சிலர்க்க வைக்கும் ஆவிகள்.... பற்றிய சில விஷயங்கள்
09 Jun,2024
..
மனிதனின் இறப்புக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று இதுவரை எந்த அறிவியலாலும் கண்டுபிடித்து கூற முடியாத நிலையில் பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றி பலவிதமான செய்திகள் நிலவி வருகிறது.
அந்த வகையில் பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பேய்கள் அல்லது ஆவிகள் அனைத்தும் ஆபத்தானது அல்ல. விபத்து அல்லது தற்கொலை செய்து கொண்ட மனிதர்கள் பேய்களாய் மாறும்போது அந்த பேய்கள் மற்றும் ஆவிகள் தோற்றத்தில் அகோரமாக இருக்கும்.
மேலும் இவை பூமியில் இருக்கும் தங்களது உறவுகளோடு நெருக்கமாகவும், பாசமாகவும் இருந்ததின் காரணத்தால் பூமியில் விட்டு செல்ல மனதில்லாமல் ஆவிகளாகவும் பேய்களாகவும் பூமியை சுற்றி சுற்றி வரும்.
இந்த பேய்களையும், ஆவிகளையும் பூனை மற்றும் நாய்களின் கண்களால் தெளிவாக பார்க்க முடியும். மேலும் ஒரு பூனையோ அல்லது நாயோ வானத்தை அசையாமல் அப்படியே பார்த்து வந்தால் அங்கு ஏதேனும் ஒரு ஆவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பேய்களுக்கும் ஞாபக சக்தி அதிக அளவு இருக்கும். அதுமட்டுமல்லாமல் பேய்களுக்கும் உதவி செய்கின்ற குணம் இருக்கும். இந்த பேய்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு சில நேரங்களில் வெளியே வராமல், அப்படியே அங்கே இருந்து பயமுறுத்த கூடிய தன்மையை கொண்டிருக்கும்.
மனிதர்களைப் போலவே விலங்குகளின் மீதும் பேய் இறங்க கூடிய சூழ்நிலை உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி விலங்குகளின் மீது பேய் இறங்கிவிட்டால் அவை தாறுமாறாக செயல்படும்.
பேய்களுக்கு நிறை அதிகமாக காணப்படுவதால் நிறைய சக்தி தேவைப்படுகிறது. எனவே பேய் பிடித்தவர்கள் அதிக அளவு உணவுகளை உட்கொள்வார்கள். மேலும் அவர்கள் விரைவில் உடல் மெலிந்து போவார்கள்.
பேய்கள் இருக்கக்கூடிய இடம் அமைதியாக இருக்கும் என்று கூற முடியாது. திடீர் என சத்தத்தை உண்டாக்கி திடீர் என்று கூடிய விஷயம் பேய்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாக பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
பேய்களுக்கு நாய்களைப் போல வாசனையை நுகரக்கூடிய சக்தி அதிகம் இருப்பதால் வாசனை திரவியங்களை அவை விரும்புவதோடு, அந்த வாசம் பிடித்து விட்டால் தான் இருக்கும் இடத்திலேயே அதை வைத்துக் கொள்ள முயற்சி செய்யுமாம்.
எனவே தான் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது அதில் கரித்துண்டினை போட்டு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே எப்போதும் நீங்கள் பேய் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பது மிகவும் நல்லது.