமே எங்களுக்கு நல்ல பரிச்சயமான முகத்தை ஒத்து உள்ளது என்று கூறினார்கள். அங்க பலகாலங்களுக்கு முன்பு வாழ்ந்த பலரும் அதையே  கூறினார்கள் . ஆனால் அதற்கு பின்பு நடந்தது ஆராய்ச்சியாளர்கள் எதிர்பாராதது .
 ஆம் அவர்கள் விசாரணையில்  அந்த பங்களாவில் இருந்தவர்கள் பல வருடங்களுக்கு  முன்பே அங்கிருத்து 500 மைல் தொலைவில் உள்ள வீட்டில் வசிக்க போய்   விட்டதாக ஒரு செய்தி கிடைத்தது. அங்கு சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி !!

  அவர்கள் ஆவியாக பார்த்த அந்த பெண்மணி அங்கு கட்டிலில் படுத்துகொண்டிருந்தாள். ஆனால் உயிருடன் !!!!!!!! என்ன நம்ப முடியவில்லையா? நம்ப முடியாவிட்டாலும் இதான் உண்மை . அவர் உயிருடன்  தான் இருந்தார். ஆனால் நோய்வாய்ப்பட்டு கோமா நிலையில் சுய நினைவின்றி கிடந்தார். பின்பு முழுவதும் விசாரித்ததில் தான் உண்மை தெரிந்தது. நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம் அது. அந்த பங்களா அவர்களுடையது தான். அங்கேயே பிறந்து வளர்ந்த அந்த பெண்மணி அந்த பங்களாவிலிருந்து குடும்பத்தோடு வெளியேற வேண்டிய சூழல் . பின்பு அவள் நோய்வாய்ப்பட்டு கோமாவில் இருந்த போது  அந்த பெண்ணின் ஆழ்மனதின் இருந்து கிளம்பிய அவளது எண்ண  அலைகள் அந்த பழைய வீட்டுக்கு சென்று இருக்கிறது . என்ன நம்ப முடியவில்லையா ? என்னடா இவன் காதில் பூ சுற்றுகிறான் என்று நினைக்காதிர்கள் . இதுவும் உண்மை தான் . ஏன் இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களும் ஏன் நீங்களும் கூட உணர்ந்து இருக்கலாம் !!
   ஆவிகளை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களில் புகழ் பெற்றவர் வீட்லி காரிங்டன் (weedly carington). இவர் பல ஆராய்சிகள் நடத்தி ஆவிகளை பற்றி பலகோட்பாடுகளை வழிமொழிந்துள்ளார் .
அவற்றில் ஒன்று தான் psychons. அது என்ன psychons? விரிவாக காண்போம்
உடம்புக்குள் கோடிகணக்கான செல்கள் இருப்பது போன்று நம்முடைய மனதுக்கும் (mind) செல்கள் உண்டு .மூளைக்குள் தகவல் பரிமாற்றம் செய்கின்ற, அத்தியாவசியமான கோடான கோடி செல்களை போல (neutrons), நமது எண்ணங்களை இயக்குகிற கண்ணனுக்கு தெரியாத psychons  உண்டு!!!
ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான பாச பினைப்புடைய ஆழ்மனதுக்கு சம்பதமுடைய அனுபவங்கள் ,இடங்கள்,மனிதர்கள் இருப்பார்கள்!! சிலநேரங்களில் அரைதூக்க நிலையில்  திடீரென்று நாம் படித்த பள்ளிகூட வராண்டாவில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படுவது உண்டு .
ஆனால் இவை அனைத்துக்கும் அடுத்தகட்டமாக ஒன்று  உள்ளது . நம்முடைய எண்ணங்களின் psychons அந்த பள்ளிகூட வராண்டாவிர்கே சென்று அங்கு நம்முடைய ஆவியாக தோன்றுவது!
 இதை தான் psychons theory என்கிறார்கள் .
