கெட்ட தேவதூதர்கள் இருக்கிறார்களா?பிசாசு; இதன் அர்த்தம்

09 Jun,2024
 

 
ஆம்! ஆனால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ஆரம்பக் கட்டுரைகளில் பார்த்ததுபோல், கடவுள்தான் அவர்களைப் படைத்தார்; சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். முதல் ஆணும் பெண்ணும், அதாவது ஆதாமும் ஏவாளும், படைக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, பரிபூரணமாக இருந்த ஒரு தேவதூதன், அந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பூமியில் கலகத்தை உண்டுபண்ணினான். கடவுளுக்கு எதிராகச் செயல்பட, ஆதாமையும் ஏவாளையும் தூண்டினான். (ஆதியாகமம் 3:1-7; வெளிப்படுத்துதல் 12:9) இந்தத் தேவதூதனின் பெயரைப் பற்றியோ, கலகம் செய்வதற்குமுன் பரலோகத்தில் அவனுக்கு இருந்த ஸ்தானத்தைப் பற்றியோ பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. ஆனால், கலகம் செய்த பிறகு, பைபிள் அவனைச் சாத்தான் என்றும், பிசாசு என்றும் அழைக்கிறது. சாத்தான் என்றால் “எதிர்ப்பவன்” என்றும், பிசாசு என்றால் “அவதூறு பேசுகிறவன்” என்றும் அர்த்தம்.—மத்தேயு 4:8-11.
 
கடவுள்பக்தி இல்லாத அந்தத் தேவதூதன் கலகம் செய்வதை அதோடு நிறுத்தவில்லை! நோவாவின் காலத்தில், சில தேவதூதர்கள் (அவர்களுடைய எண்ணிக்கையைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடவில்லை.) கடவுளுடைய பரலோக குடும்பத்தில், “தாங்கள் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டார்கள்.” அவர்கள் மனித உருவத்தில் பூமிக்கு வந்து ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார்கள்; தாங்கள் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தை மறந்துவிட்டார்கள்.—யூதா 6; ஆதியாகமம் 6:1-4; 1 பேதுரு 3:19, 20.
 
அந்தக் கெட்ட தேவதூதர்களுக்கு என்ன ஆனது? கடவுள் இந்தப் பூமியைப் பெருவெள்ளத்தால் அழித்தபோது, அவர்கள் மனித உருவத்தை விட்டுவிட்டு மறுபடியும் பரலோகத்துக்குப் போனார்கள். ஆனால், ‘ஆரம்பத்தில் தங்களுக்கு இருந்த ஸ்தானத்தில்’ தொடர்ந்து இருக்க அந்தக் கெட்ட தேவதூதர்களை கடவுள் அனுமதிக்கவில்லை. ‘டார்டரஸ்’ என்று சொல்லப்படும் ‘பயங்கரமான [ஆன்மீக] இருட்டுக்குள்,’ அதாவது தாழ்வான நிலைக்குள் கடவுள் அவர்களைத் தள்ளினார். (யூதா 6; 2 பேதுரு 2:4) இந்தப் பேய்கள், ‘ஒளியின் தூதனைப் போல் வேஷம் போடுகிற,’ “பேய்களுடைய தலைவனான” பிசாசாகிய சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் தங்களை வைத்துக்கொண்டார்கள்.—2 கொரிந்தியர் 11:14; மத்தேயு 12:24.
 
1914-ல், கடவுளுடைய மேசியானிய அரசாங்கம் பரலோகத்தில் தன் ஆட்சியை ஆரம்பித்ததாக பைபிள் கற்பிக்கிறது. * இந்த முக்கியமான சம்பவத்தைத் தொடர்ந்து, சாத்தானும் அவனைச் சேர்ந்த பேய்களும் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தப் பூமியில், அநியாய அக்கிரமமும், இழிவான ஒழுக்கக்கேடும் அதிகரித்து வருகின்றன. இவை, சாத்தானுடைய பழிதீர்க்கும் எண்ணத்துக்கும் படுமோசமான செயல்களுக்கும் அத்தாட்சியாக இருக்கின்றன.—வெளிப்படுத்துதல் 12:9-12.
 
ஒழுக்கக்கேடும் வன்முறையும் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் கொடூர ஆட்சியின் முடிவு ரொம்ப பக்கத்தில் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கொடூரமான தேவதூதர்கள், சீக்கிரத்தில் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கடவுளுடைய அரசாங்கம் பூஞ்சோலை பூமியை ஆயிரம் வருடம் ஆட்சி செய்யும். பிறகு கடைசியாக ஒரு முறை, மனிதர்களை கொஞ்ச காலத்துக்கு சோதிப்பதற்கான வாய்ப்பு இந்தக் கெட்ட தூதர்களுக்குக் கொடுக்கப்படும். அதற்குப் பிறகு, அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—மத்தேயு 25:41; வெளிப்படுத்துதல் 20:1-3, 7-10.
 
பைபிள் தரும் பதில்
 ஆம், பிசாசு இருப்பது நிஜம்தான். “இந்த உலகத்தை ஆளுகிறவன்” அவன்தான்; ஆரம்பத்தில் அவன் ஒரு தேவதூதனாக இருந்தான், ஆனால் பிற்பாடு பொல்லாதவனாக மாறி, கடவுளுக்கு விரோதமாகக் கலகம் செய்தான். (யோவான் 14:30; எபேசியர் 6:11, 12) பின்வரும் பெயர்கள் மற்றும் விவரிப்புகளின் மூலம் பிசாசின் குணாதிசயத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது.
 
 சாத்தான்; இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.”—யோபு 1:6.
 
 பிசாசு; இதன் அர்த்தம் “இல்லாததையும் பொல்லாததையும் பேசுபவன்.”—வெளிப்படுத்துதல் 12:9.
 
 பாம்பு; “ஏமாற்றுக்காரன்” என்ற அர்த்தத்தைத் தருவதற்காக பைபிள் சில சமயம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.—2 கொரிந்தியர் 11:3.
 
 சோதனைக்காரன்.—மத்தேயு 4:3.
 
 பொய்யன்.—யோவான் 8:44.
 
தீமையான ஒரு குணமல்ல
 நமக்குள் இருக்கிற தீமையான ஒரு குணம்தான் பிசாசாகிய சாத்தான் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கிற ஓர் உரையாடலை பைபிள் பதிவுசெய்திருக்கிறது. கடவுள் பரிபூரணமானவர், அதனால் தனக்குள் இருக்கிற ஒரு தீமைக் குணத்தோடு பேசிக்கொண்டிருந்தார் என்று நினைப்பது நினைப்பது முற்றிலும் தவறாக இருக்கும். (உபாகமம் 32:4; யோபு 2:1-6) மற்றொரு உதாரணம்: பாவமே இல்லாத இயேசுவை சாத்தான் சோதித்தான் என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 4:8-10; 1 யோவான் 3:5) இப்படி, பிசாசு என்ற ஒருவன் இருப்பது நிஜம் என்பதையும், அவன் வெறுமனே தீமையான ஒரு குணமல்ல என்பதையும் பைபிள் தெளிவாகக் காட்டுகிறது.
 
 பிசாசு இருப்பது நிஜமென்று நிறையப் பேர் இன்று நம்புவதில்லை, இதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? வேண்டியதில்லை; ஏனென்றால், சாத்தான் தன்னுடைய குறிக்கோள்களை எட்ட ஏமாற்று வழிகளைப் பயன்படுத்துகிறான் என்று பைபிள் சொல்கிறது. (2 தெசலோனிக்கேயர் 2:9, 10) சாத்தான் என்ற ஒருவன் இருப்பதையே ஜனங்கள் நம்பாதபடிக்கு அவர்களுடைய மனக்கண்களை அவன் குருடாக்கி வைத்திருக்கிறான், அவனுடைய மாபெரும் தந்திர வேலைகளில் இதுவும் ஒன்று!—2 கொரிந்தியர் 4:4.
 
 தவறான கருத்து: லூஸிஃபர் என்பது பிசாசுக்கு இருக்கிற இன்னொரு பெயர்.
 
 உண்மை: “லூஸிஃபர்” என்று சில பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தைக்கு ‘நட்சத்திரமாக மினுமினுத்தவன்’ என்று அர்த்தம். (ஏசாயா 14:12) இந்த வார்த்தை பாபிலோனின் ராஜ வம்சத்தை, அதாவது அடுத்தடுத்து வந்த பாபிலோன் ராஜாக்களை, குறிக்கிறது என்பதை அந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது; அகங்கரமாக நடந்த அந்த ராஜாக்களைக் கடவுள் தலைகுனியச் செய்தார். (ஏசாயா 14:4, 13-20) பாபிலோனின் ராஜ வம்சம் வீழ்ச்சியடைந்த பிறகு, அதைக் கேலி செய்வதற்காக ‘நட்சத்திரமாக மினுமினுத்தவன்’ என்ற பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டது.
 
 தவறான கருத்து: மக்களை நியாயந்தீர்க்கும் வேலையில் சாத்தான் கடவுளுடைய உதவியாளாக இருக்கிறான்.
 
