2 மனைவிகள்ஸ 6 குழந்தைகள்.. 13 பேரக்குழந்தைகள்.. யார் இந்த சூப்பர் ஸ்டார் தெரியுமா?
11 Nov,2025
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் தர்மேந்திரா. 60 ஆண்டுகள் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தனித்திறமையால் அழியா தடம் பதித்தவர் தர்மேந்திரா. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 89.
1960-ம் ஆண்டு வெளியான ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தர்மேந்திரா. இவர் நடிப்பில் வெளியான ‘ஷோலே’ படம் பெரிய அளவில் ஹிட்டடித்தால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார் தர்மேந்திரா. பல படங்களில் நடித்தவர் 60 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Ikkis’ திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று தர்மேந்திராவின் குடும்பம். கடந்த 1935-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தவர் தர்மேந்திரா. இவர் தனது 19-வது வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள். சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா தியோல், மற்றும் அஜிதா தியோல். இந்த காலக்கட்டத்தில் அவர் சினிமாவில் நுழையவில்லை.
1960-ல் சினிமாவில் நுழைந்தார். 70- 80 காலக்கட்டத்தில் நட்சத்திர நடிகர் அந்தஸ்தை பெற்றார். அப்போது 1980ல் நடிகை ஹேமாமாலினியை திருமணம் செய்துகொண்டார். ஹேமாமாலினி மூலம் அவருக்கு 2 குழந்தைகள் பிறந்தன. மொத்தம் 6 குழந்தைகள்.
தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல் பாலிவுட்டின் பிரபல நடிகர். இவர் ஆங்கிலோ - இந்திய குடும்பத்தைச் சேர்ந்த பூஜா தியோலை திருமணம் செய்துகொண்டார். சன்னி தியோல் மற்றும் பூஜாவுக்கு கரண் மற்றும் ராஜ்வீர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கரண் தியோல் தனது தோழி த்ரிஷா ஆச்சார்யாவை ஜூன் 18, 2022 அன்று மணந்தார்.
தர்மேந்திராவின் மற்றொரு மகன் பாபி தியோல். இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தவர். 1996 இல் தான்யா அஹுஜா தியோலை மணந்தார். தான்யா ஒரு தொழிலதிபர். . பாபி மற்றும் தான்யாவுக்கு ஆர்யமான் மற்றும் தரம் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
தர்மேந்திராவின் இளைய மகள் அஜிதா தியோல். இவர் சினிமாவில் நடிக்கவில்லை. மாறாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.. நிகிதா மற்றும் பிரியங்கா சவுத்ரி. தர்மேந்திராவின் மற்றொரு மகள் விஜேதா தியோல். அவர் விவேக் கில்லை மணந்தார். அவர்களுக்கு சாஹில் என்ற மகனும், பிரேர்னா என்ற மகளும் உள்ளனர்.
ஈஷா மற்றும் அஹானா தியோல் குடும்பங்கள்: ஈஷா தியோல், பாரத் தக்தானி என்பவரை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். மற்றொரு மகள் அஹானாவுக்கு ஒரு மகனும், இரட்டை மகள்களும் உள்ளனர்.