கம்பளிக்காக துடிதுடிக்க சித்தரவதை செய்யப்படும் முயல்கள் (வீடியோ)
17 Dec,2013
கம்பளிக்காக துடிதுடிக்க சித்தரவதை செய்யப்படும் முயல்கள் (வீடியோ)
அங்கோரா கம்பளிக்கு உலகம் முழுதும் கிராக்கி அதிகரித்திருப்பதால் அதற்காக முயல்களை பிடித்து உயிருடன் அதன் தோல்களை பிடுங்கி எடுக்கும் காட்டுமிராண்டித் தனம் சீனாவில் நடந்தேறுவதாக வீடியோ பதிவு வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு இந்த வீடியோவின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆடை கம்பெனிகள் இரண்டான டாப்ஷாப், மார்க்ஸ்&ஸ்பென்சர் ஏற்கனவே அங்கோரா கம்பளிகளுக்கான தங்கள் ஆர்டரை ரத்து செய்யவிட்டது.
முயல்களின் கை கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் அதன் தோலை பிடுங்கி எடுக்கும்போது வலியால் துடிக்கும் முயல்கள் குறித்த வீடியோ இன்டெர்னெட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.