சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என 5 விருதுகளை வென்றது அனோரா திரைப்படம்
03 Mar,2025
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சிறந்த அனிமேஷன் பிரிவில் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF CYPRESS குறும்படம் விருதுகளை வென்றது.
சிறந்த திரைக்கதை பிரிவுகளில் அனோரா மற்றும் கான்க்ளேவ் படங்கள், ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றன
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை ‘THE SUBSTANCE’ திரைப்படம் தட்டிச் சென்றது
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘A Real Pain’ படத்திற்காக கீரன் கல்கின் வென்றார்
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘EMILIA PEREZ’ படத்திற்காக சோ சல்தானா வென்றார்
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது `Wicked’ படத்திற்காக பால் டேஸ்வெல்-க்கு அறிவிப்பு
சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘NO OTHER LAND’ வென்றது
சிறந்த ஒலி, சிறந்த காட்சி விளைவுகள் என 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை தட்டி சென்றது DUNE இரண்டாம் பாகம்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை தட்டி சென்றது I’M NOT A ROBOT
‘THE BRUTALIST’ திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் லோல் க்ராலி
THE BRUTALIST’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் அமெரிக்க நடிகர் அட்ரியன் பிராடி
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை அனோரா படத்திற்காக ஷான் பேகர் பெற்றுக் கொண்டார்
அனோரா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் மைக்கி மேடிசன்
சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என 5 விருதுகளை அனோரா திரைப்படம் வென்றது