 உண்மை: பிசாசு என்பவன் கடவுளுடைய எதிரி, அவருக்காக வேலை செய்பவன் அல்ல. கடவுளுக்குச் சேவை செய்கிறவர்களை பிசாசாகிய சாத்தான் எதிர்க்கிறான், அவர்கள்மேல் பொய்க் குற்றம் சாட்டுகிறான்.—1 பேதுரு 5:8; வெளிப்படுத்துதல் 12:10.
ஆவியுலகத் தொடர்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பேய்கள் மற்றும் ஆவிகளின் உலகம் பற்றி சொல்லப்படும் எல்லா விஷயங்களும் வெறும் புரளி என்றும், அது சினிமாக்காரர்களின் கற்பனைக் கதை என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். அதனால் இதை ஒரு சாதாரண விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற விஷயங்களில் துளியும் ஆர்வம் காட்டக் கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது. உதாரணத்துக்கு, உபாகமம் 18:10-13 இப்படிச் சொல்கிறது: “உங்களில் யாருமே . . . குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.” ஏனென்றால், “இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். . . . உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.
 
ஆவியுலகத்தோடு எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று பைபிள் ஏன் சொல்கிறது?
 
இதன் ஆரம்பம்
கடவுள் பூமியைப் படைப்பதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பே கோடிக்கணக்கான ஆவி சிருஷ்டிகளை, அதாவது தேவதூதர்களை, படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 38:4, 7; வெளிப்படுத்துதல் 5:11) நல்லது கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்த ஒவ்வொரு தேவதூதர்களுக்கும் கடவுள் கொடுத்திருந்தார். அதை சிலர் தவறாக பயன்படுத்தினார்கள், கடவுளுக்கு எதிராக கலகம் செய்தார்கள். பரலோகத்தில் அவர்களுக்கு இருந்த உயர்ந்த ஸ்தானத்தை விட்டுவிட்டு பூமிக்கு வந்து அக்கிரமம் செய்தார்கள். அதனால், “பூமியெங்கும் வன்முறை நடந்தது.”—ஆதியாகமம் 6:2-5, 11; யூதா 6.
 
அந்த பொல்லாத தேவதூதர்கள் லட்சக்கணக்கான மக்களை அவர்களுடைய வலையில் சிக்க வைக்க பார்க்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:9) எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு இருக்கும் இயல்பான ஆசையை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.—1 சாமுவேல் 28:5, 7; 1 தீமோத்தேயு 4:1.
 
 சில பேய்கள் மக்களுக்கு நல்லது செய்வதுபோல் தோன்றலாம். (2 கொரிந்தியர் 11:14) ஆனால், உண்மை என்னவென்றால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ளாதபடி மக்களின் கண்களை அவை குருடாக்குகின்றன.—2 கொரிந்தியர் 4:4.
 
பேய்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பைபிள் சொல்கிறது. இயேசுவின் சீஷராக விரும்பிய சிலருக்கு இந்த உண்மை புரிந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள். “மாயமந்திரங்கள் செய்துவந்த ஏராளமான ஆட்கள் தங்களுடைய புத்தகங்களை மொத்தமாகக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்னால் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.” அவர்களுக்கு நிறைய நஷ்டம் வந்தபோதிலும் இப்படிச் செய்ய அவர்கள் தயங்கவே இல்லை.—அப்போஸ்தலர் 19:19.
 
மாயாஜால புத்தகத்தை ஒரு பெண் படிக்கிறாள்
“டிவி நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில், புத்தகங்களில் சூனியக்காரிகளை கவர்ச்சியாகவும் அழகாகவும் காட்டுகிறார்கள். அதைப் பார்த்துதான் டீனேஜ் பெண்கள் அதை அதிகமாக நம்புகிறார்கள் என்று தெரிகிறது.”—காலப் யூத் சர்வே, 2014
 
இன்றும்கூட, ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எதிலும் ஈடுபடக் கூடாது என்று நிறைய பேர் தீர்மானித்திருக்கிறார்கள். பொழுதுபோக்குக்காகக்கூட ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எதையும் அவர்கள் பார்ப்பது கிடையாது. மரியா * என்ற பெண்ணுக்கு 12 வயது இருக்கும்போதே எதிர்காலத்தில் நடக்கப்போகும் சில சம்பவங்களையும் வரவிருக்கும் சில ஆபத்துகளையும் அவளால் கணிக்க முடிந்தது. அவளோடு படிப்பவர்களுக்கு குறிசொல்ல அவள் டாரட் கார்டுகளை பயன்படுத்தினாள். அவள் சொன்னதெல்லாம் அப்படியே நடந்ததால் மாயமந்திர வித்தைகள்மீது அவளுக்கு இருந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது.
 
மக்களுக்கு உதவி செய்வதற்காக கடவுளே தனக்கு இந்த திறமையைக் கொடுத்ததாக மரியா நினைத்தாள். இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் அவளுக்கு புரியவே இல்லை. “டாரட் கார்டுகளை பயன்படுத்தி மத்தவங்களோட எதிர்காலத்தை பத்தி என்னால சொல்ல முடிஞ்சுது. ஆனா என்னுடைய எதிர்காலத்தை பத்தி மட்டும் என்னால தெரிஞ்சிக்கவே முடியல. அதை தெரிஞ்சிக்க நான் ரொம்ப ஆசைப்பட்டேன்” என்று அவள் சொல்கிறாள்.
 
இப்படி நிறைய கேள்விகளால் குழம்பிப்போயிருந்த மரியா கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். பிறகு, சில யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்க  அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். எதிர்காலத்தைப் பற்றி குறிசொல்வதற்கான திறமை கடவுளிடம் இருந்து வரவில்லை என்று அப்போதுதான் அவளுக்கு புரிந்தது. அதோடு, கடவுளோடு நல்ல நண்பராக விரும்புகிறவர்கள் ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எதையும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் புரிந்துகொண்டாள். (1 கொரிந்தியர் 10:21) இதன் விளைவு? மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களையும் பொருள்களையும் மரியா தூக்கியெறிந்துவிட்டாள். பைபிளில் இருந்து கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களை இப்போது எல்லாரிடமும் சொல்கிறாள்.
 
மைக்கல், டீனேஜராக இருந்தபோது மந்திர சக்தி படைத்த கதாபாத்திரங்கள் அடங்கிய நாவல்களை விரும்பி படித்தார். “என் வயசுல இருக்குற ஹீரோக்கள் கனவுலகத்துல சாகசம் செய்யுறத பத்தி படிக்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நானும் என்னை அப்படி கற்பனை செஞ்சு பாப்பேன்.” கொஞ்சம் கொஞ்சமாக மாயாஜால புத்தகங்களுக்கும் பேய்களோடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களை விளக்கும் புத்தகங்களுக்கும் அவர் அடிமையாகிக்கொண்டு வந்தார். “‘என்னதான் இருக்குனு பார்க்கலாம்’ என்ற ஆர்வம்தான் இப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கவும் திரைப்படங்களை பார்க்கவும் காரணமா இருந்தது” என்று அவர் சொன்னார்.
 
ஒரு புத்தகத்தை படிப்பதற்கு முன் அது நல்ல புத்தகமா என்று யோசித்துப் பார்ப்பது முக்கியம் என்பதை பைபிளைப் படித்ததினால் மைக்கல் புரிந்துகொண்டார். “எதெல்லாம் ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்டிருக்குனு நான் லிஸ்ட் போட்டேன். அதுக்கு அப்புறம் நான் அதெல்லாத்தையும் ஒழிச்சுக்கட்டுனேன். ஒரு முக்கியமான பாடத்தை கத்துக்கிட்டேன். எதை செஞ்சாலும் கடவுளுடைய மகிமைக்காக செய்யுங்கனு 1 கொரிந்தியர் 10:31 சொல்லுது. அதனால எந்த புத்தகத்தை படிக்க நினைச்சாலும் அதுல இருக்குற விஷயங்கள் கடவுளுக்கு மகிமை சேர்க்குற மாதிரி இருக்கானு யோசிப்பேன். அப்படி இல்லன்னா நான் அதை படிக்க மாட்டேன்.”
 
jw.org வெப்சைட்டை ஒரு பெண் பார்க்கிறாள்
பைபிள் நிஜமாகவே நம் பாதைக்கு வழிகாட்டும் விளக்கு என்றுதான் சொல்ல வேண்டும்! ஆவியுலகத் தொடர்பில் என்ன ஆபத்துகள் இருக்கின்றன என்பதை பைபிள் மட்டும்தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. (சங்கீதம் 119:105) அதுமட்டுமல்ல, சீக்கிரத்தில் பேய் பிசாசுகளின் செல்வாக்கே இல்லாத ஒரு அருமையான எதிர்காலம் மனிதர்களுக்கு இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. சங்கீதம் 37:10, 11 சொல்கிறபடி, “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”
 
ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன?
உலகின் பல்வேறு இடங்களில் வாழும் மக்கள் மந்திரவாதிகளின் உதவியோடு பொல்லாத ஆவிகளிடம் பேச முயற்சி செய்கிறார்கள். ஜோசியம், பில்லிசூனியம், மாயமந்திரம் போன்ற எல்லாமே ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. மற்றவர்களின் கைரேகையைப் பார்த்து குறிசொல்வதும் அதோடு சம்பந்தப்பட்டதுதான். எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் பலர் குறி கேட்கிறார்கள், நட்சத்திரம் பார்க்கிறார்கள், சகுனம் பார்க்கிறார்கள், கைரேகை பார்க்கிறார்கள், மாயக் கண்ணாடியைப் பயன்படுத்துகிறார்கள்.
 
இன்று வெளிவரும் புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள் எல்லாம் ஆவியுலகத்தை சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் காட்டுகின்றன. இப்படிக் காட்டப்படுவதால்தான் மக்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்று தகவல்தொடர்பு நிபுணர்கள் சொல்கிறார்கள்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies