ஆவிகள் - APPARATIONS (AMITYVILLE HORROR)

16 Sep,2018
 

 

 
ஆவிகள் . அனைவரும் கேட்டு கொண்டபடி முதல் பதிவாக ஆவிகளை பற்றி எழுதலாம் என நினைக்கின்றேன் . எனக்கும் மிகவும் விருப்பமான துறை இது என்று சொல்லலாம் .என்ன இவன் ஆவிகள் பத்தி சொல்லுவான்னு சொல்லிடு எதோ பட்டதாரி மாதிரி துறை கிரைன்னு  சொல்றான்னு பாக்குறிங்களா ..ஆம் ஆவிகளை பற்றி ஆராய்வதற்கென்று தனி இடம் தனி அமைப்பு . அதுவும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்ற அமைப்புகள் இருக்கு . இது மாதிரி நமக்கு பரிச்சயம் இல்லாத பல விசயங்களை பத்தி தான் இந்த கட்டுரை எழுதலாம்னு இருக்கேன்.இதை ஒரே கட்டுரையாக எழுதுவதா இல்லை தொடராக எழுதுவதாஎன குழப்பத்தில் இருந்தேன். ஒரே கட்டுரையில் அனைத்தையும் விரிவாக சொல்லமுடியாது என்பதால் தொடராக எழுதலாம்னு முடிவு பண்ணிருக்கேன் . என்னுடைய முதல் முன்னுரை  பதிவில் பல எழுத்து பிழைகள் இருந்ததற்கு மன்னிக்கவும் . சுட்டி காட்டிய அனைவருக்கும் நன்றி .... முடிந்தவரை திருத்தி கொள்கிறேன் ... முதல் தமிழ் பதிவு என்பதால் பிழைகள் செய்து விட்டேன்.மன்னிக்கவும். சரி விஷயத்துக்கு வருவோமா ????
 ஆவிகள் . இதை கேட்டவுடன் பயம் வருதோ இல்லையா நிச்சயம் ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் . ஆவிகளை பற்றி முதலில் தெரிந்து கொண்டால் பிறகு நான் சொல்லபோகும் விஷயங்களை புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் .ஆவிகளை பற்றி சொல்லவேண்டும் என்றால் பலருக்கும் பலவிதமான நம்பிக்கைகள் இருக்கு. சிலர் அந்த எடத்துல  ஆவி இருக்கு.. மதியநேரம் நடுராத்திரிக்கு அங்க போன அது அடிச்சிடும் அப்டின்னு சொல்லுவாங் . சிலர் ஆவிலாம் சும்மா மூட நம்பிக்கைன்னு சொல்லுவாங்க.சிலர் ஆவிகளும் இருக்கு நாமளும் இருக்கோம். யாராலையும் யாருக்கும் தொல்லை இல்லை. செத்து  போனவங்க  ஆவியா அவங்க நிம்மதிய தேடி திரியுறாங்க அப்டின்னு சொல்லுவாங்க.
   ஆவி பத்தி நான் சொல்லும்போது என்னோட நிலைப்பாடு  என்ன என்பதையும் சொல்லவேண்டும். நான் மேல சொன்ன இந்த மூணு நிலைகளிலும் வருவேன். பின்பு அவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.. முதலில் ஆவி என்பது பேய். அத பாத்தா நாம இறந்துவிடுவோம் என்று நம்பியது ஒருகாலம். பின்பு விடலை பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆவிகளை பற்றி பேசுபவர்களை பார்த்து  "பரிசுத்த ஆவியில இட்லி வேகுமா" அப்டின்னு கேலிசெய்தது ஒருகாலம். இப்பொழுது அவை அனைத்தையும் புரிந்துகொண்ட பல நிகழ்வுகளை கண்டு ஒரு சரியான நிலைபாட்டையும் கருத்தையும் கொண்டு இந்த கட்டுரை எழுத தகுதியோடு இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன்.  முதலில் ஆவிகளை பற்றிய பல உண்மையான சம்பவங்களை பார்துவிடுவோம்..