அதன்படி இறந்தபிறகும் உடலில் இருந்து வெளிபடுகிற நமது எண்ண அலைகள், அதாவது psychons !! நமது மனதின் வீரியதிருக்கு ஏற்ப கொஞ்ச காலத்திற்கு அந்த வீரியம் போகும் வரை பூமியில் தங்குகின்றன. போக போக அந்த psychons வலுவிழந்து, அதாவது அதன் வீரியம் குறையும் போது அவை முற்றிலும் செயல் இழந்து போகின்றன. இது ஒரு ஆபத்தில்லாத, அப்பாவியான என்ன அலைகளின் உருவகம் . இது தான் கேரிங்டனின் theory.
 அதற்கேற்ப அந்த பங்களாவில் சுற்றி திரிந்த பெண்ணின் ஆவியானது, அந்தப்பெண் கோமாவிலிருந்து விழித்ததும் ,சிலகாலங்களில் அந்த பங்களாவில் சுற்றி திரிந்த ஆவியின் நடமாட்டமும் இல்லாமல் போனது. இப்போது உங்களுக்கு பல விஷயங்கள்  புரிந்து இருக்கும். கொலை,விபத்து போன்ற அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள் பழி தீர்க்கும் வரையிலோ, அல்லது ஆசைகள் நிறைவேறும் வரையிலோ பூமியில் உலவும் என்று கேள்வி பட்டு இருப்பீர்கள். இப்பொழுது அந்த சம்பவங்களையும் , மேலே சொன்ன psychons theory யையும் ஒன்றாக பிணைத்து கூட்டி கழித்து  பாருங்கள்.கணக்கு சரியாக வரும். உங்கள்  வாழ்வில் நடந்த பல இனம்புரியாத சம்பவங்களுக்கும், உங்களுக்கு அடிக்கடி வரும் கனவுகளுக்கும் கூட இது ஒரு  திறவு கோலாக இருக்கும்.மேலும் நமது முன்னோர்கள் கூறிய படி சித்தர்களின்  கூடுவிட்டு கூடு பாய்தல், ஒரு இடத்தில இருந்துகொண்டு வேறொரு இடத்தில இருப்பது போன்ற மாயை தோற்றுவித்தல்   போன்ற பல அதிசய சம்பவங்களுக்கும் இதுவே அடிப்படை கோட்பாடு. ஆனால் இப்போது நான் அதை பற்றி பேசினால் உங்களை ஆன்மிகத்தின் வழியே கொண்டு செல்வது போல் ஆகிவிடும். எனவே அதை வேறொரு தொடரில் விரிவாக எழுதுகிறேன்.

- பகுதி 3
மூன்றாவது பகுதிக்கு வரவேற்கின்றேன்  இந்த தொடரின் முக்கிய பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன் .தொடர்ந்து வாருங்கள் ..ஆவிகளை பற்றி தமிழில் வெளி வரும் கட்டுரைகளும்  நூல்களும் மிக குறைவு .. அவற்றில் மிக முக்கியமான நூல் திரு மதனின் ஆவிகளை பற்றிய நூல் தான் ..நேரம் இருந்தால் வாங்கி படியுங்கள் ..அவர் தன்னுடைய நூலில் குறிப்பிட்ட சில நிகழ்சிகளை  பற்றி இணையத்தில் ஆராய்ந்ததில் மேலும் பல திகிலான தகவலை பெற முடிந்தது  அதன் முழு விபரம் இதோ !!!
    பிரிட்டனின் லங்காஸ்டர் எனும் ஒரு ஊர் உள்ளது..அதன் தலைமை அதிகாரி நீள் மௌன்சே... நன்கு படித்தவர் . அதற்கும் மேலாக ஒரு சிறைச்சாலையின் தலைமை அதிகாரி .பலவேறு தரப்பட்ட கொடூரமான குற்றவாளிகளை தன்னுடைய கட்டிற்குள் வைத்திருக்கும் மிக நெஞ்சுரம் மிக்க மனிதர் ..ஆவி ,பேய் இவற்றின் மீது எல்லாம் சிறிதும் நம்பிக்கையற்ற அவர் தன்னுடைய அனுபவத்தை   விவரிக்கிறார்.நடந்ததை அவரே சொல்லட்டும்......
         மிக முரட்டு தனமான குற்றவாளிகள் கூட விடுதலை ஆகும் நாளில் முகத்தில் மிக மகிழ்சியோடு சிரிப்போடு இருப்பார்கள் .....
  மெக்ராய்.. பல்வேறு கொள்ளை அடிதடிகளில் ஈடுபட்ட குற்றவாளி அவனுக்கு அன்று விடுதலை ... நானே நேரில் சென்று சிறை கதவை திறந்தேன் ... ஆனால் அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி சிறிதும் இல்லை ... ஒரு விதமான சீரியசான முகத்துடன் சைகை செய்து என்னை உள்ளே வர சொன்னான் .பின் குரலை தாழ்த்தி என்னிடம் கூறினான் "இத்தனை நாள் நான் உங்களிடம் இதை சொல்லவில்லை ....காரணம் நான் அதை அவ்வளவு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை .இங்கே ஒரு ஆவி இருக்கிறது . உண்மையில் ஒரு ஜோடி ஆவிகள் " என்றான் . அப்படியெல்லாம் இல்லை ஒன்றும் கதை கூறாதே என்றதற்கு "இல்லை சார் நிஜமாகவே இங்கு உள்ளது . ஒரு அம்மா ஒரு மகள் போன்று இருந்தது . சில சமயம் மிக தெளிவாக தெரியும் ... என் அறைக்கு நேர் எதிரே உள்ள வராண்டாவிலிருந்து வரும்... சிலநேரம் பத்தடி தொலைவில் நின்று மறைந்து . சில நேரம் அறை கதவின் கம்பிகளின் வழியாக உள்ளே வரும் .நான் எதற்கு சொல்கிறேன் என்றால் பயந்த சுபாவம் உடைய யாரையும் இந்த அறையின் உள்ளே போடாதீர்கள் என்றான் ".
நானும் சிரித்துகொன்டே சரி சரி சொல்லிவிட்டு சென்றேன் .சில மாதங்கள் கழித்து இன்னொரு கைதி அங்கே அடைக்கப்பட்டான்.அவனும் வந்த ஒரு வாரத்தில்  அதே அனுபவத்தை சொன்னான் .ஆனால் சிறிது வித்தியாசம் .இவன் பார்த்த அந்த ஆவி மிக அவலட்சணமாக முகத்தில் சிறு சிறு கொப்பலங்களுடன் சற்று கொடூரமாக இருந்தது. அவன் கெஞ்சி கேட்டு கொண்டதால் அவனை வேறு சிறைக்கு மாற்றினேன் .ஆனால் அப்போதும் என் மனதில் எந்த சிந்தனையும் தோன்றவில்லை .
லங்காஸ்டர் சிறை

அதே அறைக்கு ராணுவத்தில் கமாண்டோவாக இருந்த இன்னொரு கைதி அடைக்கபடான் .கோபத்தில் ஒரு இளைஞரை கையால் அடித்தே கொன்ற கொடூரன்.. எதற்கும் அஞ்சாத முரடன்.எல்லா அறையிலும் எமெர்ஜென்சி வந்தால் கைதிகள் உபயோகிக்க ஒரு அலாரம் உண்டு. இரவு சுமார் 1௦ மணி அளவில் அந்த கைதியின் அலாரம் அடித்தது .நானும் இன்னொரு அதிகாரியும் ஓடி சென்று பார்க்கும் போது அந்த கைதி சுவரோடு சுவராக ஒட்டி கொண்டு பயத்தில் முகமெல்லாம் வெளிறி போய் இருந்தான்.அவனை அமைதி படுத்தி பேசவைக்கவே அறை மணி நேரத்துக்கும் மேல் ஆனது.பின் நடந்தது என்னவென்று அந்த கைதி சொன்னது இதுவே .. "நான் ரகசியமாக வைத்திருந்த சிகரெட் பாக்கேட்டிலிருந்து ஒரு சிகரெட்டை பற்றவைக்கும் போது தான் அதை பார்த்தேன் .. முகத்தில் கொப்பலங்களுடன் பெண் ஆவி கம்பிகளுக்கு உள்ளேன் நின்று கொண்டு என்னை பார்த்து கொண்டு இருந்தது.பின்பு மெதுவாக நெருங்கி வந்தது. அதேப் சமயம் என் கையிலருந்த சிகரெட் தானாக கழன்று அந்தரத்தில் மிதந்தது ... நான் ஒரு டவலால் ஜன்னலை மூட பார்த்தேன்.. ஆனால் அந்த டவல் அந்தரத்தில் கிடைமட்டமாக  மிதக்க தொடங்கியது . பிறகு ஏதோ ஒன்று என்ன பின்னுக்கு தள்ளியது .. ரொம்ப பயந்து போய்  அலறினேன்..  சிறிது நேரத்தில் அனைத்தும் கீழே விழுந்து அந்த உருவம் வராண்டா கோடியில் சென்று மறைந்தது" என்று சொல்லி முடித்தான் அந்த கைதி ...
      நான் இந்த முறை விடவில்லை.. அந்த ஆவி மறைந்த இடத்தை தொடந்து சென்றேன்.அந்த சிறை ஒரு பழைய கோட்டை . பாதாள சிறையாக பயன்படுத்தப்பட்ட இடம் .அங்கு பல கொடூரமான தண்டனைகளும் அநியாங்களும் நடந்திருக்க கூடும்.அங்கே இருந்த பாதாள சிறையை அப்போது தான் நானே பார்த்தேன். பின்பு அதன் பூட்டை உடைக்க சொல்லி கீழே சென்றேன் ..
 லாங்ஸ்டார் கோட்டை  (சிறை)
. பின்பு அந்த குறுகலான பாதாள சிறையின் வழியே நடக்கும் போது தான் நான் கண்டேன்.. அங்கே  பல இரும்பு  வளையங்கள் தாரயினில் கைதிகளை கட்டிவைக்க பொறுத்தபட்டிருந்தன. நான் மேலே செல்ல செல்ல ஒரு விதமான குளிர்ச்சியான சூழலுக்கு அறை மாறியது . மேலும் காதருகே யாரோ மூச்சு விடுவது போன்ற ஒரு உணர்வு !! ஒரு விதமான விவரிக்க முடியாத எரிச்சலூட்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டேன்.என்னால் அங்கு மேலும் அங்கு நிற்க முடியவில்லை. காரணம் அங்கே வீசிய பயங்கர துர்நாற்றம் ... நான் திரும்பி வந்தேன்.. உடனே என் அறைக்கு ஓடி சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து  வரும் போது தான் அந்த பயங்கரம் நடந்தது.. என் கட்டிலின் வெகு அருகில் ஒரு மெல்லிதான குறட்டை சதம் .... எனக்கு வியர்த்துவிட்டது . கவனித்ததில் அது இறந்து போன என் தந்தையில் குறட்டை சத்தம்.ஆம் நான் அடித்து கூறுவேன் அது  அவரின் சத்தம்  தான் ... சிறிது நேரம் வெடவெடத்து போன எனக்கு பழைய நிலைக்கு வர சிறுது நேரம் பிடித்தது.
ஆம் அந்த அதிரடியான சிறை அதிகாரியே ஆடி போன நிகழ்வு அது ..நான் இந்த நிகழ்வை இங்கு கூறுவதற்கு காரணம் என்ன ??? பின்னர் வரும் பகுதிகளில் விள்ளகமாக சொல்கிறேன் .
ஆவிகளை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு ஆராய்சிகளும் கோப்புகளும்  தரவேற்றம் செய்யபடுகின்றன. ஆவிகள் இல்லை என்று கூறுவதும் அறிவியலாளர்கள் தான்.. அதே ஆவிகளை படம் பிடிக்க  பல்வேறு கருவிகளை உருவாக்கி அவற்றை படம் பிடிக்க ஊர் ஊராக சுற்றுவதும் அதே அறிவியலாளர்கள் தான்.. அவைகளை படம் பிடிக்க அவர்கள் உருவாக்கிய gvd கேமரா அதி அற்புதமான தொழில்நுட்பம் . அவற்றை பற்றி கூறுவதற்கு வேறொரு தனி அத்தியாயம் உள்ளது . அபொழுது விளக்கமாக சொல்கிறேன் ...
 1880 முதல் நான் கூறிய அந்த NESPR அமைப்பில் உள்ள டாக்டர்பட்டம் பெற்ற பல   மனோததுவியலாலர்களும் அறிவியலாளர்களும்  20000 க்கும் மேற்பட்ட ஆவிகளை பற்றிய கோப்புகளை தயாரித்து இன்னும் பல ஆவிகளை பற்றிய கோப்புகளை தரவேற்றம்  செய்து கொண்டு உள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.. அவர்கள் யாரும் மூடர்கள் கிடையாது . பல்வேறு ஆராய்சிகள் செய்து பட்டங்களை பெற்றவர்கள்.. அவர்கள் இன்னமும் தன்களுடைய ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள் !!
 ஆவிகளை பற்றி ஆராயும் அணைத்து நிபுணர்களும் ஆவிகளை பற்றிய  வகைகளை ஒப்புக்கொண்டுள்ளனர். அது என்ன ஆவிகளின்  வகைகள் . நீங்கள் நினைப்பது போல் காட்டேரி ,குட்டிசாத்தான் ,கொள்ளிவாய் பிசாசு, வயசு பசங்களை பிடித்து கொள்ளும் என்று கூறப்படும் மோகினி பிசாசு என்றல்லாம் இல்லை !!! ஆவிகளை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து தான் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு பல்வேறு தரதினாராலும் ஒப்புகொள்ளப்பட்ட முடிவாகும் ..  அவற்றில் முக்கியமானதாக கருதப்படும் வகை CRISIS APPARATIONS. அதாவது ஆபத்து நேர ஆவிகள்..
 அது ஏன்?? அது என்ன ஆபத்து நேர ஆவிகள் ??  எனக்கு தெரிந்து  10 ல் 7 நபராவது இந்த ஆவிகளை உணர்ந்து இருப்பார்கள்..
இந்த CRISIS APPARATION என்பது ஒருவர் இறக்கும் தருவாயில் தனக்கு மிகவும் பிடித்தவர்களிடமும் தான் மிகவும் விரும்பிய இடத்திலும் தோன்றி தான் பிரிந்து செல்வதை வலியுறுத்தும் பொருட்டு தோன்றும் . புரியவில்லையா ???
கல்கத்தாவில் நடந்த ஒரு  உண்மை சம்பவத்தை காண்போம் .
       1917 கல்கத்தாவில்  வசித்து வந்த  திருமதி SPHEREMAN மார்ச் 19 தனது குழந்தையை  தூங்க வைத்து கொண்டு இருந்தார் ...அவரின் அண்ணன் ALTRET .பிரான்ஸ் நாட்டில் விமானபடையில் பைலட்டாக பணி புரிந்து கொண்டு இருந்தார் ..தான் அண்ணனிடம் SPHEREMAN க்கு மிகுந்த பாசம் .. காலை சுமார் ஒரு 1௦ மணி இருக்கும் . தனது குழந்தையை படுக்க வைத்து விட்டு திரும்பிய அவர் வியப்பில் ஆழ்ந்தார். தன் அறை ஜன்னலுக்கு வெளியே தோட்டத்தில் முழு விமானபடை சீருடையில்  அவரது அண்ணன் ஆல்ட்ரெட்!
விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் தன் தங்கை வீட்டுக்கு தான் வருவார் அல்ட்ரெட்...ஆனால் இப்படி சொல்லாமல் கொள்ளமல் வந்தது இல்லை . மகிழ்ச்சியோடு ஜன்னலை நோக்கி நகர்ந்த அந்த பெண்மணி தன் அண்ணனை நோக்கி "ஏன் அங்கே நிற்கிறாய் ? உள்ளே வாயேன்" என்று சொன்ன மறுகணம் அந்த அண்ணனின் முகத்தில் ஒரு வித பரிதாபம்.. தன் தங்கையை பார்த்து ஒரு வித ஏக்கத்தோடு தலையசைத்த  அண்ணனின்  உருவம் மெல்ல மறைந்து போனது .

கலங்கி போய்  சொல்லமுடியாத துயரத்தில்  ஆழ்ந்த SPHEREMAN சோகத்துடன் தான் குழந்தையிம் அருகே படுத்து தூங்கினார் .... மாலை தன் கணவர் அலுவலகதிலிருந்து வந்தவுடன் நடந்ததை சொன்னார் !! இது எல்லாம் பிரம்மை என்று கூறி அவரை சமாதானம் செய்ய முயன்றார் அவர் கணவர். மேலும் இது பற்றி தன்னுடைய பல நண்பர்களிடமும் அன்றே கூறி இருந்தார் SPHEREMAN.
மறுநாள் தந்தி வந்தது. ஆம் . ALTRET ஒரு விமான விபத்தில் இறந்துவிட்டதாக !!!! ப்ளேன் விழுந்து நொறுங்கிய பொது அவரின் கையில் இருந்த கடிகாரம் முட்கள் அப்படியே நின்று போய் இருந்தன. அந்த முட்கள் காட்டிய நேரம் காலை 1௦ மணி. ஆம்!!
அந்த பெண் தனது அண்ணனை பார்த்த அதே காலை 1௦ மணி தான் !!!
இப்பொழுது புரிகிறதா??? ஆபத்து நேர ஆவிகள் என்றால் என்னவென்று??
 என் நீங்களும் அல்லது உங்கள் நண்பரோ உறவினரோ கூட இதே போன்றதொரு அனுபவத்தை சந்தித்து இருக்கலாம்.. "எனக்கு அப்போவே மனசுல நெருடலாவே இருந்துச்சு!!! இப்போ சரியா போச்சு என்று கூறுவதை கேட்டு இருக்கலாம் ".. இதை தான்  ஆபத்து நேர ஆவிகள் என்பார்கள். இவை கெடுதலோ அல்லது வேறு எந்த செயலையும் செய்வது இல்லை.. தனது பிரிவை தனது நெருக்கமானவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு வெளிப்படும் ஒரு அன்பின் வெளிப்பாடாகவே கருதுகின்றனர் .
   அப்படிஎன்றால் இறந்து போனால் மட்டும் தான் ஆவியா??? நாம் காணும், ஆவிகள்  அனைத்தும் இறந்துபோனவருடைய உருவமா?? என்று கேட்டால்  சத்தியமாக இல்லை.இறந்து பின் மீண்டும் உயிர் பெற்றவர்களும் உண்டு !!! உயிரோடு இருக்கும் போதே ஆவிகளாக வலம் வந்தவர்கள் உண்டு . என் நீங்களும் கூட உங்களுகே அறியாமல் பிறருக்கு ஆவி உருவில் காட்சி கொடுத்து இருக்கலாம் ... என குழப்புகிறேனா??
காண்போம் அடுத்த பதிவில்

 Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies