"எனக்கு சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் படப்பிடிப்பில் என்னுடைய வசனங்களைக் கூட மறந்து விடுகிறேன்"
ஸ்வர்ணகமலம், ரிஷ்யஸ்ரிங்கன், சீதாரா மற்றும் சத்ரபதி மற்றும் பல மொழி படங்களில் நடித்தவர் நடிகை பானுப்ரியா. தனது அழகாலும், நடிப்பாலும், அசத்தல் நடனத்தாலும் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக கோலோச்சி வந்தவர்.

தனது 54 வயதில், சினிமாவில் இருந்து விலகியுள்ள பானுப்ரியா, தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். ஒரு பேட்டியில், தனது உடல்நிலை குறித்து மனம் திறந்து பேசிய அவர், கணவர் இறந்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, நினைவாற்றல் இழப்பால் தான் போராடி வருவதாக பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், "எனக்கு சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் படப்பிடிப்பில் என்னுடைய வசனங்களைக் கூட மறந்து விடுகிறேன். இந்த பிரச்னையால் இரண்டு வருடங்களாக அவதிப்பட்டு வருகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

நடிகை பானுப்ரியா சிறந்த நடிகை மட்டுமல்ல, மிகச்சிறந்த நடனக் கலைஞரும் கூட. தனது சிறு வயது முதலே நடனத்தில் சிறந்து விளங்கிய அவர், குச்சிபுடி நடனக் கலைஞர். தனது இளம் வயதிலேயே நடனத்தின் மீது கொண்ட ஆர்வம் தனக்கு சினிமாவில் மிகப்பெரிய சொத்தாக அமைந்தது என்று அவரே கூறியுள்ளார்.