   ஆவிகளுக்கு பொதுவான குணம் உண்டு. எப்போதும் தங்கள் இருப்பை தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு  காட்டவே விரும்பும் என்று இணையத்தில் படித்த நியாபகம். படித்து சிலமாதங்கள் கழித்து ஈஷா சத்குரு அவர்களின் சொற்பொழிவில் இதே வார்த்தைகளை கேட்டேன். ஆம் நான் பார்த்த படித்த பலசம்பவங்கள் அனைத்தையும் இதையே உண்மை என்று நம்புவதர்கிணங்க அமைந்துள்ளது ... ஆனாலும் என்னுடைய நிலைப்பாடு வேறு .. என்னுடைய கருத்துகளை உங்கள் மீது திணிக்க முடியாது .. இது இப்படி என்று கூறுவது தான் என்னுடைய வேலை. முடிவு உங்கள் கையில்.
      நவம்பர் 13 1974....இங்கிலாந்து ..ரொனால்ட் (RONALD DAFEAO) எனும் மனிதர் அதிகாலை தன்னுடய படுக்கையிலிருந்து  எழுகிறார்.தன்னுடைய துப்பாக்கியை எடுத்து நேரே தன்னுடைய தந்தையின் அறைக்கு சென்று துப்பாக்கியை கொண்டு சுடுகிறார் .. பின்பு தன்னுடைய இளைய சகோதரி , இரண்டு சகோதரர்கள் இருவரையும் சுட்டு வீழ்த்துகிறார். ஆம் தன்னுடைய கையாலேயே தான் குடும்பத்தை அழித்தார். ஒரு மனிதன் ஏன் தன்னுடைய குடும்பத்தை தானே அழிக்க வேண்டும்ப. லர் கூறியது அவர் PSYCHO. ஆனால் சோதித்ததில் அவர் நார்மலாக உள்ளார் என கூறினர்.  பலர் கூறியது அவர் போதையில் சுட்டுகொன்று விட்டார்  என்றார்கள் ... அப்படி சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி இறந்தவர்களின் சடலங்கள் தரையை நோக்கிய நிலையில் கிடக்கின்றன... ஆனால் துப்பாக்கி குண்டுகள் தரையில் சிதரவில்லை. இன்னும் சொல்லபோனால் குண்டு இருப்தற்கான அடையாளமே தெரியவில்லை. இதை விட முக்கியமான சம்பவம் சம்பவம் நடந்த வீட்டிலிருந்து பக்கத்துவீடுகள் வெறும் கூக்குரலிடும் தொலைவில் தான் இருந்தன   இறக்கும்போது துப்பாக்கி வெடித்த சத்தம் யாருக்கும் கேக்கவில்லை. இந்த சம்பவத்தை பற்றி RONALD கூறியது ஒன்றே ஒன்று தான்... நான் போதையில் இல்லை. என்னை அது தான் அவ்வாறு செய்ய தூண்டியது என்று கூறினார். முதலில் யாருக்கும் அவர் கூறியது புரியவில்லை. பின்பு விரிவாக விசாரித்து பார்க்கும்போது தான் அவர் முழுமையாக கூறினார்.
     ஒரு கருப்பு உருவம் என்னை அவ்வாறு செய்யும்படி தூண்டியது. என்னுடைய சகோதரி ,சகோதரர்கள் ,தந்தை  அவர்களை கொல்லும் படி  செய்தது .என்னால் அந்த சக்தியை மீறி ஏதும் செய்ய முடியவில்லை என்றார் .
இதன் பிறகு  அந்த வீட்டை பலர் பேய் இருப்பதாக நம்பினார்கள்... ஆனாலும் பேய் பிசாசுகளை நம்தபா சிலர் இருக்கத்தான் செய்வார்கள் (கல்யாணம் ஆகும்வரை) ...
 
 அந்த வீட்டை வாங்க முன்வந்தனர் தைரியசாலி தம்பதியரான GEORGE-KATHY LUTZ தம்பதியர்.. முதல் சிலநாள்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தது. பின்பு வந்த ஒரு மாத காலம் .. அவங்க பட்டபாடு அவங்களுக்கு தான் தெரியுங்கர மாதிரி போச்சு... ஆம் அடிக்கடி சில உருவங்கள் சுவற்றில் தெரிய ஆரம்பித்தன..சம்பந்தமே இல்லாமல் அவர்களின் வீட்டு நாய் சுவற்றில் தலை இடித்து விழுந்தது முதல் பல இரத்தம் உறைய வைக்கும் சம்பவங்கள் நடக்க தொடங்கின. வேறு வழி இல்லாமல் அந்த தம்பதியினர் 4000 சதுர அடி  அளவுள்ள அந்த வீட்டை காலி செய்து சென்றனர். பின்பு வீட்டிற்கு வரவழைக்கபடுகிறார்கள் LORRAINE-EDWARREN தம்பதியினர்.  என்ன எங்கயோ கேட்ட பேரு மாதிரி இருக்கா.. ஆமாங்க  அதே தான்... CONJURING படத்துல வர அதே தம்பதியினர் தான். மேலே சொல்லப்பட்ட சம்பவமும் அவர்கள் விசாரித்த பலநூறுகனக்கான சம்பவங்களில் இன்றும் பேசப்படும் ஒரு சம்பவம்தான்.. மேலே சொல்லப்பட்ட இந்த சம்பவத்தை சமீபத்தில் வெளியான CONJURING-2 என்ற திரைபடத்தில் மேலோட்டமாக அறிமுக காட்சியாக சொல்லியிருப்பார்கள்.
 
 இங்கு இந்த சம்பவத்தை பற்றி மேலும் பார்ப்பதற்கு முன்னர்
ED-LORRAINE தம்பதியினர் பற்றி சொல்லியே ஆக வேண்டும். CONJURING படம் பார்த்தவர்களுக்கு அவர்களை பற்றிய அறிமுகம் அவ்வளவாக தேவை படாது. பார்க்காதவர்களுக்கு சொல்கிறேன.
   
         வாரன் ஒன்றும் நம்ம ஊரில் இருக்குற சில போலி சாமியார் மாதிரி இல்லை. அவர் வளர்ந்த விதம் , வளர்ந்த சூழ்நிலை அனைத்தும் ஆவிகளின் இருப்பு உள்ள பகுதிகளில் தான் .. சொல்ல போனால் நானும் அது போன்ற சூழ்நிலைகளில் தான் வளர்ந்தேன். (இதுலாம் உணக்கே ஓவரா  தெரியலன்னு நீங்க சொல்றது நல்லா கேக்குது ) எதையும் உன்னிப்பாக கவனித்து ஆராய்ந்து முடிவுகளையும் எடுக்கும் அற்புத மனிதர். ஆவிகள் மட்டுமில்லாமல் ஓவியங்கள் வரைவது , கார் இயந்திர தொழில்நுட்பம் என்று பல்வேறு வேலைகளையும் தெரிந்து வைத்திருந்த ஒருவர் அவர் ...  LORRAINE தான் ஆழ்மனத்தின் சக்தியால் நம் கண்ணனுக்கு தெரியாத பல அம்ழ்னுஷ்ய சக்திகளை உணரும் பார்க்கும் அற்புத சக்தி கொண்டவர்கள்.அறிவியலில் இதை CLAIVIYORANCE என்று அழைப்பார்கள். அதாவது தொலைவில் நடப்பவற்றை ,அமானுஷ்ய விஷயங்களை உணரும் சக்தி. இதில் உள்ள அறிவியலை ஒத்துகொண்ட அறிவியல் அமானுஷ்யதிற்கு அவ்வளவாக மதிப்பளிக்கவில்லை என்பது சற்று வித்தியாசமான உண்மை .... இந்த தம்பதியினர் கண்டெடுத்த உண்மைகள் பற்பல .. ஆம் 19ஆம்  நூற்றாண்டின் மிகபெரிய புகழ்மிக்க ஆவி ஆராய்ச்சியாளர்களாக வளம் வந்தனர். மேலும் அவர்கள் பணத்திற்காக இந்த தொழிலை செய்யவில்லை. வாரன் வருவாய் ஈட்டியது     தன்னுடைய ஓவியங்களை விற்று அதில் வரும் வருமானத்தில் தான் வாழ்கையை கடத்தினர். அன்றைய காலத்தில் 15டாலருக்கு ஒரு கார் வாங்கினார் காரணம் தொலைதூரங்களில் இருந்து உதவி கரம் கேட்டு வருவோருக்கு உதவுவதற்கு .
 பிற்காலங்களில் அவர்கள் ஆரம்பித்த  NESPR-NEW ENGLAND SOCIETY FOR PSYCHIC RESEARCH தற்பொழுது உலக புகழ் பெற்ற அமானுஷ்ய சக்திகளை ஆராயும் அமைப்பாக உள்ளது .
     எட் - லோர்ரைன்
    சரி மீண்டும் விஷயத்துக்கு வருவோம் .... அந்த ஆவி நடமாட்டம் இருப்பதாக நம்பப்பட்ட வீட்டுக்குள் வரவழைக்க படுகின்றனர் LORRAINE - WARRAN தம்பதியினர் . ஆம் வந்ததும் அவர்களுக்கு புரிந்து விட்டது ஆவி நடமாட்டம் உள்ள வீடு என்று . அங்கு சென்றததிலிருந்து LORRAINE சொல்ல முடியாத பல அமானுஷ்ய சைகைகளாலும் சொல்லமுடியாது உணர்வினால் குழப்திலும் பயத்திலும் இருந்தார் . பின்பு மீண்டும் ஒரு நாள் அவர்கள் அந்த வீட்டினுள் பிரவேசிக்க முடிவெடுக்கின்கின்றனர். தனியாக அல்ல அவர்களின் அனுபவங்களை நிரூபிக்கும் வகையில் ஒரு செய்தி சேனலின் நிருபரோடும் பற்பல படம்பிடிக்கும் கருவிகளோடும் , மேலும் பிரபல பல்கலை கழகமான DUKE UNIVERSITY யிலிருந்து ஒரு பேராசிரியரோடு விட்டினுள் நுழைகின்றனர் .   லோர்ரைன் தான் சக்தியின் மூலம் அங்கு நடந்தவற்றை அறிய முனைகிறார். ஆனால் ஏதோ ஒரு சக்தியால் மிரட்டப்பட்ட தாக்கப்பட்ட அவர் அங்கு இருந்து முகுந்த பயத்துடன் வெளியேறுகிறார்கள். இந்த சம்பவந்தை தான் மேலே சொல்லப்பட்ட CONJURING 2 திரைபடத்தில் காட்சியாக அமைத்து இருப்பார்கள்.. மீண்டும் அந்த விடினும் நுழையவே கூடாது என்று முடிவுடன் வெளியேறுகின்றனர். ஆம் பல ஆவிகளை கையாண்ட அவர்களாலேயே அந்த சக்தியை கட்டுபடுத்த முடியவில்லை. கூட வந்த இருவரும் பயத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள் . பல முயற்சிகள் செய்தும் ஒன்றும் முடியாத நிலையில் இரு மாமனிதர்களும் அதிகாலை 1 மணி அளவில் வெளியேறுகின்றனர். ஆம் அந்த இருவராலும் தீர்க்கப்பட முடியாத பல சம்பவங்களில் இதுவும் ஒன்றாகி போனது. (மேலும் அவர்கள் கூட சென்ற பல்கலை கழக பேராசிரியர் இரண்டு நாள் கழித்து குளிர் ஜுரத்தினால் இறந்து போன  விஷயம் நமக்கு தேவையற்றது)
   
       ஆனால் மீண்டும் அவர்கள் அந்த வீட்டினுள் நுழைய முற்படுகின்றனர். அதன் பிறகு பிரபலமடைந்தது தான் AMITYVILLE HORROR என்றைழைபடும் இந்த சம்பவம் .
AMITYVILLE HORROR HOUSE
இந்த சம்பவம் பிரபலமடைய மேலும் ஒரு முக்கிய காரணம் ஆவிகளை ஆராய சென்ற குழுவினர் ஒருவரின் காமெராவில் பதிவான புகைப்படம் . நீங்களும் அதை பாருங்களேன்
 என்ன தெளிவாக தெரியவில்லையா சற்று ZOOM செய்த இந்த படத்தை பாருங்கள்
 
ஆம் திடுக்கிடவைக்கும் அந்த படம் இது தான். நீங்க பார்ப்பது உண்மை தான். இந்த படம் எந்த எடிட்டிங்கும் மோர்பிங்கும் செய்யபடவில்லை என்று புகைப்பட நிபுணர்கள்  சான்றிதழ் கொடுத்த புகைப்படம் இது . எனவே நானும் இதை போன்று எடிட்டிங்ங் செய்வேன்  என்றும் கிளம்பும் என்னை போன்ற சில முந்திரி கொட்டைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறேன்.
அறிவியலால் விளக்கம் சொள்ளபடமுடியாத பல அமானுஷ்ய புகை படங்களில் இதுவும் ஒன்றாகி போனது.
 
  இதுபற்றி பல  திரைபடங்களும் நூல்களும் வெளிவந்து இருக்கின்றன .. அவற்றில் முக்கியமானது  ஜே ஆன்சன்(JAY ANSON) எழுதிய AMITYVILLE HORROR எனும் நூல் தான் .இது பிரபலமடைய முக்கிய காரணம் இந்த நூல் எழுத ஆரம்பித்தது முதல் பல இன்னல்களையும் அமானுஷ்ய அனுபவங்களையும் அனுபவித்த அவர் இந்த நூலின் கடைசி அத்தியாயத்தினை எழுதும் போது ஹார்ட் அட்டாக் வந்து பலநாள்கள் படுக்கையில் இருந்தார் ...
 நான் இந்த சம்பவத்தை பற்றி கூற முக்கிய காரணம் பேய் இருக்கா இல்லயான்னு விவாதிக்கிரத விட ஒரு பிரபலமான உண்மை சம்பவத்தை வைத்து அதில் உள்ள உண்மை பொய்களை ஆராயும்போது பல உண்மைகள் புலப்படும் என்பது தான்.
அனைத்தையும் தாண்டி வாரன் ஆவிகளை பற்றி  சொல்வது ஒன்று தான் ... ஆவிகள் எங்கும் இருக்கின்றன . ஒரு மின்விசிறி சுற்றாமல் இருக்கும் போது அதன் இறக்கைகளை நான் பார்க்க முடியும் ... ஆணை அது சுழலும் போது ஒரு குறிப்பிட வேகத்திற்கு மேல் நாம் அதை காண முடியாது . அது வேறு அதிர்வலையில் இருக்கும் ,,, அது போல தான் ஆவிகள் , நாம் ஒரு குறிப்பிட்ட மன நிலையில் ஒருமித்த கவனத்துடன் இருக்கும்போது அவற்றை எளிதாக பார்க்க புரிந்துகொள்ள முடியும் . மேலும் நான் இந்த கட்டுரையில் கூற நினைத்த இன்னொரு விஷயம் அதிகாலை 3 மணியின் முக்கியத்துவம் .. மேலே சொல்லப்பட்ட AMITYVILLE சம்பவத்தில் ரோனல்ட் அனைவரையும் சுட்டு வீழ்த்தியது அதிகாலை 3.15.CONJURING படத்தில் சொல்லப்பட்டுள்ள சூனியக்காரி தான் குழந்தை கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கிய நேரம் அதிகாலை 3.05.  மேலும் என் வாழ்விலும் பல சம்பவங்கள் இந்த நேரத்தின் முக்கியதுவத்ஹை பற்றி ஆராயும்படி செய்திருக்கிறது அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம் .

 Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies