எங்களின் விவசாய கிராமத்தில் 60 வீடுகள்.
எங்களின் வீட்டுக்கு அருகே இருந்த ஒரு அழகான குடும்பம் அம்மா,அப்பா,மூன்று மகன்கள்,இரண்டு மகள்கள்,4 மாடுகள் ஒரு மாட்டு வண்டி சிறிது விவசாய நிலம் என்று குறுகிய வட்டத்திலிருந்த மகிழ்ச்சியான குடும்பம்.அம்மாவின் பெயர் காந்தம்மா அவருக்கு ஒர் இரவு ஆழ்ந்த தூக்கத்தில் தங்கள் நிலத்தில் 15 அடி ஆழத்தில் மேற்கு பார்த்த எல்லையில் ஒரு தங்க புதையல் இருப்பதாகவும் அதை எடுக்க பல பூஜை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லி மறைந்தது ஒரு உருவம்,
அதை சற்றும் எதிர்பாராத காந்தம்மா பயந்து விழித்து கொண்டார். நடந்த கதையை கணவர் ராமனிடம் சொல்ல அவர் அடுத்த நாள் வீட்டிலிருந்த தங்கள் இரண்டு மகன்களுடன் கலந்து ஆலோசித்து வெளியே யாருக்கும் தெரியாமல் தங்கள் நிலத்தின் மேற்கு பார்த்த எல்லையில் குழி வெட்ட முடிவு செய்தனர்.
ஊரில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தங்கள் நிலத்தில் கிணறு வெட்ட போவதாகவும் அதில் வரும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த போவதாகவும் விமர்சனம் செய்தனர் பிறகு முத்த மகனான சங்கர் இளைய மகனான விஜயன், பக்கத்து கிராமத்திலிருந்து கூலி ஆட்களை அழைத்து வந்து கிணறு வெட்ட ஆரம்பித்தனர்,கிணற்றின் ஆழம் 11 அடி இருக்கையில் கையில் பணம் இல்லாததால் வேலையை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்து திட்டமிட்டு கூலி ஆட்களை விரட்டினர்.
சிறிது நாட்கள் கழித்து சங்கர்,விஜயன் மற்றும் அவரின் தந்தை ராமன் மூவரும் சேர்ந்து கிணறு தோண்ட ஆரம்பித்தனர், கையில் பணம் இல்லை என்று வேலை ஆட்களை நிறுத்தியதாலும்,விவசாய நிலத்தில் கிணறு வெட்டுவதாலும் ஊரில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை,
கிணறு 13 அடி வந்தவுடன் தண்ணீர் ஊற்று வர ஆரம்பித்துவிட்டது அவர்களின் வேலை தடைபட்டது, என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தனர்.
கத்திரி வெயில் வர இன்னும் இரண்டு மாதம் தான் இருக்கிறது என காந்தம்மாள் சொல்ல, வெயிலை எதிர்பார்த்து காலத்தை கழித்தனர், இதற்கிடையில் கிணறு வெட்ட வருகை தந்த கூலி ஆட்களில் ஒருவன் பாம்பு கடியால் இறந்தான். இதை எதார்த்தமாக எடுத்து கொண்ட ஊர் மக்களுக்கும், காந்தம்மாள் குடும்பத்தினருக்கும் தெரியாது!!
நடந்தது விபத்தல்ல தண்டனை என்று.
தண்டனை கொடுத்தது யார்? எதற்காக?
கத்திரி வெயில் சுட்டெரித்தது கிணறுகள்,ஆறுகள்,குளங்கள், வறண்டது காந்தம்மாள் கிணறும் வறண்டது இதை எதிர்பார்த்து காத்திருந்த குடும்பம் குழி வெட்ட ஆரம்பித்தது, 15 அடி ஆழத்தில் கனவில் சொன்னது போல புதையலுக்கான அறிகுறிகள் தென்பட்டது உடனே வேலையை நிறுத்தி விட்டு இரவுக்காக காத்திருந்தனர். அன்று இரவு காந்தம்மாள் அவரது கணவர் ராமன், மகன் விஜயன் சங்கர், மகள் கல்பனா ஆகிய 5 பேரும் மாட்டு வண்டியை எடுத்து கொண்டு ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெட்ட பட்ட கிணற்றில் நிலத்திற்கு சென்றனர்.
இரவு 5 பேரும் சேர்ந்து குழி தோண்டினர் அவர்கள் எதிர்பார்த்தது போலவே மிகவும் பிரம்மாண்டமான ஒரு மண் பானை கிடைத்தது.
அதை எடுத்து மாட்டு வண்டியில் வைத்துவிட்டு தங்கள் நிலத்தில் இருந்த நிலக்கடலை எடுக்கப்பட்ட குப்பைச்செடிகளை கிணற்றுக்குள் தள்ளினர், அவசர அவசரமாக மாட்டு வண்டியில் ஏறி வீடு வர ஆரம்பித்தனர், நடு வழியில் மாடுகள் மிரண்டது, காற்று பலமாக வீசியது,கற்கள் பல திசைகளிலிருந்து எரிய பட்டது அதை யெல்லாம் தாங்கி கொண்டு வீடு சேர்ந்தனர், வீட்டின் சமையல் அறையில் பானையை திறந்து பார்த்தனர், எதிர்பார்த்தபடி, வெள்ளி நாணயங்கள் தங்க வாள் இருந்ததை பார்த்து சந்தோஷத்தில் விடியும் வரை விழிந்திருந்தனர்.
காலையில் வெள்ளி நாணயங்கள் விற்க பெங்களூர் சென்றான் சங்கர்,இரவு பணத்துடன் வீடு திரும்பினான்
சரியாக 6 மாதத்தில் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஜமீன் ஆனான் காந்தம்மாளின் கணவன் இராமன்.
மகன் சங்கர், தக்காளி வியாபாரத்திற்கு சொந்தமாக டெம்போக்களை வாங்கினான்.
விஜயன், அரிசி மண்டி ஆரம்பித்தான்,
இன்னொரு மகனான ரவி தனது படிப்பை முடித்து விட்டு தன் மேல் படிப்புக்காக பெங்களுர் சென்றான்.
அடுத்து சில தினங்களில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடைப்பெற்றது. இதையெல்லாம் கண்ட ஊர் மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். சில தினங்கள் கழிந்து இராமன் மற்றும் அவரது மகள் கல்பனா மருமகன் வீரபத்திரன், மகன்கள் சங்கர், மற்றும் விஜயன் ஆகியோர் ஒர் இரவில் பாதியில் விடப் பட்ட கிணற்றை வெட்டினர்.ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் கிடைக்கவில்லை ஒரு தங்க நாணயத்தை தவிர,
விரக்தியில் வீடு திரும்பினர்.
கிணற்றை மூடினால் சந்தேகம் வரும் என்று நினைத்து வெட்டப்பட்ட குழியை சுற்றி கட்டிடம் கட்டி பிரம்மாண்டமான கிணறு கட்டினர், சரியாக ஒரு வருடம் கழித்து அதே கத்திரி மாதத்தில் 17ஆம் நாள் இராமனை மாடு முட்டி வயிற்றை கிழித்தது குடல்களை அள்ளி கொண்டு துணியால் கட்டி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் டாக்டர் கூறினார் காப்பாற்றிவிடலாம் எந்த பயமும் வேண்டாம் என்று
ஆனால் 15 நாள் நரக வேதனை பட்டு,சாப்பிட முடியாமல்,தூங்க முடியாமல் படுத்த படுக்கையில் உயிரை விட்டார் இராமன். இறுதிச் சடங்கு முடித்து வீடு திரும்பிய குடும்பத்தினர் சோகத்தில் இருந்து மீண்ட சில நாட்களில் காந்தம்மாவையும் இழந்தனர்.மிகவும் கொடூரமான சாவு குளித்து கொண்டிருந்த போது கை,கால் இலுப்பு வந்து சுடு தண்ணீரை தட்டி தன் மீது தள்ளி கொண்டு கதறி அலவும் முடியாமல், கூச்சலிட்டு யாரையும் அழைக்கவும் முடியாமல் இறந்தார்.
இறந்த உடலை கண்டனர் 2 மணி நேரம் கழித்து, இதையெல்லாம் கண்ட எனது தாத்தா தன் மகனான எனது மாமா பரணியிடம் ஓர் உண்மையை கூறினார், அதை கேட்ட எனது மாமா திகைத்து போய் தனது நண்பனான காந்தம்மாவின் மகன் சங்கரிடம் கூறினார், அதை கேட்ட சங்கர் கதறி அழுதார்.
என் குடிகார தாத்தா சொன்ன அதிர்ச்சி தகவல்
என் தாத்தா ஒரு அரசு ஊழியர் சம்பள பணத்தை குடும்பத்திற்கும் கிம்பள பணத்தை குடிக்கும், என ராஜ வாழ்க்கை.
அவர் தினமும் இரவில் வீட்டின் வாசலில் கயிற்று கட்டிலில் தான் தூங்குவார்,வீட்டை சுற்றி 7 அடி காம்பவுண்டு சுவர்,எனவே விலங்குகள் கொண்ட கிராமம் என்றாலும் சுவரை மீறி உள்ளே வர முடியாது அப்படி தூங்கி கொண்டிருந்த அவருக்கு பல நாட்களாக ஒரு சத்தம் கேட்டிருக்கிறது. எங்கள் வீட்டின் அருகில் உள்ள காந்தம்மாள் வீட்டை சுற்றி வரும் குதிரை வண்டி, ஐயோ எங்கள் நாட்டு பொக்கிசம் எல்லாம் போய்விட்டதே, எல்லாவற்றையும் திருடி விட்டார்கள், நான் ராஜாக்கு என்ன பதில் சொல்வேன் என்று கூறி அழுது ஒப்பாரி வைக்கும் ஒரு கூட்டம் என் தாத்தா குடி போதையில் இருந்ததால் அதை சரியாக கண்டு கொள்ளவில்லை
ஆனால் காந்தம்மாவின் கணவரும் தனது நண்பருமான ராமன் இறந்த அன்று என் தாத்தாவின் சந்தர்ப்ப சூழ்நிலை குடிக்க முடியவில்லை அன்று இரவு சுமார் 2 மணி அளவில் சிரிப்பு சத்தம், என் தாத்தா முழித்து காது கொடுத்து கேட்டார்ஸ.. நம் பொக்கிஷத்தை திருடிய ஒரு நரனை நாங்கள் பழி வாங்கி விட்டோம் மன்னா மீதி இருப்பர்களையும் விடமாட்டோம் என்று, சிறிது நேரம்,
எங்கள் நாட்டு முத்திரையிட்ட வெள்ளி நாணயங்கள் எல்லாம் திருடு போய் விட்டதே, விட மாட்டோம், விட மாட்டோம்’என்று கூச்சலிடும் பேய்கள் பயந்து போன எனது தாத்த காம்பவுண்டு சுவரை மிறி எட்டி பார்த்தால், ஒன்றுமே தெரியவில்லை.
மீண்டும் சிறிது நேரம் கழித்து ஒரு சத்தம் நான் விடமாட்டேன் கொன்றே தீருவேன் பழிவங்கியே தீருவேன் குடும்பத்தை அழிக்காமல் விட மாட்டேன் என்றது ஆண்மாக்கள் பயந்து போன எனது தாத்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை,
சாவில் மர்மம் இருப்பதை உணர்ந்த என் தாத்தா என் மாமன் பரணியிடம் சொல்ல பரணி விஜயனிடம் சொல்ல
ஆமாம் எல்லாம் உண்மை தான் நண்பா!! என்று புலம்பி தீர்த்தான் விஜயன்
மறு நாள் நடந்தது நடந்து விட்டது, இனி நடக்காமல் பார்ப்போம் என்று கூறி எனது மாமன் பரணியும்,விஜயனும் கோயில் குளம், மாந்திரிகம், ஜோசியம் என்று சுற்றி திரிந்தனர் எல்லா இடங்களிலும் சொன்ன ஒரே பதில்.
அது ராஜா காலத்து புதையல், மன்னர் அதற்கு காவலாக ஒரு ஊர் மக்களை வைத்தார்,இயற்கை சீற்றத்தால் அனைவரும் இறக்க இன்றும் புதையலை பாதுகாத்துக் கொண்டிருந்தனர் அந்த ஊர் மக்கள் (உயிர் இல்லாமல்), அதை நீங்கள் எந்த பூஜை பரிகாரம் செய்யாமல் எடுத்ததால் வந்த விளைவு தான் இது என்றார்கள்.
இதை கேட்டு ஆச்சர்யம் அடைந்த பரணியும் விஜயனும், பரிகார பூஜை செய்ய ஏற்பாடு செய்தனர், அதன் படி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு 12 ஆடுகள், 3 கோழி, கருப்பு சட்டை,15 முட்டைகள்,13 வகை பூக்கள் மற்றும் பல வைத்து பூஜைகளை செய்தனர்,
சிறிது நாட்கள் சென்றது. என் மாமன் பரணி மாலை வீடு திரும்பும் போது தின்னையில் அமர்ந்து, பக்கத்து குடிசைகளில் உள்ள கூலி வேலை செய்யும் பெண்களை அழைத்து, நாளை காலை 5 மணிக்கு தனது தக்காளி தோட்டத்திற்குள் சென்று பழுத்த தக்காளிகள் அனைத்தையும் பறித்து கூடைகளில் அடுக்கி சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்,
கூலி பெண்களும் சரியென கூற தனது தோட்டக்காரன் முருகனை அழைத்து நீ நாளை தோட்டத்திற்கு தண்ணிர் பாய்ச்ச வேண்டும்,எனவே நீயும் எங்களுடன் மாட்டு வண்டி எடுத்து கொண்டு வந்து விடு என்று கூறி சாப்பிட்டு படுத்தார்.
இரவு சுமார் 1 மணி அளவில் அண்ணா! அண்ணா! என்று ஒரு குரல்.
பரணி : யார்பா அது!
குரல் : நான் தான் முருகன் அண்ணா! மணி 5 ஆச்சு எல்லா வந்துட்டாங்க வாங்க போலாம்.
பரணி : இதோ வந்துட்டேன். என்று சொல்லி வெளியே வந்து துங்கி கொண்டிருந்த என் குடிகார தாத்தாவை பார்த்தார், முருகா சரி நடப்போலாம் என்று சொல்லி மாட்டு வண்டியில் ஏறி முருகன், பரணி மற்றும் கூலி பெண்களும் தோட்டத்திற்கு சென்றனர். போகும் வழியில் வண்டியை இலுக்க மாடு அலறியது, வண்டியை இலுக்க மாடுகள் அடம்பிடித்தது,ஆனால் வேகமாக ஒட்டிய முருகன் அடி தாங்காமல் மாடுகளும் வேறு வழியின்றி சென்றது, நாய்கள் மாட்டு வண்டியை பார்த்து குரைத்து கொண்டே பின் தொடர்ந்தது தோட்டம் வந்த உடன் எனது மாமன் பரணி, தோட்டகாரன் முருகன் ஆகிய இருவரும் தண்ணிர் பாய்ச்ச சென்றனர் பெண்கள் தக்காளியை பறித்து கூடையில் நிரப்பினார்,
தண்ணிர் பாய்ச்சி முடித்தவுடன் பரணி முருகனை தேட கணவில்லை . முருகா’ முருகா’ என கூச்சலிட்ட படி தோட்டத்திற்குள் வந்தார் அங்கிருந்த பெண்கள் முருகன் ஒதுக்குபுறமாக சென்றிருக்கிறான் என்று கூறி பரணியிடம் வழிய ஆரம்பித்தனர் பரணியும் அவர்களுடன் ஓடிபிடித்து விளையாடினான். சிறிது நேரம் செல்ல செல்ல ஒரு ஒரு பெண்ணாக காணமல் போனார்கள். பயந்து போனார் என் மாமா.
குதிரையில் ஒரு முதியவர் கிழே இறங்கி பரணி இது உனக்கு தேவையில்லாத வேலை எதற்காக நீ அந்த திருட்டு நாய் விஜயனுக்கு உதவுகிறாய், நாங்கள் கொள்ளையர்கள் அல்ல காவலாளிகள்,எங்க ஊர் மக்களுக்கு எல்லாம் ஒரே குல தொழில் காவல்தான்,ஆனால் பல நூற்றாண்டு காலமாக நாங்கள் காவல் காத்து வந்த பொக்கிஷத்தை திருடிய அந்த குடும்பத்தினரை நாங்கள் பலி வாங்கமல் விடமாட்டோம், நீ இதில் குறுக்கே வராதே, பிறகு வேதனை படுவாய் ”பரணி” என்று சொல்லி அந்த முதியவர் மறைந்தார்
பயந்து போன பரணி அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார் வீட்டிற்கு வந்து பார்த்தால் என் தாத்தா தூங்கி கொண்டிருந்தார் அவரை எழுப்பி நடந்ததை சொல்ல கடிகாரத்தை பார்த்தால் அப்போதுதான் மணி 3.
குளிர், ஜீரத்துடன் என் மாமா படுத்து தூங்கினார். காலையில் சென்று பார்த்த என் தாத்தாவிற்கு ஆச்சர்யம் காத்திருந்தது, ஆம் தக்காளி பறித்ததும் உண்மை, மாட்டு வண்டி அங்கேயே இருந்தது ஆனால் மாடுகள் பல மைல் தூரத்தில் அன்று மாலை தான் கிடைத்தது.
இரவு முழுவதும் என் மாமாவிடம் விளையாடிய பெண்கள்!! பேய்கள்.
மாட்டு வண்டியை ஒட்டியதும் ஒரு பேய்தான்.
இதை அறிந்த என் தாத்தா செய்வது அறியாமல் கோவில் கோவிலாக சுற்றி நிம்மதி தேடினார்.
சில தினங்களில் பெங்களுருக்கு தக்காளி லோடு டெம்போ ஒட்டி செல்லுகையில் விபத்தில் இரண்டு துண்டாக வெட்டபட்டு இறந்தான் காந்தம்மாள் மகன் விஜயன் அதே மாதத்தில் இடி தாங்கி பலியானால் மகள் கல்பனா பரிகாரமாக ஒரு கோயில் கட்டினான் அந்த கோவில் தங்கிய சங்கர் திருமணம் செய்து கொள்ளாமல் சாமிக்கு சேவை செய்வதில் காலம் கழித்தான் எதிலும் சம்பந்த படாத ரவி படிப்பை முடித்து பெங்களுரில் தங்கிவிட்டான.
எல்லாம் முடிந்தது என்று நினைக்கையில் எனது தாத்தாவிற்கு நடு இரவில் மறுபடியும் ஒரு குரல் கேட்டது,
இந்த ஊரில் நமக்கு வேலை முடிந்தது நம் பொக்கிஷத்தை வைத்திருப்பவர்கள் நிம்மதியாக இருக்க கூடாது,வாங்க மன்னா அங்கே போகலாம் என்று சொல்லி குரல் மறைந்தது..
நடந்ததை எல்லாம் ஆராய ஆவல்.
நான் என் தாத்தா ஊருக்கு சென்றேன் தற்போது என் வயது 29.
காந்தம்மாள் வாழ்ந்த வீடு ஒரு பாழடைந்த கூடாரமாக தென்பட்டது. என் தாத்தா படுத்த கட்டில் புதுப்பிக்கபட்டு இருந்தது, அந்த கோயிலில் இருந்த சங்கர் மனநலம் பாதிக்கபட்டு இறந்து விட்டார். என்று கேள்விப்பட்டேன்.
ஒரு புதையலை எடுத்த காரணத்தினால் ஒரு குடும்பமே சிதைந்ததை நேரில் கண்டேன்.
ஆண்மாக்கள் வாழும் தன் கடமை முடியும் வரை