அரசு வேலையாக சென்ற போது செக்ஸில் ஈடுபட்டு காயம் அடைந்த பெண்ணுக்கு இழப்பீடு தர முடியாது ஆஸ்திரேலிய ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
31 Oct,2013

அரசு வேலையாக சென்ற போது செக்ஸில் ஈடுபட்டு காயம் அடைந்த பெண்ணுக்கு இழப்பீடு தர முடியாது ஆஸ்திரேலிய ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
கேன்பெரா: ஓட்டலில் காதலனுடன் செக்ஸில் ஈடுபட்ட போது, படுக்கை அறையில் இருந்த மின் விளக்கு விழுந்ததில் காயம் அடைந்த அரசு பெண் ஊழியருக்கு, நஷ்டஈடு வழங்க தேவையில்லை என்று ஆஸ்திரேலிய ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
ஆஸ்திரேலியாவின் நகரில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் உள்ள நவ்ரா என்ற இடத்தில் கடந்த 2007ம் ஆண்டு அரசு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிட்னியில் இருந்து சென்ற அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். 2 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஊழியர் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை), ஓட்டலில் தங்கியிருந்த போது இரவு, சக ஊழியர் ஒருவருடன் செக்ஸ் வைத்து கொண்டார்.
அப்போது அறையில் படுக்கையின் மீது கூரையில் பொருத்தியிருந்த அலங்கார மின் விளக்கு கழன்று விழுந்தது. இதில் அரசு பெண் ஊழியரின் மூக்கு, உதடுகள் காயம் அடைந்தன.
அரசு பணியாக சென்ற போது காயம் அடைந்ததால் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு அரசு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. மனுவில், வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பணியாக சுற்று பயணம் செய்த போது ஆண் ஊழியருடன் தனிமையில் இருந்த போது விபத்து ஏற்பட்டது. இதற்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.