பேய் கப்பல்!

05 Dec,2018
 

 

 
 
டைட்டானிக் கப்பல் கட்டப்படுவதற்கு முன்பே ஆர்.எம்.எஸ். குயின் மேரி கப்பல், கட்டப்பட்டது. டைட்டானிக்கை மிஞ்சும் பிரமாண்டமானது.

இந்த கப்பலின் நீளம் 1019.5 அடி. உயரம் 181 அடி. எடை 81,237 டன்கள். இதன் எஞ்ஜின் 1 லட்சத்து 60 ஆயிரம் குதிரைதிறன் கொண்டது. இதில் 3 ஆயிரம் பேர் சொகுசாக பயணிக்கலாம்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் பிரவுன் கம்பெனி மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. பிரமாண்ட கப்பல் என்பதால் இதனை தயாரிக்க பல ஆயிரம் கோடிகள் செலவாகின. கப்பல் கட்டுமான வேலைகள் பாதி முடிந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் பாதியிலேயே கப்பல் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் டைட்டானிக் கப்பலை உருவாக்கிய வைட் ஸ்டார் லைன் என்ற கம்பெனி கைக்கொடுக்கவே 1936–ம் ஆண்டில் குயின் மேரி கப்பல் முழுமையாக தயாரானது. 
1936–ம் ஆண்டு மே 27–ந்தேதி இதன் முதல் பயணத்தை எட்டாம் எட்வர்ட் அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத், டச்சு பிரபுக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இடைவெளியின்றி 31 ஆண்டுகள் பயணத்தை தொடர்ந்தது. அதற்குள் 1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்திருந்தது. இத்தகைய சிறப்புமிக்க கப்பல், 1967–ல் ஓய்வு பெற்றது. இந்த கப்பல் தற்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதுவரை ஆடம்பர கப்பலாக செயல்பட்ட குயின் மேரி, ஓய்விற்கு பிறகு உலகின் பிரமாண்ட ஓட்டலாக மாறியது. கப்பலின் உள்தோற்றத்தை கொஞ்சம் மாற்றி நட்சத்திர ஓட்டலாக பயன்படுத்தி வருகிறார்கள்.  இந்த ஓட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மில்லியன் பேர் வந்து செல்கிறார்கள். இவ்வளவு பிரமாண்ட கப்பல் இன்னொரு வகையிலும் இந்த உலகத்தை மிரட்டி வருகிறது. அந்த மிரட்டலின் முதல்படியாக இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கிரே கோஸ்ட்’!. 
 
இந்தக் கப்பல் ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களுக்குப் புகழ் பெற்றது. கப்பல் கட்டமைக்கப்பட்டது முதல் தற்போது வரை ஏராளமான அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறதாம். 
அமானுஷ்யம் மற்றும் ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் பீட்டர் ஜேம்ஸ், கடந்த 1991–ம் ஆண்டில் இருந்து இக்கப்பலில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்தக்   கப்பலில் உள்ள பேய், பிசாசுகளின் அட்டகாசங்கள் பற்றி, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார்: 
‘‘எனது ஆராய்ச்சியின்படி குயின் மேரி கப்பலில் பேய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கருது  கிறேன். இந்தக்கப்பலில் இன்றும் 600 பேய்கள் இருக்கிறது. பல துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம். இதில் பயணித்தவர்கள் இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர். ஜெர்மன் மற்றும் இத்தாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் சிறைக்கொடுமைக்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவருகிறது. அதுமட்டுமின்றி சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர். இப்படி இறந்தவர்களின் ஆவிகள் இந்தக்கப்பலில் நடமாடுகிறது. இக்கப்பலில் விநோத சத்தங்களும், காப்பாற்றச் சொல்லும் கூக்குரல்களின் ஓலங்களும் சில   பகுதிகளில் கேட்கிறது. அதில் சிலவற்றை நானும் கேட்டிருக்கிறேன்.
கப்பலின் மையப்பகுதியில் இருக்கும் நீச்சல் குளம் அமானுஷ்யம் நிறைந்தது. அதன் அருகில் 5 வயதுள்ள சிறுமி அடிக்கடி தோன்றுவதாக பலரும் கூறுகிறார்கள். கப்பலின் மற்றொரு நீச்சல் குளத்திற்கு அந்த சிறுமி அழைப்பதாகவும், அவளது பெயர் ஜாக்கி என்றும் கூறுகிறார்கள். 
 
சில சமயங்களில் இவளைத் தேடி ‘சாரா’ எனும் நடுத்தர பெண்மணி ஒருவரும் தோன்றி மறைவதாக ஒருவர் மூலம் அறிந்தேன். அந்த குறிப்பிட்ட நீச்சல் குளம் தற்போது மூடப்பட்டுள்ளது. கப்பலில் ஆங்காங்கே இருக்கும் அலுவலக ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் தானாக திறந்து மூடுகின்றன. பழங்கால உடை அணிந்த உருவங்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. கப்பலின் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்ட தலைகள், கைகள்–கால்கள் தோன்றி மறைகின்றன. அடிக்கடி பல இடங்     களில் அடையாளம் தெரியாத பல உருவங்கள் தோன்றி மறைகிறது என பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. திடீரென்று முணு முணுக்கும் குரல்கள், அடித் தொண்டையில் வெளிப்படுத்தப்பட்ட சத்தங்கள், அணைக்கப்பட்டிருந்த விளக்குகள் தானாகவே எரிந்து அணையும் மர்மம்...’’ இப்படி ஏதோ சினிமாவில் இடம் பெறும் காட்சிகள் போல பீட்டர் ஜேம்ஸ் பயம் கலந்த நடுக்கமான குரலில் பேய்களைப் பற்றிய அனுபவத்தை பதிவு செய்கிறார். 
கப்பலில் பேய், பிசாசுகள் இருப்பது உண்மை என்கிறார்கள் சிலர். இவையெல்லாம் அந்த ஓட்டலை நடத்த ஏற்  படுத்தப்பட்ட வியாபார தந்திரங்கள் என்கின்றனர் சிலர். எது உண்மை, எது பொய் என்பது முழுமையாக வெளிபடும் வரை ஆர்.எம்.எஸ். குயின்மேரி கப்பலின் பிரமாண்டம் போலவே, அதன் மர்மங்களும் பிரமிக்க வைக்கின்றது

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies