தாய் மசாஜ்!பாப் பாடகி பலி! மருத்துவர்கள் சொல்வது என்ன?
10 Dec,2024
தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவர் அங்குள்ள மசாஜ் பார்லரில் கழுத்து சுளுக்கை சரி செய்ய மசாஜ் செய்து கொண்ட போது அவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் மசாஜ் என்றால் பிரபலம்! தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வோர் அங்கு மசாஜ் தெரபியை எடுக்காமல் வரமாட்டார்கள். அந்த மசாஜ் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது இந்தியாவிலும் மெட்ரோ பாலிட்டன் சிட்டிகளில் மசாஜ் தெரபி செய்யப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ளூர் மக்களே கூட இந்த தெரபியை எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் மசாஜ் தெரபி எடுத்தவர்தான் பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா ஆவார். இவருக்கு வயது 20 ஆகிறது. இவருக்கு கழுத்து, தோள் பட்டையில் வலி இருந்தது. இதனால் அக்டோபர் 5ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் மசாஜ் செய்து வலியை குறைத்துக் கொள்ள சென்றார். அப்போது கழுத்து தோள் பட்டையில் வலி குறைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து சாயதாவுக்கு கழுத்தின் பின்புறத்தில் வலி இருந்தது. இதனால் அவர் வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டார். இவருடைய கழுத்து சுளுக்கிக் கொண்டதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 6ஆம் தேதி சாயதா பதிவிட்டிருந்தார்.
பின்னர் 2 வாரங்கள் கழித்து அவர் தோள் பட்டைகளில் வீக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஏற்கெனவே சென்ற மசாஜ் பார்லருக்கே சென்ற சாயதா அங்கு தனது பிரச்சினைகளை கூறி மீண்டும் மசாஜ் செய்து கொண்டார். பின்னர் இரு வாரங்கள் கழித்து சாயதாவுக்கு கழுத்து பகுதி குனியவே முடியாத அளவுக்கு அப்படியே நின்றுவிட்டது. இதையடுத்து மீண்டும் அந்த மசாஜ் சென்டருக்கே சென்ற சாயதாவுக்கு,
வேறு ஒரு பெண் மசாஜ் செய்து விட்டாராம். இதைத் தொடர்ந்து கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் ஏற்பட்டது. அது போல் வலது காலிலும் வீக்கம் வந்துவிட்டது. அக்டோபர் 30ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு கழுத்து வலிக்காக சென்றார். அங்கிருந்து அந்த பெண் நோங்கான் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
"புதுக்கோட்டையில் கோலாகலமாக நடந்த வெற்றி வசந்த்- வைஷ்ணவி ரிசப்ஷன்.. குவிந்த விஜய் டிவி பிரபலங்கள் " இதையடுத்து சாயதாவுக்கு நவம்பர் 1 ஆம் தேதி மருந்து கொடுக்கப்பட்டது. எனினும் அவரது பிரச்சினை தீராததால் நவம்பர் 4 ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கே வந்தார். அங்கிருந்து உதான் தானி மருத்துவமனைக்கு நவம்பர் 6 முதல் 11 ஆம் தேதி வரை தங்கி சிகிச்சை பெற்றார். அப்போது அவரது காலிலும் கழுத்திலும் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கால்களை அசைக்கவே முடியவில்லை. அவரது கழுத்து பகுதியில் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கப்பட்ட போது கூட அவரது கழுத்து எலும்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்றுதான் வந்தது. இதையடுத்து அங்கு அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார். பிறகு நவம்பர் 18ஆம் தேதி கழுத்து பகுதியானது திருப்பவே முடியாமல் இருந்தது.
இதையடுத்து மீண்டும் நவ.22 ஆம் தேதி உதான் தானி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட சாயதாவுக்கு ரத்தம் விஷமாக மாறியதால் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இறந்தார். அவருடைய பிரேத பரிசோதனை முடிவுகளில் அவர் மசாஜ் செய்ததால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக வந்ததால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் , சாயதாவின் குடும்பத்தினருக்கு வாக்குறுதி அளித்தனர்.