உலகமே வியந்து பார்க்கும் பிரமிடுகள் எகிப்து நாட்டில் அமைந்துள்ளது. அந்தப் பிரமிடுகளில் இருக்கும் செல்வமும் புதையலும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இருப்பினும், அப்படிப்பட்ட பிரமிடுகளைச் சுற்றி 1000 ஆண்டு சாபம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இதனால் அந்த பிரமிடுகளில் ஒன்றில் நுழைந்த பிறகு மரணங்களும் நகரெங்கும் அமானுஷ்யங்களும் கூட ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடான எகிப்து தனது பிரம்மாண்டப் பிரமிடுகளுக்கு பெயர் போனவை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கட்டப்பட்ட பிரமிடுகள் இன்னுமே கூட ஆச்சரியத்தின் உச்சமாகவே இருக்கிறது. அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட மம்மிக்கள்,
குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் புதையல்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அருங்காட்சியகம் அதை எல்லாம் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அதில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. எல்லாவற்றையும் சரி செய்து சுமார் 20 ஆண்டு தீவிர முயற்சி + ஒரு பில்லியன் டாலர் செலவில் கிராண்ட எகிப்தியன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 1ம் தேதி இந்த அருங்காட்சியகம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் திறக்கப்பட்டுள்ளது. அங்கு மன்னர் துட்டன்காமுனின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எகிப்து மன்னர் கல்லறைகளைத் தொட்டாலே அழிந்து போவார்கள் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விடுக்கப்பட்ட "பார்வோனின் சாபம்' குறித்த பேச்சுகளும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
என்ன நடந்தது துட்டன்காமுன் கல்லறை 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எகிப்து குறித்து தீவிர ஆய்வுகளை ஜார்ஜ் ஹெர்பர்ட் செய்து வந்தார். எகிப்தில் அகழாய்வு செய்வதிலும் அவர் பெரும் தொகையை முதலீடு செய்து வந்தார். சுமார் 20 ஆண்டுகளாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டருடன் இணைந்து அவர் ஆய்வுகளைச் செய்தார். அப்போது 1922இல் எகிப்தின் மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள துட்டன்காமுனின் கல்லறையைத் திறந்தனர். Powered By இது வரலாற்றின் மிகச் சிறந்த தொல்பொருள் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
அதில் தங்கம், நகைகள், தேர்கள் மற்றும் துட்டன்காமுனின் புகழ்பெற்ற தங்க மரண மாஸ்க் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அதன் பிறகே ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்ற தொல்பொருள் ஆய்வாளர்களும் எகிப்து மீது ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். கொசு கடியால் மரணம் இருப்பினும், இந்த சில மாதங்களிலேயே துயரம் நிகழ்ந்தது. 1923 மார்ச் மாதம் ஜார்ஜ் ஹெர்பர்ட் கன்னத்தில் சாதாரண ஒரு கொசு கடித்தது.
கொசு தானே என அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, முகத்தை ஷேவ் செய்யும்போது, ஜார்ஜ் தெரியாமல் அந்தக் காயத்தை வெட்டிவிட்டார். ஷேவ் செய்யும்போது இதுபோல வெட்டு ஏற்படுத்தும் அசாதாரணமானது இல்லை. இருப்பினும், அந்த ஒரு வெட்டால் அவருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு, அவரது ரத்தம் விஷமாக மாறியது.
அச்சத்தில் மக்கள்.. என்ன காரணம்! அமானுஷ்யங்கள் இதனால் 1923 ஏப்ரல் 5ம் தேதி அவர் காலமானார். துட்டன்காமுனின் கல்லறை திறக்கப்பட்டு சில மாதங்களில் இது நடந்துள்ளது. மேலும், அப்போது கெய்ரோ முழுவதும் ஒரு மிகப் பெரிய மின்தடையும் ஏற்பட்டது. அப்போது ஜார்ஜ் வளர்த்து வந்த அவரது செல்லப் பிராணியும் உயிரிழந்தது. இப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பகீர் சம்பவங்கள் நடந்தன. கல்லறையைத் திறந்ததாலேயே இந்தச் சம்பவங்கள் நடந்ததாக அப்போது பரவலாகப் பேச்சுகள் எழுந்தன.