நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பொறுப்பு ஏற்கிறார்- நேரு விளயாட்டு அரங்கில் பிரம்மாண்டம் !
09 May,2026
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் நாளை தொடங்குகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நாளை (மே 10, 2026) காலை 10 மணிக்கு தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு மற்றும் ஒப்புதலை ஆளுநர் அரலேக்கர் வழங்கியுள்ளார்.விஜய் படம்
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் இழுபறி, விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவு கடிதங்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இதன் மூலம் விஜய்யின் தலைமையிலான கூட்டணிக்கு மொத்தம் 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட கூடுதல் ஆதரவு இருப்பதால், ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க முறைப்படி அழைத்துள்ளார்.
நாளை நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரு விளையாட்டரங்கம் முழுவதும் தவெக தொண்டர்களின் வெள்ளத்தில் மிதக்கிறது. “C. ஜோசப் விஜய் என்னும் நான்ஸ” என்று அவர் முதலமைச்சராகப் பதவியேற்கும் அந்த வரலாற்றுத் தருணத்தைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு காத்திருக்கிறது.