இந்தியாவில் பேய் கதைகளுக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக பராமரிப்பு இன்றி கிடக்கும் பழைய பங்களாக்களை பற்றி, ஏராளமான பேய் கதைகள் உலா வருகின்றன. அப்படி ஏராளமான பேய் கதைகள் உலா வந்து கொண்டுள்ள பங்களாக்களில் ஒன்றுதான் ஆயிஷா வில்லா (Ayesha Villa). இது மஹாராஷ்டிரா மாநிலம் லோனவாலா (Lonavala) நகரில், பராமரிப்புகளின்றி கிடக்கும் பங்களா ஆகும். லோனாவாலா என்பது ஒரு மலை பிரதேசம்.
மும்பை நகரில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் லோனவாலா அமைந்துள்ளது. மலை பிரதேசத்தில் ஒரு பங்களா பராமரிப்பு இன்றி கிடக்கிறது என்றால், கண்டிப்பாக அதன் பின்னணியில் பேய் கதைகள் இல்லாமல் இருக்காது. இதற்கு ஆயிஷா வில்லாவும் விதிவிலக்கு அல்ல. ஆயிஷா வில்லாவை பற்றி ஏராளமான பேய் கதைகள் தற்போது உலா வந்து கொண்டுள்ளன.
இதில் ஒரு கதையின்படி, இங்கு வசதியான குடும்பம் ஒன்று வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த குடும்பத்தில் 17 வயது இளம்பெண் ஒருவரும் இருந்தாராம். ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில், ஆயிஷா வில்லாவிற்கு வந்த ஒரு கும்பல், அந்த குடும்பத்தில் இருந்த அனைவரையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த 17 வயது இளம்பெண்ணும் அடங்குவாராம். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். தற்போது அந்த குடும்பத்தில் இருந்த அனைவரின் ஆவியும் அந்த பங்களாவிலேயே சுற்றி வருவதாக மக்கள் நம்புகின்றனர்.
நள்ளிரவு நேரங்களில் அங்கு ஆவிகளை பார்ப்பதாகவும் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். "டிசையரை வச்சு செய்ய இவன் போதும்.. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை? என்பது தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பேய் கதைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சொத்தை அதன் உரிமையாளர் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என யாராவது நினைத்தால், பேய் கதைகளை கிளப்பி விட்டு விடுவார்கள்.
அந்த சொத்தை வாங்குவதற்கு யாருமே முன் வர மாட்டார்கள். ஆயிஷா வில்லாவின் பின்னணியில் இது போன்ற காரணங்கள் ஏதாவது இருக்கலாம். ஆனால் உண்மையில் அந்த பங்களா ஏன் இப்படி பராமரிப்புகள் இன்றி கிடக்கிறது? என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. "ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்க கூப்பிட்ட உடனே சென்னை வந்த கேரள தொழிலதிபர்! வைர வியாபாரியின் குடும்பம்!!" அந்த பங்களாவில் பேய் கதைகள் மட்டும் சுவாரஸ்யம் கிடையாது. அங்கு நிற்கும் ஒரு காரும் சுவாரஸ்யம்தான். ஆம், அங்கு பழைமையான ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் 2
கார் ஒன்று நின்று கொண்டுள்ளது. ஆனால் அந்த கட்டிடத்தை போலவே, அந்த காரும் பராமரிப்பின்று வீணாகி விட்டது.ஒருவர் அந்த கட்டிடத்தின் உள்ளே சென்று, அங்கு நிற்கும் ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் 2 காரை, ரிவியூ செய்துள்ளார். அத்துடன் அந்த வைரல் வீடியோவை (Viral Video), யூடியூப் (YouTube) தளத்திலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவின் மூலம், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் 2 கார் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதன் வெளிப்புறம், உட்புறம் என அனைத்தும்
சேதமடைந்துள்ளன. சொல்லப்போனால் இயக்க முடியாத நிலையில், மிகவும் மோசமான கண்டிஷனில் அந்த கார் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ கார், கடந்த 1965ம் ஆண்டில் இருந்து 1976ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு பிறகு சீரிஸ் 2 என்ற வெர்ஷன், 1977ம் ஆண்டில் இருந்து 1985ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த வீடியோவில் நாம் பார்க்கும் ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் 2 காரில் 6.75 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளம்பெண்ணின் ஆவி இன்னமும்,
இந்த காரில் வசித்து கொண்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் நம்பி கொண்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வீடியோவில் நாம் பார்க்கும் ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் 2 கார் பழைமையானது என்பதுடன், அரிதானதும் கூட. மியூசியங்களில் வைத்து பாதுகாக்கப்பட்ட வேண்டிய இது போன்ற கார்கள், பராமரிப்பின்றி வீணாகி கொண்டிருப்பது, நிச்சயமாக கார் ஆர்வலர்களுக்கு வருத்தத்தை தர கூடிய விஷயமாகவே இருக்கும்.