மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் (வீடியோ)
12 Nov,2013
மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் (வீடியோ)
மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் (வீடியோ)
மீனவர்கள் வலையை வீச சிக்னல் கொடுக்கும் டால்பின்கள் – பிரேசிலில் தலைமுறைகளாக நடக்கும் அதிசயம். பிரேசில் நாட்டில் லகுனா என்ற பகுதியில்(Laguna, Brazil) மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் நடக்கின்றது. 150க்கும் மேற்பட்ட டால்பின்களில் 50 டால்பின்கள் உள்ளூரில் உள்ள 200 மீனவர்களுக்கு உதவுகிறது.
மீன்பிடி படகுகள் ஒரு பக்கம் நிற்க, டால்பின்கள் வரிசையாக ஒரு பக்கம் தண்ணீரில் அணைபோல நிற்கின்றன, இவை இரண்டுக்கும் இடையில் மீன்கள் வரும் போது தங்கள் தலையாலோ, வாலாலோ டப டப வென்று தண்ணீருக்கு மேலே தட்டுகின்றன, உடனே மீனவர்கள் வலையை வீச கொத்து கொத்தாக மீன்கள் சிக்குகின்றன.
lugana 450x304 மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் (வீடியோ)மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் (வீடியோ)
இவைகள் இன்று நேற்று நடப்பதல்ல, பல தலைமுறைகளாக 1847ம் ஆண்டிலிருந்து நடைபெறுகின்றன, கரையில் வசிக்கும் மீனவர்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த உத்தியை சொல்லி தருகிறார்கள், ஆனால் அடுத்தடுத்த தலைமுறை டால்பின்கள் எப்படி மீனவர்களுக்கு உதவுவதை கற்றுக்கொள்கின்றன என்று தான் புரியவில்லை.
இப்படி உதவுவதால் டால்பின்களுக்கு என்ன நன்மைகள் என்று தான் புரியவில்லை, இதன் மூலம் டால்பின்களுக்கும் மீன்கள் கிடைக்கின்றன என்கிறார்கள் ஆனாலும் இதை உறுதி படுத்த முடியவில்லை மேலும் அந்த பகுதியில் இருக்கும் 150 டால்பின்களில் இந்த 50 டால்பின்கள் மட்டுமே இதை செய்கின்றன, பிற டால்பின்கள் மீனவர்களுக்கு உதவுவதில் பங்கேற்பதில்லை.
உள்ளூர் மீனவர்களுக்கு டால்பின்களுக்குமான இந்த உறவு காலம் காலமாக தொடருகிறது