மனித மூளை விற்பனைக்கு” அதிர்ச்சி தரும் விளம்பரம்
04 Jan,2014


மனித மூளை விற்பனைக்கு” அதிர்ச்சி தரும் விளம்பரம்
ஒன்லைனில் மனித மூளையை விற்று வந்த நபரை பொலிசார் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.
இன்றைய உலகில் வீட்டில் இருந்தபடியே ஒன்லைனின் மூலம் அனைத்து பொருட்களையும் வாங்கி விடலாம்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் சார்லஸ்(வயது 21) என்ற நபர் ஈபே மூலம் மனித மூளையை விற்றுள்ளார்.
இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இண்டியானாவில் உள்ள இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட மூளைகளை அவன் திருடியுள்ளதாகயும், கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அவன் அந்த அருங்காட்சியகத்தில் அத்துமீறி நுழைந்து மூளை திசுக்களை திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை "ஈ பே" இணையதளம் மூலம் மத்தியஸ்தர் ஒருவரை கொண்டு அவன் விற்றுள்ளான்.
இவரிடம் 6 மூளைகளை வாங்கிய நபர் ஒருவர், அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குனரான மேரி ஹெலன் ஹென்னஸ்சியுடன் தொடர்பு கொண்டு தான் வாங்கியுள்ள மூளைகளில் அருங்காட்சியகத்தின் முத்திரைகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேரி பொலிசிடம் புகார் தெரிவிக்கவே, தீவிர தேடுதல் வேட்டையின் பின் சார்லஸை பொலிசார் கைது செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சார்லஸை, சிறையில் அடைத்தனர்.