பெரிய ஹீரோக்களுக்கு தான் சிக்கலே! தியேட்டர்கள் ஓனர்கள் அதிரடி
09 Nov,2025
ஓடிடி தளங்களின் ஆதிக்கம், ரசிகர்கள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தியேட்டர்களில் கட்டணத்தை குறைக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக மதுரை, ராமநாதபுரம் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் போது ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. இதனால் ரசிகர்களை தவிர பொதுமக்கள் தியேட்டர்களுக்கு வருகை தருவது வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு குடும்பம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டுமனால், டிக்கெட் கட்டணம், பார்க்கிங், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றிற்காக குறைந்தபட்சம் 2000 ரூபாய் வேண்டும் என்பதால்,
பேமிலி ஆடியன்ஸின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
திரையரங்கு கட்டணம் மேலும், அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்கள் வந்துவிட்ட பிறகு தியேட்டரை விட வீடுகளில் படங்களை பார்த்துக் கொள்ளலாம் என மக்கள் நினைக்கிறார்கள். இதனால் பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் பிரபலமான பல திரையரங்கங்கள் மூடு விழா காண்பதும் இதனால் தான். இந்த நிலையில் தியேட்டர்களுக்கு ரசிகர்களை குறிப்பாக குடும்ப ரசிகர்களை வரவேற்கும் வகையில் அதிரடி முடிவுக்கு தயாராகி இருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.
வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அரசு நிர்ணயத்தை கட்டணத்தை மட்டுமே பெற போவதாக கூறி இருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். இன்று மதுரை ராமநாதபுரம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூட்டம் செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை ராமநாதபுரம் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை ராமநாதபுரம் சினிமா விநியோகஸ்தர் சங்கத்திற்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
டிக்கெட் விலை குறைப்பு தற்போது மல்டிபிளக்ஸ் எனப்படும் தியேட்டர்களுக்கு அரசு நிர்ணயத்தை கட்டணத்தை வசூலிக்க விநியோகஸ்தர்கள் உரிமை கொடுத்துள்ளனர். அதே வேளையில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆகையால் நவம்பர் 1ஆம் தேதி முதல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என்று தீர்க்கமான முடிவு எடுத்துள்ளனர்.
இது சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
" அரசு நிர்ணய கட்டணம் மேலும் திரையிடும் திரைப்படங்கள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 80 சதவீதம் வரை விநியோகஸ்தர்கள் தர வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. இனிமேல் அவ்வாறு 80 சதவீதம் தர முடியாது என்றும், நடிகர் ரஜினிகாந்த் விஜய், அஜித் போன்ற பிரபலங்களின் திரைப்படங்களுக்கு 70% மட்டுமே தரப்படும் எனவும், ஆங்கில திரைப்படங்களுக்கு 50 சதவீதம் மட்டுமே கட்டணம் தர முடியும் என்றும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த இரண்டு தீர்மானங்களையும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.