“நிர்வாண புகைப்படங்களை அனுப்பு” - அக்ஷய் குமார் மகளுக்கு நேர்ந்த கொடுமை.. ஷாக்கிங்
03 Oct,2025
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது மகளுக்கு நடந்த அத்துமீறல் குறித்து பகிர்ந்துகொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காவல்துறை தலைமையகத்தில் ‘சைபர் விழிப்புணர்வு 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறினார்.
அவர் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். இப்போதெல்லாம் யாரென்றே தெரியாத அந்நியர்களுடன் விளையாடும் வீடியோ கேம் ஆப்ஸ்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அப்படியான ஒரு வீடியோ கேம் விளையாட்டை என்னுடைய மகள் விளையாடிக்கொண்டிருந்தார்.
அந்த வீடியோ கேம் விளையாடும்போது, ‘நீங்கள் ஆணா? பெண்ணா?’ என மெசேஜ் வந்தது. அந்த மெசேஜுக்கு ‘பெண்’ என்று என்னுடைய மகள் பதிலளித்தார். அதற்கு உடனே, ‘உங்களுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முடியுமா?’ என எதிர் தரப்பிலிருந்து கேள்வி வந்தது.
உடனே என்னுடைய மகள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, என் மனைவியிடம் நடந்ததை கூறியிருக்கிறார். இப்படித்தான் எல்லா விஷயங்களும் தொடங்குகின்றன. இது சைபர் கிரைமின் ஒரு பகுதி. 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு நாள் ‘சைபர்’ பீரியட் என்று ஒரு வகுப்பை பள்ளிகளில் நடத்தி, அது தொடர்பான கல்வியை அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வரை நான் கேட்டுக் கொள்கிறேன்.
வெளியில் நடக்கும் குற்றங்களை விட இப்படியான சைபர் குற்றங்கள் தான் ஆபத்தானவை. இவற்றை தடுத்து நிறுத்துவது மிகவும் முக்கியம்” என்றார். 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து கல்வி போதிக்கப்பட வேண்டும் எனவும், வளர்ந்து வரும் நவீன யுகத்தில் இது அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் என்றும் அக்ஷய்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.