சினிமாவில் நெருக்கமான காட்சிகளின்போது மனநிலை எப்படி இருக்கும்? - பிரபல நடிகை ஓபன் டாக்!
23 Nov,2025
அண்மையில் சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டானவர் பிரபல மராத்தி நடிகை கிரிஜா ஓக். இவர் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 38 வயதாகும் இவர் மராத்தி நடிகர் கிரிஷ் ஓக்-ன் மகள். இவர் தனது 15-வது வயதிலேயே திரைப்படத்தில் அறிமுகமானார்.
மராத்தி மொழியில் இவர் 'கோஷ்தா சோட்டி டோங்க்ரேவடி', 'குல்மோஹர்', 'மானினி', 'அட்குலா மட்குலா' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஜீ மராத்தியில் வெளியான 'லஜ்ஜா' (Lajja) என்ற தொடரில் மனஸ்வினி தேசாய் (Manu) என்ற பாத்திரத்தில் இவர் முதன்மை நடிகையாக நடித்தார்
இந்நிலையில் நடிகை கிரிஜா ஓக் அண்மையில் அளித்த பேட்டியில் அவரிடம், “முத்தக் காட்சியில் நடிக்க மனதளவில் எப்படி தயார்படுத்திக் கொள்வீர்கள்?” என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதே கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எனது பதில் ஒன்றுதான், அது ஒரு துண்டு காகிதத்தை முத்தமிடுவது போன்றது.
எந்த உணர்ச்சியும் இருக்காது. சில நேரங்களில் நெருக்கமான காட்சியை எடுக்கும்போது, முன்னால் ஒரு கலைஞர் கூட இருக்கமாட்டார்கள். கேமரா ஸ்டாண்டைப் பார்த்து, அல்லது லைட்டிங் செய்யப் பயன்படுத்தப்படும் கருப்புத் துணியை பார்த்துக்கொண்டு காதல் வசனங்களைச் சொல்ல வேண்டும். அப்படி பல முறை நான் பேசியிருக்கிறேன்" என்றார்.